Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

IPL 2017 @ Chillzee!<br>Check out cool statistics updated daily!
IPL 2017 @ Chillzee!
Check out cool statistics updated daily!
   15th May to 2nd June - Summer vacation @ Chillzee. Click this text to read more...                                                                  15th May to 2nd June - Summer vacation @ Chillzee. Click this text to read more...
(Reading time: 3 - 6 minutes)
5 1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - 07 - சகி - 5.0 out of 5 based on 1 vote

07. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

கீதா செல்லும் பாதை நிச்சயம் சரியானதல்ல என்றுரைத்தது சரணின் மனம்!!ஏன்??எதற்காக??இவ்வாறு ஒரு எண்ணம்??விளக்கம் யாதெனின்...அவர் தனது ஆருயிர் பெயர்த்தி,தனது சுய மரியாதை தன்னை துறந்து,ஒருவனது காதலை தக்க வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.அவர் அறிவார்,இன்றளவும் கீதாவின் மனம் தன்னில் அவன் வசிக்கின்றான்.

அவளால்,அவனை இன்றளவும் தியாகிக்க இயலவில்லை.அவளது கடந்தக்காலம் தந்த வலிகள் மீண்டும் அவளை ஆட்கொள்ள காத்துக்கிடக்க,அதை அறியாத பேதை அதன் மாயையில் சிக்க துடிப்பது அவருக்கு கவலையை நல்கியது.

"தாத்தா!"-ஏதோ சிந்தித்திருந்தவரை கழுத்தில் பின்புறமாக வந்து தனது கரங்களை மாலையாக்கினாள் ஆராத்யா.தற்சமயம் உடனடியாக சிந்தையை கலைக்கும் நிர்பந்தம் உருவானது அவருக்கு!!

"ஆரா!தூங்கலையா செல்லம்?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"தூக்கமே வரலை தாத்தா!ஆமா...நீ தூங்கலை?"

"இல்லைம்மா!"

"ஓ...பாட்டி ஞாபகமா?"-அவர் மெல்லியதாய் புன்னகைத்தார்.

"ப்ச்..உனக்கென்ன தாத்தா?இன்னும் ஹீரோ மாதிரி இருக்க!இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ!"

"ஹீரோ?நான் ஹீரோவா இருந்த காலமெல்லாம் என் மதுக்கூடவே போயிடுச்சு!"

"ஏன் தாத்தா?அவ்வளவு லவ்வா?"

"மதுக்கு என் மேலே ரொம்ப லவ்!கடைசி வரைக்கும் என்னைப் பற்றி மட்டும் யோசித்தாள்!"-அவர் பெருமூச்சுவிட்டார்.

"பழைய விஷயத்தை ஞாபகப்படுத்தி கஷ்டப்படுத்திட்டேனா?"

"என்னோட முழு சந்தோஷமே என் கடந்தக்காலம் தான் ஆரா!அதுவும் மதுக்கூட இருந்த காலக்கட்டம் தான்!"-அவரது குரலில் உண்மையான ஏக்கம் தொனித்தது.ஆராத்யா சிலையாக சரணை பார்த்தாள்.

"ம்..சரி!நான் செம குழப்பத்துல இருக்கேன்!"

"என்ன அது?"

"ஒரு முடிவு எடுக்கணும்!ஆனா,மனசு இரண்டு பக்கமும் தாவுது!என்ன பண்ணலாம்?"

"டாஸ் போட்டு பாருங்க!"

"ம்...போடலாமே!"-என்றவர் தனது சட்டைப்பையிலிருந்து ஒரு நாணயத்தை எடுத்தார்.

"என்னன்னு சொல்லிட்டு போடுங்க!"

"எதுக்கு டாஸ் போட போறீங்க?"-என்றது அங்கே வந்தமர்ந்தாள் கீதா.

"நீயே கேளுக்கா!"

"இந்த வீட்டில ஒரு விசேஷம் நடக்கப் போகுதா?இல்லையான்னு!"

"ஓ...போடுங்க!"

"தலை விழுந்தா,என் முடிவு ஜெயிக்கும்!அதாவது,நல்லது நடக்கும்!பூ விழுந்தா..."

