அதனால் கோபத்துடன் அவன் இருக்கும் இடம் வந்தாள் உள்ளே அனுப்ப மறுத்தனர் அதனால் அவள் கோபம்கொண்டு, தான் மஹிந்தனின் வருங்கால மனைவி என்று கூறி பளார் என்று அவளை விட மறுத்தவனை அடித்துவிட்டு அதே கோபத்துடன் உள்ளே வந்தாள்
அவன் அத்தனை மெசேஜ்யையும் பார்த்தும், வராமல் இங்கு ஹாய்யாக உட்கார்ந்து இருப்பபதைப் பார்த்தவள் இதற்க்கு என்ன அர்த்தம்? என்று கேட்டாள்.
அதனால் கோபம்கொண்ட மஹிந்தன் நீ என்னிடம் கோபம் எல்லாம் படக்கூடாது, எனக்கு உன்னுடன் வெளியே எல்லாம் கைகோர்த்து வரமுடியாது. இதற்குமேல் இங்கு இருந்து சத்தம் போட்ட இந்த கல்யாணம் நடக்காது என்றுகூறினான்.
அவன் கல்யாணம் நடக்காது என்றுகூறியதும் தன்னுடைய கோபத்தை மறைத்து அவனிடம் குலைந்து பேசுவதைபோல் பாவனைச்செய்து, என்ன மஹிந்தன்! எதற்கு இத்தனை கோபமாக கல்யாணத்தை நிறுத்தனும், என்று அபசகுணமாக பேசணும், வரமுடியாத சூழ்நிலையில் நீங்கள் இருந்திருப்பீர்க்கள் என்றவள், ‘பை’ டேக் கேர் என்று கூறி அவன் கன்னத்தில் இதழ் பதித்து வெளியேறினாள்.
அவள் வெளியே செல்லும் போது அவள் முகமும் மனமும் சீற்றத்தில் கொதித்துகொண்டு இருந்தது. இக்கல்யாணம் முடியவில்லை என்றாள், தன்னை தன் நட்பு வட்டத்தில் இப்பொழுது பொறாமையாக பார்க்கும் கூட்டம், தன்னை கேலிபார்வை பார்க்கும், அதனால் இக்கல்யாணம் மட்டும் எக்காரணத்தையும் கொண்டும் நின்று விடக்கூடாது என்றும், கல்யாணம் முடிந்துடன் இதற்கெல்லாம் சேர்த்து நன்கு பழிவாங்குவேன் என்றும் நினைத்துக்கொண்டு வந்தவள்
எதிரில் வந்த கவிழையாவின் மேல் இடித்து விழப் போனவளை கவிழயா தாங்கி பிடித்தாள் அப்பொழுது கவிழையாவின் முகம் பார்த்தவளுக்கு அவள் கண்களை பார்த்தவுடன் அது தான் மஹிந்தனின் மொபைல் ஸ்கிரீனில் பார்த்த கண்கள் அவளுடையது என்பதனை உணர்ந்தவள், நின்றுகொண்டு அவளை உற்றுப்பார்த்தாள்,
இவள் அன்று மாலில் மஹிந்தனுடன் வாதாடிக்கொண்டிருந்தவள் தானே என்று கண்டுகொண்டாள். உடனே தன்னை சுதாரித்துக்கொண்டவள் இவளால் தான் மஹிந்தன் தன்னை தவிர்க்கிறான் போல என்று மனதினுள் நினைத்திக்கொண்டாள்
கவியைப் பார்த்து மன்னித்துக் கொள்ளுங்கள் நான் கவனிக்காமல் உங்கள் மேல் மோதிவிட்டேன் என்றவள், வெளியில் நட்புடன் சிரிப்பதுபோல பவனை செய்துகொண்டாள்.
கவியுடன் கைகுலுக்க தன் கரம் நீட்டி, நான் மஹிந்தனின் வருங்கால மனைவி ஐஸ்வர்யா. நீங்கள் யார் என்று அறிந்து கொள்ளலாமா? என்றுகூறினாள். கவிழையாவும் சிரித்துக்கொண்டே தான் மஹிந்தனின் செக்ரட்டரி கவிழையா, இன்றுதான் வேளையில் சேர்ந்திருக்கிறேன் என்றாள். உடனே அவள் வேலையில் சேர்ந்ததுக்கு வாழ்த்துக்கூறி “பை! வீ மீட் அகைன் சூன்” என்று கூறிச்சென்றுவிட்டாள்.
