(Reading time: 8 - 16 minutes)

ன்றிரவு...

அந்தப்புரம்...

"எண்ணிய விருப்பம் யாதும் நிறைவேறியதா தேவி?"-மதுவை தொண்டையில் சரித்தப்படி வினவினார் அரசர் குருக்ஷேத்திரன்.

"இன்னும் ஒரு பணி மீதம் உள்ளது ஐயனே...!"

"என்ன அது?"

"சேனாதிபதியாரின் கன்னிகை எனக்கு தாதியாக வேண்டும் என்று பணித்தேனே..!"-அவன் பலமாக சிரித்தான்.

"ஆம்..!நினைவிருக்கிறது!சூரியன் உதயமானதும் அப்பணி இனிதே நிறைவேறும்!"-பிரக்யாயினி தனது கண்களில் குரோதத்தோடு அவன் மார்பினில் தஞ்சம் புகுந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

றுநாள் காலை....

இரவெல்லாம் உறங்காமல் அழுதழுது கண்கள் சிவந்திருந்தன அவளுக்கு!!

இனி என்ன செய்வது என்று புரியாதவளாய் இருந்தாள் அவள்...!

"சகி...!"

"................."

"சிறுதாவது உணவு உண்பாயாக!என்னோடு வா!"-பிருந்தாவின் பேச்சு அவளிடம் எடுப்படவில்லை.

சிறிது நேரம் சென்றிருக்கும்...!

எதிரில் வீற்றிருந்த சிவலிங்கத்தை உற்றுப் பார்த்தாள் அவள்.என்ன நினைத்தாளோ....திடீரென்று முடிந்திருந்த தனது கேசத்தினை அவிழ்த்துவிட்டாள்.

"சகி!என்ன காரியம் ஆற்றுகிறாய் நீ?"-தான் அணிந்திருந்த அனைத்து ஆபரணங்களையும் கழற்றி எறிந்தாள்.

"சகி...!"-அங்கிருந்து எழுந்தவள்,தனதறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.

"சகி..!கதவை திற..!"

"..............."

"என்ன காரியம் செய்ய துணிகிறாய் நீ?"-பிருந்தாவின் கண்ணீருக்கு சிறிது நேரம் சென்றதும் பலன் கிட்டியது.யாத்ரீகை கதவை திறந்தாள்!!

காவி உடையில்,கேசத்தை அவிழ்த்துவிட்டு,தலையில் காவி நிற வஸ்திரத்தை முக்காடிட்டு இருநதாள்.

நெற்றியில் குங்குமம் தரித்திருந்தாள்.கழுத்தில் முத்துமாலையை அணிந்திருந்தாள்.

"என்ன...என்ன கோலம் இது?"

"இனி எனக்கு விவாஹம் நிகழப் போவதில்லை...துறவறத்தில் ஈடு பாடாதவள் ஆயினும்,நான் இனி இல்லறத்தில் திளைக்கப் போவதில்லை...!இனி,நான் நாமம் அற்றவள்,வம்சமற்றவளாவேன்!"

"ஆனால்,இதற்கான அவசியம் என்ன?"

"என்னவருக்கே உரிதான இந்த ஆன்மாவும்,சரீரமும் இனி எவருக்கும் எழிலாக தெரியக் கூடாது!"

"ஏன் இந்த முடிவினை எடுத்தாய்?உன் தந்தையிடம் நான் என்ன பதில் கூறுவேன்!"

"காலம் அப்பணியினை ஆற்றும்!"-அவர்கள் பேசியப்படி இருக்க,வாசலில் ரதம் ஒன்று வந்து நிற்கும் சப்தம் கேட்டது.திடீரென பல சேனை வீரர்கள் உள்ளே நுழைந்தனர்.

"தாம் யார்?அனுமதியின்றி ஏன் இங்கு பிரவேசித்தீர்கள்?"

"யாம்...அரசரின் பாதுகாவலர்கள் ஆவோம்!அரசர் குருக்ஷேத்திரர் இக்கன்னிகையை உடனடியாக அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவிட்டுள்ளார்!"

"காரணம் என்ன?"

"தேவி பிரக்யாயினியாரின் அந்தரங்க தாதியின் பணியில் இக்கன்னிகை நியமிக்கப்பட்டிருக்கிறார்!"

"தாதியா?நான் சேவகம் செய்பவளா?நான் யார் என்று அறிவீரா?சேனாதிபதியாருக்கு இச்செய்தி தெரிந்தால்..."

"சேனாதிபதி இவ்விவரத்தை அறிவார் கன்னிகையே..!அரசரின் ஆணையினை அவரால் எந்நிலையிலும் மீற இயலாது..!"

".............."

"தாம் இசைந்து வரவில்லை எனில்,தங்களை பலவந்தப்படுத்தி இழுத்து வந்து சக்கரவர்த்தினியின் பாதத்தில் சேர்க்க ஆணையிடப்பட்டுள்ளது!!"

"தாம் என்ன கூறுகிறீர்கள்?ஒரு ஸ்திரியை பலவந்தப்படுத்துவது எவ்வளவு பாவம் என்று அறிவீரா?"-பிருந்தாவின் வாக்குவாதத்தினை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

அவர்களில் ஒருவன் யாத்ரீகையின் கரத்தினை பற்றி இழுத்தான்.

"எனை ஸ்பரிசிக்க முயற்சிக்காதே துஷ்டனே...!"

"வா...!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.