(Reading time: 8 - 16 minutes)

காலம் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்த வேளை, பூஜிதா நடக்கப் பழகி, பேச ஆரம்பித்த தருணம், சரயூ மீண்டும் கருவுற்றாள்…

விஷயம் அறிந்த திலீப்பிற்கு சந்தோஷம் தாங்கவில்லை…

“ஆச்சரியமா இருக்கு சரயூ… நமக்கு இப்போதான் கல்யாணம் ஆன மாதிரி இருக்கு… அதுக்குள்ள நமக்கு இரண்டு குழந்தைங்க… நினைக்கவே சந்தோஷமா இருக்குல்ல….”

“ஹ்ம்ம்… ஆமா திலீப்… ஆனா இரண்டு இல்ல… மூணு குழந்தைங்க…”

“மூணா?...”

அவன் புரியாமல் கேட்க, அவளோ ஆம் என்றாள்…

கொஞ்ச நேரம் யோசித்தவன், பின், “ஹேய்…………. சொல்லவே இல்ல…” என்ற கூவலுடன் அவளை அணைத்துக்கொள்ள, அவள் சிரித்தாள்…

“ட்வின்ஸா?... சரயூ?... என்னைவிட்டுட்டு எப்போ டாக்டர்கிட்ட போன நீ?... எங்கிட்ட ஏன் சொல்லலை முதல்லயே?... ஹ்ம்ம்…”

அவன் சந்தோஷத்துடன் கேட்டு அவளின் முகம் பற்ற, அவளோ மேலும் சிரித்தாள்…

“ஹேய்… சொல்லுடி…. இப்படி சிரிச்சிட்டே இருந்தா என்ன அர்த்தம்?...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“ஹ்ம்ம்… நீங்க தான் அதுக்கு காரணம்னு அர்த்தம்…”

புரியாமல் அவன் புருவம் உயர்த்த,

“அய்யோ திலீப்… இன்னுமா புரியலை… பூஜா ஒரு குழந்தைன்னா, இப்போ என் எதிரில இருக்குற என் திலீப்பும் எனக்கு இன்னொரு குழந்தை தான்… போதுமா?... இப்போ புரிஞ்சிட்டா?...”

புன்னகையும் நாணமுமாய் அவள் கேட்க, அவளை இறுக அணைத்துக்கொண்டு முத்தங்களை வழங்கினான் திலீப் ஆசை தீர….

“அய்யோ… போதும்… விடுங்க…”

“ஏன் சரயூ?.. வலிக்குதா?...”

“ஆமா குட்டி பாப்பாக்கு வலிக்கும் தான இறுக்கி பிடிச்சா?...”

அவள் சொன்னதும், சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு விரல் நீவி சொடக்கு எடுத்துவிட,

“ஹ்ம்ம்… சாருக்கு என்ன வேணும்?...” எனக்கேட்டாள் சரயூ…

“அதெப்படி… எதையோ கேட்கப்போறேன்னு சரியா சொல்லுற?...”

“அதெல்லாம் அப்படித்தான்… நீங்க விஷயத்தை சொல்லுங்க…”

“இல்ல சரயூ… பூஜா அப்படியே என்னை மாதிரியே இருக்குறா….”

“அதனால?...”

“ஹ்ம்ம்… உன்னை மாதிரி ஒரு குட்டி திலீப் பெத்து கொடேன்… ப்ளீஸ்…. ஆசையா இருக்குடி…”

அவன் கெஞ்சலாக கேட்க, அவளோ அவன் தலைமுடியை கலைத்துவிட்டு,

“அதுக்கென்ன பெத்துக்கொடுத்துட்டா போச்சு?... என்னை மாதிரி என்ன?.. அப்படியே அச்சு அசலா என் திலீப்பையே பெத்து கொடுத்துடுறேன்… சந்தோஷமா?...”

“ஹ்ம்…. அதெல்லாம் வேண்டாம்… எனக்கு உன்னை மாதிரி தான் குழந்தை வேணும்…”

“அப்போ சரி… இப்போ உங்களை மாதிரி பெத்துக்கொடுக்குறேன்… அடுத்த குழந்தை நீங்க கேட்ட மாதிரி பெத்துத் தரேன்… போதுமா?...”

