(Reading time: 8 - 16 minutes)

"ன்னும் எத்தனை சோதனைகளை மீதம் வைத்துள்ளீர்கள்??நிதம் பகல் தம்மை மனதில் எண்ணி பூஜித்த எனக்கு தாம் வழங்கும் ஆசியா இது?

தாம் என்றும் தவநிலையிலே அமருங்கள்....தம்மால் தமது பக்தையை ரட்சிக்க இயலாதல்லவா??"

".................."

"என் கண்ணீருக்கு மதிப்பென்று ஒன்று உள்ளதென்றால் இக்கணமே எனக்கு மரணத்தை பரிசளியுங்கள்!!!நான் அனுபவிக்கும் நிந்தனையில் இருந்து எனக்கு முக்தி நல்குங்கள் இறைவா!"-கல்மனமும் கரையும் வண்ணம் அழுதாள்.அவள் கண்ணீர் இறைவனையும் கரைத்திருக்க தான் வேண்டும்...அவர் சிரத்தில் இருந்த தாமரை மலர் கீழே இருந்த விளக்கினில் விழ,அதிலிருந்த திரி நகர்ந்து இரண்டு நெருப்புப்பொறிகள் யாத்ரீகையின் வஸ்திரத்தில் தெறித்து,சட்டென அவளை அக்னி தேவன் ஆட்கொள்ள வழிவகை செய்தது.கரம் குவிந்த நிலையில் பற்றி எரியும் அக்னியின் மடி சேர்ந்தாள் யாத்ரீகை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"மகளே...!"-யாத்ரீகையை அக்னி தேவன் முழுதும் தனதாக்கிய நிலையில் வந்து சேர்ந்தார் ராஜமாதா.

எரியும் அக்னியில் பிராணன் சரீரம் விட்டு விடுதலை பெற,யாத்ரீகையின் உடல் மண்ணில் சரிந்தது.அவள் விரும்பிய வண்ணம் அவளது அழகின் சுவடுகள் மனம் கவர்ந்தவனை தவிர வேறு எவனுக்கு விருந்தாகாமல் அவள் வைராக்கியம் ரட்சித்தது.

எரியும் அந்த பெண் தீயின் முன் கதறியப்படி மண்டியிட்டார் ராஜமாதா.

"என் செய்வேன் நான்??எவ்வளவு பாவங்களை ஆற்றி உள்ளேன்!இறைவா!ஏன் இந்த அனர்த்தம்?எதற்காக என் பிள்ளைகளை பிரித்தாய்?இவ்வாறு ஒரு பாவத்தை இழைத்தாய்?நிதம் பகல் ஆராதித்தோமே...!இது தான் உன் அனுக்கிரகம் அல்லவா?இதுவே நீ வழங்கும் ஆசி அல்லவா!இப்போது உரைக்கிறேன் கேள்..!எந்த பவித்ரத்தின் உச்சத்தை அக்னிக்கு நீ தாரை வார்த்தாயோ!அந்த பவித்ர அக்னி மீண்டும் உயிர்த்தெழுந்து உன்னை வணங்கும்வரை இம்மண்ணில் உனக்கு வந்தனை என்பது நிகழாமல் போகட்டும்!இது எனது சாபமாகும்! காசி நகர கன்னிகை வழங்கும் சாபம்!"

டிப்பட்ட காயத்துடனே ரத்தம் சிந்தியவண்ணம் ஓடிய தேஜா ஓரடத்தில் முடியாமல் தள்ளாடினான்.நஞ்சானது அவன் உடல் முழுதும் பரவி இருந்தது.

மயக்கம் விழிகளை மூட பார்க்க,அவனுக்கு தன் பிரணனை காப்பதை காட்டிலும் தன் சுவாமியின் ஆணையை நிறைவேற்றுவதே தலையாய கடமையாய் போனது!!

ஆனால்,அவனால் ஓரடி கூட எடுத்து வைக்க இயலவில்லை.திரும்பி பைராகி நதியை பார்த்தவன்,அப்புத்தகத்தை பைராகியில் தள்ளினான்.

இனி அனைத்தையும் தாய் பைராகி பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையில் மண்ணில் சரிந்தது அந்த அஸ்வம்!!

ரண்மனையில்...

யாத்ரீகையின் துர்மரணம் குருக்ஷேத்திரனை பலமாக வாட்டியது.அதை விட அவர் தாய் அவனுக்கு வழங்கிய சாபம்!!

"துஷ்டனே குருக்ஷேத்திரா!எந்த கன்னிகையின் மானத்தை களங்கப்படுத்த எண்ணினாயோ!நிச்சயம் இப்பிறப்பிலோ,இனி வரும் பிறப்பிலோ அவளே உனது மரணதேவியாக மாறுவாள்!இது தாய் மனம் உனக்களிக்கும் சாபம்!"

-அதை எண்ணியப்படி மதுவை தொண்டையில் சரித்து கொண்டான்.

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:969}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.