(Reading time: 19 - 38 minutes)

வனின் ‘பேபி’ என்ற வார்த்தையிலேயே கோபமான கவிழையா, அவனின் உரிமையானவர்களிடம் பேசுவதை போன்ற தோரணையினால் வெகுண்ட கவிழையா, நீங்கள் யாருசார்?, என்னை எப்படி பேபி என்று கூப்பிடலாம். இதுபோன்ற பேச்சையெல்லாம் அன்று உங்களுடன் வந்தார்களே ஒரு பெண், அவளிடம் வைத்துக்கொள்ளுங்கள்

“இன்னும் ஒரு தடவை என்னிடம் இதுபோன்று நடந்துகொண்டால் பின் நான் மனுசியாக இருக்க மாட்டேன்” என்றுகூறி, வாடீ போகலாம், என்று தோழியை இழுத்துக்கொண்டு சென்றாள்.

அவள் அவ்வாறு பேசியதும் கதிருக்கு அவள் மேல் பயங்கர கோபம் வந்தது. அவனின் கோபத்தை கண்ட மஹிந்தன், கதிர் நீ டென்சன் ஆகாதே. எங்க போயிடப்போகிறாள் நம்ம கிட்டத்தானே வேலைக்கு வரப்போறா. பார்த்துக்கிடலாம் என்றுகூறியபடி மால் விட்டு வெளியே வந்து நின்றதும் அவன் காரும் வாசலுக்கு வந்தது

அவன் காரில் ஏறும் போது கவியும் வனியும் அவனை அதிர்ச்சியுடன் பார்ப்பதை பார்த்து ஒருநிமிடம் அவன் கண் பளிச்சிட்டது பின் அவன் உதடுகள் “கண்டுபிடிச்சிட்டாள்”, என்றுகூறி பின் கவியைப்பார்த்து கண்சிமிட்டிவிட்டு காரில் ஏறி சென்று விட்டான்.

வனிதா, கவி! இத்தனை நாள் நம்மை பின்தொடர்ந்த கார் இவனுடையது தான்போல என்றுகூறினாள்.

உடனே ஆமாம் வனி. அன்று நீ கூறியதுபோல் என்னை பலிவாங்க கிளம்பி வந்துட்டான் போல, எனக்கு பயமாக இருக்குது என்றாள்.

தன் தோழி பயப்படுவதை பார்த்து கவி உடனே இதை உன் அப்பாவிடம் சொல்லிவிடு என்று கூறினாள்.

அச்சச்சோ! நீ அப்பாவிடம் உளறிவிடாதே! ஏற்கனவே எனக்குக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். நான் தான் கெஞ்சி ஒரு வருடம் வேலைக்கு போக அனுமதி வாங்கயிருக்கிறேன். இப்பொழுது இதைச் சொன்னால் பயந்துபோய் வேலைக்கு அனுப்பமாட்டார்கள் கல்யாணம் பண்ணி கணவன் வீட்டிற்க்கு அனுப்பிவிடுவார்கள்.

இனிமேல் பகலில் கூட வெளியில் எங்கும் தனியாக கொஞ்சநாள் போகக்கூடாது. மஹிந்தன் சாப்ட்வேர் கம்பெனியின் பஸ் எங்கள் வீட்டில் இருந்து நடக்கும் தொலைவில் உள்ள மெயின்ரோட்டில் செல்வதை பார்த்திருக்கிறேன். அதில்தான் வேலைக்கு செல்லனும்.ஸ்கூட்டியில் செல்லக்கூடாது, என்று கூறினாள்.

ஒரு சில மாதம் அவன் கண்ணில் படாமல் இருந்தால் அவன் அவனுடைய வேலையை பார்க்க்க போய்விடப் போகிறான் என்றாள்.

அவன் பெயர் ‘மஹிந்தன் என்பதையும், அவனிடம்தான் வேலைக்குப் போகப்போகிறோம் என்பதையும் கவிழையா அறியவில்லை.......

