(Reading time: 8 - 16 minutes)

16. பைராகி - சகி

bhairagi

"ம்...!ராஜாதி ராஜாய!தேவேந்திரி ரூபாய!குபேர மூர்த்தாய!மஹாராஜாய வித்மஹே..!!'-பண்டிதர்கள் ஆயிரம் பேர் கூடி மந்திரத்தை உச்சரித்தனர்.

விவாஹம் முடிந்த கையோடு,குருக்ஷேத்திரனுக்கு பட்டாபிஷேக ஏற்பாடும் நிகழ்ந்த வண்ணமிருந்தது.

அங்கே....

"ஓம்...!நமஸ்தே ஹஸ்து பகவன் விஷ்வேஷ் வராய,மஹாதேவாய,த்ரம்ஹகாய, திருப்புராந்தகாய,த்ரிகாக்னி காலாய,காலாக்னி ருத்ராய,நீலக்கண்டாய,மிருத்யுன்ஜெயாய,சர்வேஷ்வராய,சதாசிவாய,ஸ்ரீமன் மஹாதேவாய நமஹ...!"-(பாவ கர்மங்கள் நீங்க பாடப்படும் மந்திரம் இது!)வேதியர்கள் பலர் நின்று இம்மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தனர்.நதிக்கரையில் கண்ணீரோடு நின்றிருந்தார் காத்யாயினி தேவியார்.

ஊரே அரண்மனையில் திரண்டிருந்தது.

"சகி!சகி!"-இருள் மண்டிய அறையில் தனித்திருந்த யாத்ரீகையை காண வந்திருந்தள் பிருந்தா.

"சென்றுவிடு பிருந்தா!நான் யாரின் வதனத்தையும் காண விழையவில்லை.."

"அவசர செய்தி கொணர்ந்தேன் சகி!நீ இளவரசரின் பால் வருத்தம் கொள்வது உசிதமாகாது!"

"இளவரசரை குறித்து  உரையாட உகந்தவள் நானல்ல!!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"பேதையாக உரையாடாதே!நிகழ்ந்த நிகழ்வினை செவிமடுத்து கேள்!மாதா மித்திரையின் வேண்டுதலுக்கு இணங்கி இளவரசர் நதிக்கரையில் துறவறம் மேற்கொள்ள ஆயத்தமாகிறார்!"-யாத்ரீகை திடுக்கிட்டு போனாள்.

"நீ கூறுவதன் பொருள் என்ன?இளவரசர் ஏன் அவ்வாறு ஒரு பணி ஆற்ற வேண்டும்?"-பிருந்தா அனைத்து நிகழ்வையும் சுருங்க கூறினாள்.

"இல்லை....அவ்வாறு ஒன்று நிகழக் கூடாது!எவ்வாறு என் சுவாமியை அந்நிலையில் நான் காண்பேன்!"-யாத்ரீகா உடனடியாக நதிக்கரைக்கு விரைந்தாள்.

குருக்ஷேத்திரனின் உடலில் பால் ஊற்றப்பட்டு,அபிஷேகம் நிகழ்ந்தது.

இங்கே இளவரசர்,நதியில் மூன்று முறை மூழ்கினார்.

அங்கே ஒவ்வொறு ஆபரணமாக அவன் உடல் ஏற்க,இங்கே ஒவ்வொரு ஆபரணத்தையும் நதிக்கு தாரை வார்த்தார் இளவரசர்.அங்கே அரியணையில் அவன் ஏறி,தம்பதி சகிதமாய் அவனும் அவன் பத்தினியும் அரசர் கரத்தால் முடிச்சூட்டிக் கொள்ள,இங்கே ருத்திரத்தையும்,காவி உடையையும் அணிந்தார் இளவரசர்.அங்கே நெற்றியில் அவன் திலகம் சூடிக்கொள்ள இங்கே திருநீற்றை அணிந்துக்கொண்டார் இளவரசர்.இல்லை...இனி அவர் ஓர் யாத்ரீகன்!!

காத்தாயினி தேவியார் நொறுங்கி போய் நின்றார்.

இறுதியாய் ஒரு முறை அவரது பாதம் பணிந்தார் ஆதித்யர்.

"இனி என்னவென்று ஆசி வழங்குவேன் என் புதல்வனுக்கு?"

"சத்தியநெறி தவறாமல் வாழ்வாய் என்ற ஆசியை வழங்குங்கள் தேவி!"-இனி ஆதித்யரால் அவரை தாயே என்று அழைக்க இயலாது!!

"சத்திய நெறி தவறாது வாழ்வாய்!"-உடைந்துப் போய் அழுதார் அவர்.

ஆசி பெற்று எழுந்தவரின் கண்களில் சற்று தொலைவில் தென்பட்டாள் யாத்ரீகை.காத்யாயினியாரும் அவ்விடம் நோக்க,அவர் மனம் இன்னும் துடித்துப் போனது.

அவள் அதிர்ந்துப் போய் சிலையாகி இருந்தாள்.கண்கள் கண்ணீரை மௌனமாக சிந்தின.இளவரசரை அக்கோலத்தில் பார்த்தவள்,நொறுங்கிப் போய் பின்னோக்கி நடந்தாள்.

"மகளே...!"-தேவியாரின் அழைப்பு அவள் செவிகளில் விழவில்லை.தனது வாயை பொத்திக்கொண்டு அழுதப்படி அங்கிருந்து ஓடினாள்.

"மகளே...!"-காத்யாயினியார் அவளை வேகமாக பின்தொடர,ஆதித்யர் ஏதும் செய்ய இயலாமல் நின்றார்.

"மகளே...!சற்றுப் பொறு!"-நெடுந்தொலைவு கடந்ததும் அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டவள் நின்றாள்.

காத்யாயினியார் அவள் முன் கரம் குவித்தார்.

"எனை மன்னித்தருள்வாய் மகளே...!ஆற்றப்பட்ட பாவத்திற்கு எனை மன்னிப்பாயாக!"

"ஏன் மாதா?ஏன் இவ்வாறு ஒரு அனர்த்தம் நிகழ வேண்டும்?நான் என்ன பாவச்செயல் புரிந்தேன்!ஏன் இளவரசரை இப்பணி ஆற்ற அனுமதித்தீர்கள் தாயே..!"

"................"

"ராஜ்ஜியத்தை தியாகம் செய்ய கூறி இருக்கலாம் அல்லவா?என்னவர் மனதிற்கு பிரியமான இந்நதிக்கரையில் குடில் எழுப்பி,காலம் உள்ளவரை என் சுவாமிக்கு பணிவிடைகள் செய்திருப்பேனே..!ஆனால்,இவ்வாறு ஒரு வரம் வேண்டி என்னவரிடமிருந்து எனை ஏன் பிரித்தீர்கள் மாதா?பதில் கூறுங்கள்...!"-அவளது கேள்விக்கு அவரால் பதில் கூற இயலவில்லை.

"எவ்வாறு அவர் இல்லாமல் எஞ்சி உள்ள வாழ்வினை கழிப்பேன்!இனி எண்ணம் குடிக்கொண்ட காதலை எவ்வாறு மனதினைவிட்டு விலக்குவேன்!என்னவரின்றி எவ்வாறு வாழ்வேன்?"-கல் மனதும் கரையும் அளவிற்கு அழுது புலம்பினாள் அவள்.

"மகளே...!"-ஏதும் உபாயம் இல்லாத நிலையில் அவளை ஆறுதலாக தன் தோள் சேர்த்துக்கொண்டார் காத்யாயினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.