(Reading time: 19 - 38 minutes)

ன்று போன அதே மாலிற்கு சென்று ஸ்கூட்டியை விட்டு இறங்கியதும் அங்கிருந்த செக்யூரிட்டி ஓடி வந்து நான் ஸ்கூட்டியை பார்க் பண்ணிவிட்டு சாவியை உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்றவரை, கவி, வணி இருவரும் அதிசயப் பிறவியை பார்பதுபோல் பார்த்துவைத்தனர்.

என்னமோ நாம PMW காரில் வந்து இறங்குவதைப்போல் இவர் ட்ரீட் பண்றாரே. நமக்கு இது சரிப்பட்டு வராது என்று வனியிடம் தாழ்ந்தகுரலில் கூறிய கவிழையா,

இருக்கட்டும் சார்! நாங்களே நிறுத்திகிடுவோம், என்று கூறி சென்றுவிட்டாள்

அவருக்குத்தான் தன்னிடம் பிறப்பிக்கப்பட்ட மேலிடத்து உத்தரவினை நிறைவேற்றமுடியாத பயத்துடன் அவர்கள் பின்னாடியே சென்று நிறுத்த வழி செய்துகொடுத்துச் சென்றார்.

அன்று போன அதே கடைக்கு இருவரும் போனார்கள். கடையின் முன் அன்று இருந்த தள்ளுபடி வாசகம் இன்றில்லை.

எனவே கவிழையா, வனி இன்று தள்ளுபடி கிடையாது. அதனால் இங்கு என் பட்ஜெட்டில் வாங்க முடியாது என்று நினைக்கிறேன் என்றாள் .

அதற்க்கு வனிதா, இவ்வளவுதூரம் வந்துவிட்டோம் உள்ளேபோய் பார்த்துவிடலாம் வா! என்று கூறிஅக்கடையின் உள்ளே நுழைந்தனர்.

அக்கடையின் விற்பனையாளர், உங்களுக்கு எந்தமாதிரியான கலெக்சன் வேண்டும் என்று கேட்டார்.

வுமென்ஸ் ஆபீஸ் வியர் கலெக்சன் என்றுகூறினாள். அங்கு காண்பித்த உடை அனைத்தும் கவிழையா சொன்னதுபோல் விலை தலைசுற்ற வைத்தது.

உடனே கவிழையா, சார் ! ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தால் காட்டுங்கள். இல்லையேல் நாங்கள் போகிறோம் என்று கூறிக்கொண்டிருக்கும் போது அக்கடையின் தொலைபேசி அழைத்தது.

அதல் பேசிய பின் விற்பனையாளரின் போக்கே மாறிவிட்டது. மேடம் இன்று இங்கு நீங்கள் வாங்கும் எல்லாமே ஆயிரம் ரூபாய்க்கு உள்ளேதான்

இக்கடையின் உரிமையாளரின் பிறந்தநாளிற்க்கு இன்று உங்களுக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.என்று கூறி உடைகளை அவள் முன் குவித்துவிட்டான உட்காரச்சொல்லி உபசரித்து சாப்பிட கூல்காபி வரவழைத்து கொடுத்தார்.

வனி கவியிடம், “இன்று உனக்கு அதிர்ஷ்டமான நாள் என்று காலண்டரில் போட்டிருக்கும். வீட்டிற்கு போய் பார்த்துவிட்டுச்சொல்”, என்று கூறிக்கொண்டே அக்கடையில் அவர்களுக்கு தேவையான் உடையை எடுத்து முடிக்கும்போது அங்கு மஹிந்தனும் கதிரும் வந்தனர்,

கவிழையா பணம் செலுத்தி ரசீது வாங்கும் வரை மஹிந்தனின் பார்வை கவிழையாவை பின்தொடர்ந்து கொண்டிருந்தது.

மஹிந்தன் அக்கடைக்குள் நுழையும்போதே கவிழையா பார்த்துவிட்டாள். இம்மூஞ்சியை எங்கயோ பார்த்திருக்கிறோமே! என்று நினைக்கும்போதே அன்று அவனை பாத்ததும் அதன் பின் நடந்த நிகழ்வுகளும் அவளுக்கு ஞாபகம் வந்தது. அதனால் அவள் வெறுப்பாக முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

ஆனாலும் அவன் பார்வை தன்னை தொடர்வதை அவளால் உணரமுடிந்தது. எனோ! அப்பார்வையில் அவளுக்கு நடுக்கம் பிறந்ததால், வனிதாவின் கையை இருக்கி பிடித்துக்கொண்டாள்.

ஆனால் வனிதாவோ இது எதையும் உணரவில்லை. அதனால் ஏன்டீ என் கையை இந்த அழுத்து அழுத்துர என்றாள்.

அன்னைக்கு நாம் இங்கு வரும்போது ஒருத்தன் என்னை கீழே விழாமல் பிடித்து, பின் வம்பு செய்தானே அவன் இன்று நம்மளையே முறைத்து பார்கிறான் என்றாள்.

உடனே வனிதா திரும்பி பார்த்தாள். அவள் பார்த்ததும் ஹாய்! என்றுகூறி, மஹிந்தன் கை அசைத்தான். பக்கத்தில் நின்ற கதிர் சுவாரஸ்யமாக அவர்களை வேடிக்கை பார்த்தான்.

அறிமுகம் இல்லாத ஒருவன் எதோ நீண்டகாலம் பழகியவர்களைப் பார்த்து செய்வது போல கையசைத்து ஹாய்! சொன்னவிதத்தில் யோசனையுடன் அவனைப் பார்த்த வனிதா,. கவி, அவன் நம்மளை பார்த்து ஹாய் சொல்லுறான்டீ என்றாள்.

உடனே கவிழையா, இப்படித்தான் அவனைப் பார்த்துவைப்பாயா? என கடிந்தாள்

என்னடீ கவி, நீதானே அவன் முறைக்கிறான் என்று சொன்னாய், எவன் அவன் நம்மைப்பார்த்து முறைப்பது, என்று பார்த்தேன் இது குற்றமா? என்றுகூறினாள்.

நீ பார்த்தது குற்றமில்லை. அவனுக்கு தெரியும் படி பார்த்தது தான் தப்பு. இப்பபாரு, அவன் உன்னைப் பார்த்து கையை ஆட்டி திரும்பவும் வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டான்.

.நாம் அவனை கவனிக்காதது மாதிரி சீக்கிரம் வெளியே போய்விடுவோம் என்று கூறி, ஒரு கையில் வனித்தாவை பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் உடையடங்கிய பையை எடுத்துக்கொண்டு விறுவிறு என்று வாசலை நோக்கி சென்றாள்

உடனே மஹிந்தன் ஏய் மெதுவாக நட பேபி! அன்றுபோல் திரும்ப நீ விழ நான் பிடிக்க! என்று சீன் கிரியேட் ஆகிவிடப்போகிறது என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.