ன்று காலை கவிழையா, “அம்மா இங்க வாங்க” வருண் என்னுடைய பேனாவை கொடுக்கமாட்டேன் என்று வம்புசெய்கிறான் என்று தன் அறையில் இருந்து கத்திக்கொண்டு இருந்தாள்.

அதற்கு பார்வதி நான் அடுப்படியில் வேலைபார்க்கவா? அல்லது உங்க ரெண்டுபேருக்கும் வழக்கு தீர்க்கவா? என்றுகூறிகொண்டு இருக்கும்போது வருண் உன்னால் என்னிடம் பிடுங்க முடிந்தால் பிடிங்கிக்கொள் என்று கூறிக்கொண்டு முன் அறைக்கு ஓடி வந்தான்

அவனைதுரத்திக்கொண்டு வந்த கவி அவன் கையில் இருந்த பேனாவினை பறிக்க பேனா மூடி மட்டும் கவியின் கையில் இருந்தது பேனா கீழே விழுந்துவிட்டது.

அப்பொழுது, இங்க என்ன சண்டை? என்று கேட்டுக்கொண்டு வந்த ஈஸவரன் கீழே விழுந்த பேனாவை எடுத்தார். அப்பேனாவின் முனி முறிந்திருந்தது.

அதைப்பார்த்து கவலையோடு கவிழையா இன்று முதல்நாள் நான் வேலையில் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வாங்கிய புதுப்பேனா உடைந்துவிட்டது என்றாள்.

அதனை கேட்ட பார்வதிக்கு ஏனோ அது அபசகுனமாகப்பட்டது.

வருண் “சாரி”கவி இப்படி உடையும் என்று நான் நினைக்கவில்லை என்றான்.

ஈஸவரன், அவன் தான் ஸாரி கேட்டுவிட்டானே கவி, பிறகு நீ போகும் போது வேற புதிய பேனாவை வாங்கிக்கொள்ளலாம் என்றார்.

ஈஸவரனிடம், இன்று முதல்நாள் கவி வேலைக்குச் செல்வதால் நீங்களும் கூட சென்று அவள் வேலை பார்க்கும் இடத்தைப்பார்த்து வாருங்கள் எனச்சொன்னாள் பார்வதி.

கவி, “நீ செல்வதர்க்குமுன் விளக்கேற்றி சாமிகும்பிட மறக்காதே”, என்று கூறினாள் பார்வதி.

ஈஸவரன் தன் மகளுடன் அங்கிருந்த ரிசெப்சனில் சென்றதும். அங்கிருதவள் “குட்மார்னிங் வாட் யு வான்ட்” என்று கேட்டதும் கவிழையா தன் பணி நியமன உத்தரவை காண்பித்தாள்

அதை அங்கிருந்த தொலைபேசிமூலம் உறுதிசெய்துவிட்டு கவிழையாவை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தாள்.

கவிழையா தன் தந்தையிடம் விடை பெற, அப்பா! என்று அழைத்தாள். அவர் அவள் அழைப்பதை கவனிக்காமல் அந்த கட்டிடத்தின் பிரமாண்டத்தையும் அங்கு பணிபுரியும் மற்ற பணியாளர்களின் நாகரிகமானத் தோற்றத்தையும் அவ்வலுவலகத்தின் தூய்மையையும் பார்த்து தன் மகளும் அங்கு வேலைபார்ப்பதில் பெருமை அடைந்தார்.

திரும்பவும், அப்பா! என்ற அழைப்பில் தன் மகளைப் பார்த்து “வாழ்த்து கூறி” தான் வாங்கிய புது பேனாவை அவளிடம் கொடுத்து வெளியேறினார்.

கவிழையா ஆர்வமும் சிறிது தடுமாற்றத்துடனும் உள் நுழையும் போது அவளை எதிர்கொண்டு அழைத்து செல்ல வந்த பிரசாத்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.