(Reading time: 7 - 14 minutes)

18. பைராகி - சகி

bhairagi

பித்த தன் அன்னையின் கோபமே குருக்ஷேத்திரனின உடல்நிலையை அடிமட்டத்திற்கு கொண்டு சென்றது.உயிர் இருந்த நிலையிலும் பிணமாக வாழ்ந்தவனின் நடவடிக்கைகள் யாதும் ஒரு பைத்தியக்காரனை போல நிலை பிழறியது.எங்கு பார்த்தாலும் யாத்ரீகையின் உக்கிர முகம்!!கனவிலும்,அன்று மகிஷனை அழித்த ருத்ர கோலத்தில் மாதா மகிஷ மர்த்தினிக்கு பதில் யாத்ரீகையின் முகம்!!உணவை ஏற்க மறந்தான்.உறக்கத்தை ஏற்க மறந்தான்.ஒருநாள்...

மன அழுத்தம் அதிகரிக்க தனது வாளை எடுத்து தன் நெஞ்சில் சொறுகி மண்ணில் சாய்ந்தான் அவன்.அவன் மரணத்திற்கு பின் அரசியாரின் பதவி ராஜமாதாவால் பறிக்கப்பட்டு பிரஜைகளில் ஸ்ரேஷ்ட்ரன் ஒருவன் மன்னனாக தெரிவுப்பட்டு நன்முறை ஆட்சி நிகழ்ந்தது!!ஆனால்,அன்று ஈசனின் மேல் படிந்த சாபத்தை அவர் ஏற்றார் போலும்!!யார் ஒருவர் ஈசனை அம்மண்ணில் வழிப்படுகிறார்களோ அவர்களின் இல்லத்தில் ஏதேனும் துர் சம்பவம் நிகழ சைவ வழிபாடே அற்று போனது அந்தப்பூமி!!பின்,ராகவால் இருந்த ஆலயமும் அவன் அகங்காரத்தால் மூடப்பட்டது.

அம்மண்ணில் மாண்டுப்போன சகாப்தம் ஒன்று அச்சாபத்தை மீறி இறை வழிப்பாட்டை இன்று தொடர்கிறது!!இதனால்..விளையப்போவது என்ன??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ழக்கம் போல் இறை வழிப்பாட்டில் தன்னை தொலைத்திருந்தாள் யாத்ரா.காலக்கெடு முடிய இன்னும் 1 வாரமே உள்ளது.மனதளவில் அச்சம் உச்சத்தைத் தொட்டது.

"யாத்ரா!"-புத்தம் புது விருந்தினரின் சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.

"என்னம்மா மகேஷ்வர்கிட்ட என்ன வேண்டிட்டு இருக்க?"-பைராகியின் கேள்விக்கு மெல்ல புன்னகை பூத்தாள் அவள்.

"உங்கக்கிட்ட தான் சொன்னேனே!இன்னும் 1 வாரம் தான்மா இருக்கு!"

"உன் வேண்டுதலை அவர் ஏற்க மாட்டேன்னா சொல்ல போறாரு?"

"இருந்தாலும் ஒருவித பயம்!எங்கே அவரை மறுபடியும் பிரிந்திட போறோம்னு!"-அவள் அறியாமல் உதிர்த்த மறுபடியும் என்ற வார்த்தையை குறித்துக்கொண்டார் பைராகி.

"கடைசி நாள் சிவராத்திரியில வருது போல!"

"ஆமாம்மா!"

"மகத்துவமான நாள்!அன்னிக்கு ராத்திரி இறைவனை வழிப்படு!என்ன தடங்கல் வந்தாலும் முக்கியமா அந்த நாளை மறக்க வேணாம் சரியா?"

"சரிங்கம்மா!"

"சீக்கிரமே!நல்ல செய்தி நடக்கப்போகுது!உன் விருப்பம் அவசியம் நிறைவேறும்!"

"நன்றிம்மா!"

"எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு!போயிட்டு வந்துடுறேன்மா!"

"சரிங்கம்மா!"-பைராகி தான் வந்த பணியை ஆற்ற புறப்பட்டார்.

ன்று யாத்ராவும்,ராகவும் சந்தித்த குளம் அது!!!

அந்தக்குளக்கரையில் நின்றிருந்தான் அவன்.

"செய்த பாவத்துக்கு பலனை ஏற்க போறீயா?இல்லை...மறுபடியும் பாவம் செய்து அழிவை தேட போறீயா?"-அவரது குரலில் கலைந்தவன் திரும்பினான்.அவன் பார்வை சுருங்கியது.

"யார் நீ?"

"பைராகி..!"

"பைராகியா?"

"ம்...கடைசியா உன்னை எச்சரிககை பண்ண வந்திருக்கேன்!"

"எச்சரிக்கையா?ஏ...யார்கிட்ட என்ன பேசுற நீ?"-என்று அவரது கைகளை இறுகப் பற்றினான் அவன்.சற்றும் தாமதிக்காமல் அவன் கரத்தை உதறியவர் அவனது கரத்தை பலமாக இறுக்கினார்.

"மூடனே!யாரிடம் நீ இப்பணி ஆற்றுகிறாய்?"-அவன் குழம்பிப்போய் அவரை பார்க்க,

"என் நேத்திரங்களை உற்றுப் பார்!"-என்றார்.அவன் கண்கள் தானாக அவர் விழிகளை நோக்கின.அதில் அகண்ட பிரபஞ்சமே தெரிந்தது.கடந்தக்கால நினைவுகள் யாதும் அவர் விழிகளில் தெரிய,அக்னிப் பிழம்பு ஒன்று அவர் கண்களில் படர அச்சத்தில் பின்னால் நகர்ந்தான் அவன்.

"உன் மரணத்தூதாய் வந்திருக்கிறேன் குருக்ஷேத்திரா!இனி,உன்னால் ஈசனின் பார்வையிலிருந்து தப்ப இயலாது!"

"................"

"கடந்த காலத்தை உனக்கு நினைவுப்படுத்தவே இங்கு வந்தேன்!இனி, உன் ரத்தத்தினால் இப்பூமி சுத்தமாகும் நாள் நோக்கி காத்திருப்பேன்!"-என்றவர் சட்டென அங்கிருந்து மறைந்துப்போனார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் தாழ்ந்திருந்த அவன் சிரம் நிமிர்ந்தது,

"ஆதித்ய வர்மா!"-என்ற பெயரை உச்சரித்தப்படி!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.