மஹிந்தன், ஐஸ்வர்யா முத்தமிட்ட கண்ணத்தை ஒரு முகச்சுளிப்புடன் துடைத்துவிட்டு, இவளுடன் ஒரு பத்துநிமிடம் இருப்பதர்க்கே நம்மால் முடியவில்லை. ஐஸ்வர்யாவை ஏன் கல்யாணம் செய்ய ஒத்துக்கொண்டோம் என்று நினைக்கையில் அவன் தலைவலிப்பது போல இருந்தது. எனவே தலையை அழுத்திப்பிடிதுக்கொண்டு உட்கார்நதான்
அப்பொழுது சிசிடி கேமரா மூலம் தன் அலுவலக அறையில் நடப்பதை பார்த்தான் அதில் ஐஸ்வர்யா vizவிளாமல் தாங்கி கவிழையா பிடித்தது முதல் நடந்த அத்தனையும் பார்த்த மஹிந்தன், ஐஸ்வர்யாவின் பேச்சில் இருந்த போலித்தன்மையை உணர்ந்தவன் எப்படி இவள் கண்டுபிடித்தாள் என்று நினைத்துக்கொண்டு தன் அருகில் இருந்த போனை பார்த்தான் அது மெஸ்சேஜ் ஒலி வந்த்தில் இயங்கிய திரையில் கவிழையாவின் கண்களை பார்த்ததும் இதை ஐஸ்வர்யா பார்த்தது நினைவு வந்தது.
ஐஸ்வர்யாவை, கவியிடம் நெருங்க விடக் கூடாது, என்று முடிவெடுத்தான். பின் போனை எடுத்து இப்பொழுது உன்னிடம் கொஞ்சம் விளையாட வருகிறேன் பேபி என்று கூறி அவ்வலுவலக அறைக்குச் சென்றான்.
அவன் உள்ளே இருந்து வருவதைக்கண்ட கவிழையா, இவன் எங்கே இங்கு வருகிறான்! என்று நினத்துக்கொண்டு அவனை யோசனையுடன் பார்த்துக்கொண்டு இருக்கையையில், எதிரில் அமர்ந்திருந்த செக்ரட்டரி எழுந்து மஹிந்தனிடம் பாஸ் கவிழையாவிடம் ஒப்பந்தத்திள் கையெழுத்து வாங்கிவிட்டேன் என்று கூறிச்சென்று அதனை மஹிந்தனிடம் கொடுத்தாள்.
அவள் பாஸ் என்றவுடன், இவன்தானா எம்.டி. மஹிந்தன். என்று குழம்பி பார்க்கும் போதே ஒப்பந்த தாள்களை வாங்கிக்கொண்டு எம் .டி மேசையில் அவன் அமர்ந்தான். குட் ஜாப் உமா என்றுகூறி உமா நீங்கள் ராமிடம் கொடுத்த பிராஜெக்ட் எந்த அளவில் முடிந்திருக்கிறது என்று பார்த்துவிட்டு வாருங்கள் என்றுகூறி அனுப்பிவைத்தான்.
அவள் வெளியே சென்றதும், அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த கவிழையாவை பார்த்து, இப்பொழுது நான் யார் என்று தெரிந்து கொண்டாயல்லவா? என்று சொல்லிமுடிக்கும் முன்பே கவிழையா எனக்கு இங்கு வேலை பார்க்க விருப்பம் இல்லை என்றுகூறி வெளியேற போகும்போது, ஒரு எட்டில் அவள் அருகில் வந்து கையை பிடித்து தடுத்த மஹிந்தனை பார்த்து கையை முதலில் விடுங்கள்? என்றுகூறி கண்களில் கோபத்துடன் பார்த்தாள்.
அவளின் கண்களை பார்த்துகொண்டே விடமுடியாது என்ன செய்வாய்? என்று மஹிந்தன் சொன்னான்.
உடனேயே மற்றொரு கையை அடிப்பதற்கு ஓங்கியதும் ஓங்கிய கையை அடிக்க விடாமல் பிடித்துகொண்டு கோபத்துடன் அவள் இருகையையும் அவள் பின்னால் கொண்டுசென்று பிடித்து தன் அருகில் அவளை இழுத்துக்கொண்டு அவள் கண்களையும் உதடுகளையும் மாற்மாறி பார்த்துக்கொண்டே மஹிந்தன் கூறினான் என்னை கோபப்படுதுவது உனக்கு நல்லதில்லை கவிழையா? என்று உறுமினான்.
அவன் கண்களின் கோபத்தையும் அவன் இருக்கிப் பிடித்ததினால் ஏற்பட்ட விலியினாலும் பயந்து அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது.
அவள் நடுங்கவும் தன்னுடைய பிடியை தளர்த்திவிட்டு தன் மேஜையின் எதிரில் உள்ள இருக்கையை காண்பித்து அதில் அவளை உட்கார் என்று சொல்லி தன் இருக்கையில் அமர்ந்தான் மஹிந்தன்.
தொடரும்
{kunena_discuss:1081}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.