(Reading time: 8 - 16 minutes)

17. பைராகி - சகி

bhairagi

"வள் எவ்வளவு அழகு?தேவலோக கன்னிகைப் போல,அவளின் எழில் முகம் என்னை இம்சிக்கின்றது..."-கண்களை இறுக மூடினார் அரசர்.

"என்ன நேர்ந்தது ஐயனே!"

"ஒன்றுமில்லை...ஆதித்யனைக் குறித்து சிந்திக்கின்றேன்.இனி அவனை உயிரோடு விடுவது உசிதமல்ல..!"-ஒரு நொடி திடுக்கிட்டுப் போனாள் சக்கரவர்த்தினி.

"நாளைய தினம் அவனது மரண தினமாக அமைய வேண்டும்!எனை எதிர்ப்பவன் எவனாயினும்,அது சிவனாயினும் மண்ணில் சரிந்தே தீர வேண்டும்.இன்றைய இரவு அவனது குருதி நிலத்திற்கு உரமாக வேண்டும்!"-கோபமாக கூறிவிட்டு அதற்கான ஆயத்தங்களை ஆற்ற கிளம்பினார் அவர்.

காளிங்க இளவரசியின் மனம் துணுக்குற்றது.என்ன இருந்தாலும் அவள் மனம் விரும்பியவன் அல்லவா அவன்!!எனினும்,அவள் அத்தீஞ்செயலை தடுக்க எப்பணியும் ஆற்றவில்லை.

"எனது பணி யாத்ரீகையை நிர்மூலமாக்குவதே..!ஆதித்யரை ரட்சிப்பதல்ல..!பைரவ வம்சம் மண்ணோடு மண்ணாக வேண்டும்!"-உறுதிக்கொண்டு யாத்ரீகை இருக்கும் இடம் நோக்கி புறப்பட்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

வனத்தில் தெய்வீகம் பொருந்திய சிவலிங்கத்தை உளிக்கொண்டு தன் கரத்தால் செதுக்கி கொண்டிருந்தார் ஆதித்யர்.சற்று தொலைவில் குதிரையின் குளம்படி சப்தம் கேட்டது.

செவிகளை கூர்மையாக்கினார் அவர்.

"தேஜா!"-விருட்சத்தின் மறைவிலிருந்து தேஜா வெளி வந்தான்.அவன் கண்களில் கண்ணீர்!!

ராஜக்களையோடு தரிசித்த தன் சுவாமியை யாத்ரீகனாய் பார்த்ததால் இருக்கலாம்!உயிராய் பிறந்த அனைத்திற்கும் இறைவன் உணர்வுகளை பாகுபாடின்றி அளித்திருக்கிறானே..!!

ஆதித்யர் உளியை வைத்துவிட்டு தேஜாவின் அருகே வந்தார்.

"இங்கு ஏன் வந்தாய் மித்ரா!அரண்மனை நோக்கி செல்..!"-அது மாட்டேன் என்று தலையசைத்தது.

இளவரசர் பீறிட்டு வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டார்.

"நீ என்னோடு இருப்பது உசிதமாகாது!"-அது சட்டென அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தது.

"தேஜா!"-பாவம்!அந்த அஸ்வத்திற்கு வாய் இருந்தால் கதறி தீர்த்திருக்கும்!ஆனால்,அதற்கு வாய்ப்பில்லை.இறைவன் அவ்வாய்ப்பினை அதற்கு நல்கவில்லை.வஞ்சகம் பிடித்த இறைவன்!!!

"நீ என்னோடு இருக்க விருப்பம் கொண்டாயா?"

"..............."

"என்னோடு வசிப்பது கடினமாகும்!"-தேஜா தன் பிடிவாதத்தை தளர்த்துவதாய் இல்லை.

ஆதித்யருக்கும் அவனை துரத்த உபாயம் புலப்படவில்லை.

வேறு வழியின்றி,அவன் மீதிருந்த ஆபரணங்களை எல்லாம் கழற்றினார்.நதியின் அருகே சென்று,

"யாத்ரீகர்களின் இச்சைகளை அறுத்து இறைவனை அடைய மார்க்கம் உருவாக்கும் நதி தாயே..!இந்த யாத்ரீகனுக்கு தீக்ஷை நல்கிய காரணத்தினால் இனி நீ "பைராகி!"என்றழைக்கப்படுவாய்!"-என்றப்படி ஆபரணங்களை நதியில் விட்டார்.நதியின் நீர் கொண்டு தேஜாவின் திலகத்தை அழித்தார்.அது தனது எஜமானரை தழுவிக்கொண்டது.

ரண்மனையில்...

"சேனாதிபதி கன்னிகையே!"-கர்வத்தோடு ஒலித்தது அவளது குரல்.

யாத்ரீகை ஈசனின் முன் மூடியிருந்த விழிகளை திறக்கவில்லை.

சக்கரவர்த்தினி கண்களை காட்ட இரு தாதியர் அவளை நோக்கி சென்றனர்.

"நில்லுங்கள்...!"-ஆக்ரோஷமாக ஒலித்தது காத்யாயினியாரின் குரல்!!

"எவரது அனுமதி வாங்கி இவ்வறையில் பிரவேசித்தீர்கள்?"

"அரசியார் அவரது புத்தம் புதிய தாதியை சேவகம் செய்ய அழைத்திருக்கிறார் ராஜமாதா!"

"இங்கு யாரும் யாருக்கும் தாதி அல்ல..!"

"ராஜமாதா!"-இடைமறித்தார் மகாராணி.

"................"

"நான் பைரவத்தின் சக்கரவர்த்தினி ஆவேன்!எனது இச்சைக்கு இங்குள்ளவர்கள் அடிப்பணிந்தே தீர வேண்டும்!"

"பேதையே பிரக்யாயினி!நான் இப்பைரவத்தின் ராஜமாதா ஆவேன்!மன்னரையும் அடிபணிய செய்யும் அதிகாரம் இக்காசி நகர கன்னிகைக்கு உண்டு!"

"............."

"ஆணவம் கொண்டு பாவச்செயல் புரியாதே!நீ கொண்ட பதவி அக்கன்னிகை உனக்களித்த யாசகம் என்பதையும்!உன்னவர் கொண்ட மன்னவர் பதவி என் புதல்வன் அளித்த பிக்ஷை என்பதையும் மறவ வேண்டாம்!"

"ராஜமாதா..!"

"மௌனமாய் இரு!!இனி ஒரு சொல் உதிர்த்தாலும் பேசும் நாவினை அறுத்தெரிவேன்!"-தாதியரின் முன்னிலையில் அவர் கூறவும்,அவள் கோபமாக திரும்பி நடந்தாள்.அனைவரும் சென்றதும்,கண்ணீரோடு யாத்ரீகையை திரும்பி பார்த்தார் ராஜமாதா!!அவள் இன்னும் விழி திறக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.