(Reading time: 7 - 14 minutes)

மாடியில் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள் யாத்ரா.

"ம்கூம்..!"-என்னும் குரல் கேட்டு திரும்பினாள்.

"என்ன?"

"என்ன பண்ணிட்டு இருக்க செல்லம்?"

"தூங்கிட்டு இருக்கேன்!"

"ஓ...தூங்கு!தூங்கு!"

"இப்போ என்ன வேணும்உங்களுக்கு?"

"அது...ஒண்ணு வேணும்!"-அவள் தனக்குள்ளே புன்னகைத்துக் கொண்டாள்.

"ஓ..ஒண்ணு என்ன?பத்துக்கூட தரலாமே!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"ஐயோ!சூப்பர் சூப்பர்!எங்கே கொடு!"-என்று அவளை நோக்கி தன் கன்னத்தை காண்பித்தான் அவன்.

"நான் அடியை சொன்னேன்!"

"எது?"

"பின்ன என்ன?ஒரு நேரங்காலம் இல்லை உங்களுக்கு?"

"லவ் பண்றதுக்கு எதுக்குடி நேரம்,காலம் எல்லாம்?"

"இது லவ்வா?"

"இல்லை...ரொமான்ஸ்!"

"முதல்ல கீழே போங்க!"

"முடியாது!முடியாது!"

"குழந்தையா நீங்க?"

"நீதான் குழந்தையை விட மோசமா பண்ற!குழந்தையாவது ஒரு சாக்லெட் வாங்கிக் கொடுத்தா கொடுத்துடும்!உன்கிட்ட கெஞ்ச வேண்டியதா இருக்கே!"-அவள் முகம் சிவந்துப்போனது.

"கொடுக்க முடியுமா?முடியாதா?"

"முடியாதுன்னு சொன்னா?"

"நானே எடுத்துப்பேன்!"

"அப்போ எடுத்துக்கோங்க!"-என்றவளை அதிர்ச்சியாக பார்த்தான் அவன்.யாத்ரா தன் விழிகளை மூடிக்கொண்டாள்.அவளது செய்கை அவன் மனதின் ஆசைகளை எல்லாம் தீர்த்துவிட,காதலோடு அவள் நெற்றியில் முத்தமிட்டான் ஆதித்யா.

அழகிய நதியில் மொட்டவிழும் தாமரையின் இலையின் ரகசியத்தை அறிவீரா??தாமரை இலையில் நதி நீரானது ஒட்டவே ஒட்டாது!!ஆனால்,அத்தாமரை வளர அஸ்திவாரமே நதிதான்.நதிக்கும்,தாமரைக்கும் இடையேயான பந்தம் கண்ணியம் கொண்டதாகும்!!இடைவெளிவிட்டு பழகும் பந்தத்தின் சுவை பவித்ரமானதாகும்!!

"ம்கூம்...!"-என்ற வேறு ஒருவரின் குரல் அவர்களின் நிலையை கலைக்க,திடுக்கிட்டு விலகினர் இருவரும்!!!

"தொந்தரவு பண்ணிட்டேனா?"-என்றப்படி புன்னகைத்தார் பைராகி.

"அதெல்லாம் இல்லைம்மா!"-என்றப்படி அசடு வழிந்தான் ஆதித்யா.

"என்னம்மா வேணும்?"

"நான் என் இடத்துக்கு திரும்பி போறேன்பா!"-என்றதும் இருவரும் திடுக்கிட்டனர்.

"எ...என்ன?ஏன்மா?"

"வந்த வேலை முடிந்தது!"

"ஆனா,நீங்க...கோயில் திறக்கிற வரைக்கும் இருப்பேன்னு சொன்னீங்க?"-பாவமாய் கேட்டாள் யாத்ரா.

"சொன்னேன்!நிச்சயம் அன்னிக்கு வருவேன்!இப்போ எனக்கு அவசியம் போகணும்மா!"

"ஆனா..."

"சீக்கிரமே திரும்பி வருவேன்!"-என்றவர்,மனதுள்ளே,

"வேறு ரூபத்தில்!"என்றார்.

"சரிங்கம்மா!"

"அப்போ நான் வரேன்!"

"வாங்கம்மா!"-இருவரும் அவரை வழியனுப்பி வந்தனர்.ஆதித்யாவின் முகத்தில் ஒருவித திருப்தி!!அன்பு!!நன்றி!!

யாத்ரா அமைதியாக சென்றுவிட,மாடியில் ஏறியவன் பைராகி நதியை பார்த்தான்.அங்கு திரும்பி அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தார் அவர்.இரு கரத்தை கூப்பி நின்றான்.

புன்னகைத்தப்படியே திரும்பியவரின் சரீரம்,தண்ணீராய் மாறி நதியோடு ஐக்கியமானது.

நாட்கள் கடந்தன...

"நன்றாக கேள்!எந்த பெண்ணின் மானதிற்கு பங்கம் விளைவிக்க நீ எண்ணம் கொண்டாயோ.... அக்கன்னிகையே இப்பிறப்பிலோ இனி வரும் பிறப்பிலோ!உன் மரணதேவியாக மாறுவாள்!"-இச்சொற்களை நினைவு கூர்ந்தவன்,கோபத்தோடு நிலைக்கண்ணாடியை குத்தி உடைத்தான்.

"அன்று நடந்த அதே தவறு மீண்டும் நிகழ அனுமதிக்க மாட்டேன்!எனை மூடனக்கி என் மூலமாகவே என் உயிரை பறித்தவளை துடிக்க துடிக்க என் கரத்தால் கொல்ல வேண்டும்!அவளுக்கு ரட்சகனாய் விளங்கும் அந்த ஆதித்யனை அணு அணுவாய் வதைக்க வேண்டும்!"

"நாளைய இரவு!இருவரும் எமலோகம் அடைய வேண்டும்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.