"அதெல்லாம் உங்க நல்ல மனசுக்கு தலையே விழும்,போடுங்க!"-ஆர்வம் தாங்காமல் கூறினாள் ஆரத்யா.சரண் அந்நாணயத்தினை சுண்டிவிட,அது சில அடிகள் உயர பறந்து,புவியின் விசையால் விரிந்திருந்த அவர் கரத்துள் ஐக்கியமானது.ஆராத்யா ஆர்வமாக எட்டிப் பார்த்தாள்.

சரண் தனது கரங்களை பிரிக்க,அதில் கர்ஜித்தது சிங்க முகம்!!

"ஏ..தலை தான்!"-கத்தினாள் இளையவள்.

"சரி...நீங்க என்ன விசேஷம் நடக்கணும்னு நினைத்தீங்க?"-சில நொடிகள் கனத்த மௌனம்!!

"சொல்லுங்க!"

"கீதாவோட கல்யாணம்!"-என்றார் கீதாவை பார்த்தப்படி!!அவள் சட்டென நிமிர்ந்தாள்.அவளது விழிகளில் ஆயிரமாயிரம் கேள்விகள்!முகத்தில் அதிர்ச்சி ரேகை!!

"வாவ்!அக்கா மாட்டிக்கிட்டா!"-ஆனந்தத்தில் பொங்கினாள் ஆராத்யா.

"எ..எனக்கென்ன அவசரம் தாத்தா?"

"என்ன அவசரமா?அக்கா பேசாம இருக்கா!"-என்று அதட்டினாள் அவள்.பாவம் அவள் துன்பம் அவளுக்கு!!

"உனக்கான அவகாசம் முடிஞ்சிடுச்சு செல்லம்!இனி,உன் பதிலுக்காக காத்திருக்கறது முட்டாள்தனம்!உனக்கு அப்பறம் உன் தங்கச்சி இருக்கா ஞாபகமிருக்கட்டும்!"

"தாத்தா!"-அவள் விழிகள் கலங்க பார்த்தன.

"இதுக்குமேலே எதையும் பேச வேண்டாம்!நேரமாயிடுச்சு!ஆரா உன் ரூமுக்கு ஓடு!நீயும் உன் ரூமுக்கு போ கீதா!"

"ஓ.கே.தாத்தா குட் நைட்!"-என்று சரணை ஒருமுறை இறுக அணைத்துவிட்டு ஓடினாள் ஆராத்யா.

"ஏன் தாத்தா?"

"நான் உன்னை ரூமுக்கு போக சொன்னேன்!"

"எனக்கு பதில் சொல்லுங்க!"-அவரிடம் சில நொடிகள் ஆழ்ந்த மெளனம்!!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Saki

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - 07 - சகிDevi 2017-01-12 08:43
Interesting going... Saki (y)
Siva - Rudhraa - Geetha triangle love story ah :Q: .. Vishwavin geetha mel ulla pasam Geethavai yaridam serkkum :Q:
waiting to read more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - 07 - சகிmadhumathi9 2017-01-11 07:02
Super epi waiting to read more.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - 07 - சகிJansi 2017-01-11 00:26
Nice epi Saki
kaatal tolvi patriya paguthi arumai
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - 07 - சகிChithra V 2017-01-10 22:34
Nice update saki (y)
Geetha Shiva va marg pannikka sammadhippala :Q:
Eagerly waiting next update :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - 07 - சகிAarthe 2017-01-10 22:09
Very nice epi Saki mam (y)
Waiting to know the FB..
Looking forward (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - 07 - சகிsaju 2017-01-10 19:56
super ud sis
Reply | Reply with quote | Quote
IPL 2017 @ Chillzee

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

போட்டி முடிவுகளை காணத் தவறாதீர்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
15
MKK
VPS

**TIUU**

NTES
16
UNES
IPN

-

PEPPV
17
SPK
**NEK**

KG

-
18
**SV**
-


VKV

IEIK
19
**VS**
-


Ame

-

6am


1pm

8pm
22
MKK
-

PPN

NTES
23
NS
IPN

PEMP

PEPPV
24
**MK**
**NEK**

NAU

-
24
MNP
**NA**

VKV

-
26
**YMVI**
-

AEOM

-

** Summer vacation - No updates from 15th May to 2nd June

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Latest Poems

Non-Fiction

Non-Fiction series

General section | Fun section | Entertainment section | Cooking section | Health & Beauty Section | Family section | Kids Crafts Section