(Reading time: 8 - 16 minutes)

"னை விடு!"-அவன் அவளது கேசத்தைப் பற்றி இழுத்தான்.

"எனை விடு துஷ்டனே...!"-அவளை வலுக்கட்டாயமாக அவளை இழுத்து சென்று ரதத்தில் ஏற்றினான்.அவளது அலறல் ஔி கேட்டும்,தடுக்க யாராலும் இயலவில்லை.

அரசவையில்...

"ஆ...!"-என்ற பெரிய அலறல் கேட்டது.

யாத்ரீகையின் அலறல் ஓசை!

"அக்கன்னிகை வந்துவிட்டாள் தேவி!"-ரகசியமாக தன்னவளின் காதில் கிசுகிசுத்தான் குருக்ஷேத்திரன்.

சேனாதிபதி கண்ணீரோடு தலைக்குனிந்தப்படி நின்றிருந்தார்.

அவளை இழுத்து வந்தவன் நிலத்தில் அவளை தள்ள,அவள் கீழே விழுந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"அனைவரும் காணுங்கள்!அரண்மனையில் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய தாதியை..!"-அரசர் கேலியாக கூறினார்.

சேவகன் ஒருவன் அவள் கேசத்தைப் பற்றி அவள் முகத்தினை அனைவருக்கும் காட்டினான்.

அவள் முகத்தைப் பார்த்தவனது கண்கள் விரிந்தன.

"எவ்வளவு அழகிய ஓவியம் இவள்!"-அவன் விழிகள் அசையாமல் அவள் மீது மொய்த்தன...

சட்டென அவள் கேசம் பற்றிய சேவகனின் கரத்தை வெட்டியது ஒரு வாள்!!

அனைவரும் திடுக்கிட்டு பார்த்தனர்!!

கண்களில் சினம் மின்ன,ஆதித்யர் அங்கு பிரவேசித்தார்.

அரசர் எழுந்து நின்றார்.

யாத்ரீகையை சில நொடிகள் உற்று பார்த்தவர்,

"தேவி காத்யாயினியை இவ்விடம் அழைத்து வாருங்கள்...!"என்றார்.உடனடியாக ஒரு தாதி ஓட,சிறிது நேரத்திற்கெல்லாம் காத்யாயினியார் வந்தார்.

"மகளே...!"-யாத்ரீகையின் நிலைக் கண்டவர்,ஓடோடி அவளிடம் வந்தார்.

"இக்கன்னிகையை உடனடியாக அந்தப்புரம் அழைத்து சென்று சிகிச்சை அளியுங்கள்...!"-ஆதித்யர் கூற,கண்ணீரோடு அவளை தாங்கியப்படி அழைத்து சென்றார்.

அவர்கள் சென்றதும்,

"மரணத்தை ஸ்பரிசிக்க விருப்பம் கொண்டீரா பைரவத்தின் அரசே...!"என்றார் சிங்க கர்ஜனையாய்!!!

"துறவறம் மேற்கொண்ட சமயத்திலும் இல்லறத்தில் நாட்டம் விலகவில்லையா தமக்கு?"-அவர் கூறியதும் ஆதித்யரின் கோபம் பெருகியது.

"துஷ்டனே குருக்ஷேத்திரா!அதிகாரத்தை தியாகித்தேன்!அஸ்திரத்தை அல்ல...!இனி பைரவக்கோட்டையின் ஏதேனும் ஓரிடத்தில் அலறல் ஓலம் கேட்டாலும் உனது துர்மரணம் அடுத்தக்கணமே நிகழும்!அதை மறவாதே!"

"................."

"ஒரு ஆண்மகனின் சக்தி ஆவாள் கன்னிகை என்பவள்!மாறாக,வம்ச அழிவிற்கு குரோதம் ஒன்றையே ஆதாரமாக்கி வித்திடுபவள் பெண் என்னும் பவித்ரத்திற்கு களங்கமாவாள்!"-அரசியாரை பார்த்தப்படி கூறினார் ஆதித்யர்.

"அழிவை நாடி செல்லாதே...!"-எச்சரித்துவிட்டு நகர்ந்தார் அவர்.

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:969}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.