“ஹேய்… அய்யோ… அதெல்லாம் வேண்டாம்… முதல் குழந்தைக்கே நீ எவ்வளவு கஷ்டப்பட்ட?... அப்பா… இப்ப நினைச்சாலும் வலிக்குது… எனக்கு பயமாயிருக்கு… இந்த குழந்தையோட போதும்…”

அவன் பயமும், வலியுமாக சொல்ல, அவனை அணைத்துக்கொண்டவள்,

“அய்யோ திலீப்… பெத்துக்கொடுக்குற நானே பயமில்லாம பெத்துத்தரேன்னு சொல்லுறேன்… நீங்க என்னடான்னா?....”

“ப்ளீஸ் சரயூ… நமக்கு இரண்டு குழந்தைங்க போதும்… சொன்னாக்கேளு…”

அவன் சற்றே அழுத்தமாக கூற,

“சரி சரி… என் திலீப் ஆசைதான் என் ஆசையும்…”

சொன்னவளை இறுக அணைத்துக்கொண்டவன், அதன் பின் வந்த நாட்களில் அவளை அப்படி தாங்கி பார்த்துக்கொண்டான், தாயை விட அதிகமாய்…

ஆனால் அனைத்தும், இரண்டாவது குழந்தைப் பிறக்கும் வரை மட்டும் தான் என்பதை பாவம், சரயூ அறிந்திருக்கவில்லை…

அந்த குழந்தையோடு தன் சந்தோஷம் தொலையப்போகிறது என அவள் கனவில் கூட நினைத்து தான் பார்த்திருப்பாளா என்ன?...

பிரசவ வலியில் துடித்தவளை, மருத்துவமனையில் திலீப் சேர்க்க, போன தடவை மாதிரி பிரசவம் சிக்கலாகி விடக் கூடாதே என துடித்தான் திலீப்…

பல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு, அவன் கண் மூடி நின்றிருந்த வேளை,

“சாரி… குழந்தை தலை திரும்பியிருக்கு… உடனடியா ஆப்பரேஷன் பண்ணலைன்னா, எங்களால இரண்டுபேரையும் காப்பாத்த முடியாது… பேஷண்ட் கண்டிஷன் கிரிட்டிக்கலா இருக்கு ரொம்ப… சீக்கிரம் இதுல ஒரு சைன் பண்ணுங்க சார்…”

நர்ஸ் வந்து திலீப்பிடம் சொல்ல, அவனுக்கோ அப்படியே தலை சுற்றியது…

“கடவுளே… இது என்ன சோதனை?... இப்போதான என் சரயூக்கு போன தடவை மாதிரி எதுவும் ஆகக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன்… அதுக்குள்ள இப்படி ஒரு அடியை கொடுக்குறீயே ஏன்?...”

மனம் துவண்டவனாய் அவன் கடவுளிடம் பேசிக்கொண்டிருக்க, நர்ஸ் அவனிடம் பேப்பர்ஸை நீட்டி, அவசரம் என்றாள்…

“என் சரயூவும், என் குழந்தையும், நல்ல படியா எங்கிட்ட வரணும்… நீ தான் அதுக்கு பொறுப்பு…” கடவுளை மனதில் நினைத்துக்கொண்டு பேப்பர்ஸில் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு, அவன் காத்திருக்க,

“போன தடவையும் இப்படி சிக்கலா போய், கடைசியில பூஜா பொறந்தா… இந்த தடவை எப்படியோ தெரியலையே…. கடவுளே… இந்த குழந்தையாவது பையனா பொறந்து எங்க திலீப் தம்பி மானத்தை காப்பாத்தட்டும்ப்பா…”

விசாலம் கடவுளிடம் மனமுருக வேண்டுவது போல் திலீப்பிற்கு கேட்கும்படி கூற, அவனுக்கு மனதிற்குள் சுருக் என்றது…

அந்த வலி மறைவதற்குள், அவனின் மனதில் அடுத்த காயத்தை ஏற்படுத்த தயாரானது நர்ஸ் கொண்டு வந்த தெரிவித்த செய்தி…

தொடரும்

Episode # 28

Episode # 30

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.