(Reading time: 8 - 16 minutes)

ன்றிரவு....

மது மயக்கத்தில் யாத்ரீகையின் அறையை அடைந்தான் குருக்ஷேத்திரன்.

அவள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தாள்.

"சுந்தரி...!"

"யுகேந்திரஹாரம்!"-ஓம்காரமாய் ஒலித்தது அவளது குரல்.

"கன்னிகையே..!"

"யுகேந்திரஹாரம்!"

"விழிகள் திறப்பாய் பெண்ணே...!"

"யுகேந்திரஹாரம்!"-ஆக்ரோஷமானவன் அவளருகே சென்றான்.தவத்தில் இருந்த அவளது கரத்தை பற்றினான்.அவள் கோபத்தோடு நிமிர்ந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"அழைப்பது செவிகள் விழவில்லையா உனக்கு?"

"எனை விடு துஷ்டனே..!"

"இவ்வாறு தவநிலை பூண்டு எதற்காக உன் வதனத்தை வாட வைக்கிறாய்?"

"எனை ஸ்பரிசிக்காதே...!"-யாத்ரீகை அவனது கரத்தை உதறி விலகி சென்றாள்.

அவனை நோக்கி தனது ஆள் விரலை உயர்த்தி அவனை அருகே வர வேண்டாம் என்றாள்.

"திவ்யத்துவம் பொருந்திய தேஜஸ்!உனை முதலில் கண்டிருப்பேன் என்றால்,நீயே என் பட்டமகிஷி ஆகிருப்பாய்...!தவக்கோலம் பூண்ட யாத்ரீகனை மனதில் வைத்து உனக்கான வாய்ப்பினை தவற விடாதே!என் அருகே வா!"

"மூடனே குருக்ஷேத்திரா!நான் சீர் குணங்கள் கொண்ட சேனாதிபதியின் புதல்வி!மோக்ஷம் மற்றும் மரணத்தை நல்கும் இறைவன் சங்கர நாராயணனின் பக்தை ஆவேன்!புனிதத்தில் அக்னியை போன்றவள் நான்!எனை அடைய முயற்சிக்கும் உன் எண்ணம் ஈடேறாது!சாம்பலாகவிடுவாய்!"-அவன் திகைத்துப் போய் நிற்க,அவள் அவ்வறையை விட்டு வெளியேற முயன்றாள்.அதற்குள் அவளது கேசத்தை பற்றி இழுத்தார் மன்னர்.

"எனை விடு!"

"வா என்னோடு!"-அவள் கரத்தை பிடித்து இழுத்தான் அவன்.

"தோ முடிந்தது!இறைவனின் நெற்றிக்கண்ணை வடித்தாகி விட்டோம்!"-என்றப்படி அவரது நெற்றிக்கண்ணை வெண் வஸ்திரத்தை கொண்டு ஆதித்யர் மறைக்க,அதற்குள் அவரது முதுகை துளைத்து உள்ளிறங்கியது கூறிய அம்பொன்று!!நஞ்சு தடவிய அம்பு அது!!ஆதித்யர் அதிர்ந்துப் போய் திரும்ப,அவரது மார்பினை துளைத்தது அடுத்த அம்பு!!தேஜா ஓலமிட்டப்படி அவர் மீது சாய,அவரை துளைக்க வந்த அடுத்த அம்பு தேஜாவை கிழித்தது.

"தேஜா!"-ஆதித்யர் பதறி போனார்.

நயவஞ்சகம் கொண்ட குருக்ஷேத்திரன் தன் சேவகனை விட்டு ஆதித்யரின் முதுகில் குத்த வைத்தான்!!

எனினும்,ஆதித்யர் அந்த சேவகனை எதிர்த்து தாக்க முனயவில்லை.அவன் அங்கிருந்து இருளில் ஓடி மறைந்தான்.

"தேஜா!"-என்றப்படி அவனது காயத்தை பார்த்தார் அவர்.ஆதித்யர் கண்ணீரோடு தன் அஸ்வத்தின் முகத்தை வருடினார்.

"நான் என்ன செய்வேன்?எவ்வாறு உனை ரட்சிப்பேன்!"-விதி அவர் நினைவினில் நாகவில்லம் குறித்த நினைவையும் கொண்டு வரவில்லை.அது இறுதியாக தன் எஜமானரை தழுவிக்கொண்டு அவரது காயத்தை சுட்டியது.

"எனை குறித்து கவலைக்கொள்ளாதே!உடனடியாக ரிஷி போதரின் ஆசிரமம் நோக்கி செல்!"

"..............."

"அவர் நிச்சயம்....உன்...காயங்களுக்கு...மருந்தளிப்பார்...!"-திணறியது அவர் குரல்.

"..............."

"இறுதியாக உதவி ஒன்று யாசிக்கிறேன்!புரிவாயா??"

"................."-ஆதித்யர் பாறையின் மறைவில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார்.

"இதை போதரின் சரணங்களில் சமர்ப்பித்து விடு!

"................"

"செல் இங்கிருந்து..!"-ஆதித்யர் ஆணையிட்டார்.அஸ்வம் உடனடியாக அவ்விடம் நீங்கி புறப்பட்டது.இறைவனை நோக்கிய வண்ணம் மண்ணில் சரிந்தான் அந்த யாத்ரீகன்!!!

"னை விடு!"-எந்த இறைவனை நிதம் பகல் வணங்கினாளோ!அதே இறைவன் முன் யாத்ரீகை தள்ளப்பட்டாள்.

"பவித்ரத்தில் அக்னியை போன்றவளா நீ?எனில்,அந்த அக்னியை கொண்டு எனை பஸ்பமாக்கி காட்டு!"

"..............."

"ஒரு நாழிகை அவகாசம் அளிக்கின்றேன்!அதற்குள் உன் முடிவை விடுத்து,பட்டாடை உடுத்து!"-என்றவன் அங்கிருந்து விலகினான்.

யாத்ரீகையின் கண்கள் கோபமாக இறைவனை நோக்கின.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.