(Reading time: 9 - 17 minutes)

03. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

திகமாக வலிகளில் தத்தளித்த மனிதர்கள் தங்களின் மனதினை இறுக்கமடைய செய்கிறார்கள்!!எவருக்கும் ஆட்படாத தன்மையாய் தம்மை மாற்றி கொள்ள முயல்கிறார்கள்!!ஆணவம்,துவேஷம் என அனைத்தையும் தன்னகத்தே வளர்க்கின்றனர்!!விளைவு...காண்போர் அனைவரிடத்தில் பழி!!இதுபோன்ற மனிதர்கள் தங்கள் வாழ்வில் எவ்வித வசந்தத்தையும் அனுமதிப்பதில்லை!!வசந்த காலம் அவர்களை தேடி ஓடி வந்து நின்றாலும்,அவர்கள் அதைத் துளியும் மதிப்பதில்லை!!இதுபோன்ற நிலையில் சிலர் அனைத்தையும் துறந்து யோக நிலை அதாவது அன்பினை வெறுக்கும் நிலையில் விழுகின்றனர்!!இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முழு முதற் காரணமாய் விளங்குவது எல்லாம் துரோகங்களே!!

"மேடம்!"-ஏதோ கோப்புகளை சரிப்பார்த்து கொண்டிருந்தவள் நிமிர்ந்துப் பார்த்தாள்.

"உங்களை பார்க்க மூணு பேரு வந்திருக்காங்க!"-யார் அவர்கள் என அவள் விழிகள் வினவின.

"ருத்ரா பில்டர்ஸ் எம்.டி!மேனேஜர் அண்ட் மிஸஸ்.ரகுராம்!" -அவளது முகம் இறுகியது!!

"விசிடர்ஸ் ரூம்ல உட்கார சொல்லு!"

"எஸ் மேடம்!"-என்றவன் வெளியேறினான்.கையிலிருந்த கோப்பினை மூடி வைத்தவள்,சில நொடிகள் ஏதேதோ சிந்தித்தாள்.

"நிஷாந்த்!"

"மேடம்?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"டென்டரை அனுப்ப வேணாம்!வெயிட் பண்ணு!"

"எஸ் மேடம்!"-உத்தரவிட்டு தனைக்காண வந்தவரை சந்திக்க சென்றாள் மாயா.

"அர்ஜூன் செம் கடுப்புல இருக்கேன்!நீ வேணும்னா இருந்து பேசிட்டு வா!"

"டேய்!பொறுமையா இருடா!"-இருவரும் பேசிக் கொண்டிருக்க உடன் வந்திருந்த பெண்மணியின் விழிகள் சுவரில் மாட்டப்பட்டிருந்த மாயாவின் தந்தை மகேந்திரனின் புகைப்படத்திலே பதிந்திருந்தது.

"மா!நீங்க பயப்படாதீங்க!நான் பார்த்துக்கிறேன்!"-வாக்களித்தான் ராணா.அவர் மெல்லியதாய் புன்னகைத்தார்.அவர்கள் உரையாடலின் நடுவே கதவு திறக்கப்பட்டது.நடுங்க வைக்கும் சிம்மமாய் உள்ளே நுழைந்தாள் மாயா.ருத்ராவின் விழிகள் அவள் மேல் ஆழமாக பதிந்தன.ஆணவத்தின் மறுபிறப்பு என்று அனைவரும் கூறுவதில் தவறு இருப்பதாய் தோன்றவில்லை அவனுக்கு!!

நேராக வந்தவள் நாற்காலியில் அமர்ந்தாள்.

"என்ன விஷயம் அர்ஜூன் குமார்?"-கணினியை ஆராய்ந்தப்படி கேட்டாள்.அவளது நடவடிக்கை ஒவ்வொன்றும் ருத்ராவின் குருதியை கொதிக்க வைத்தது.

"மாயா!உங்கக்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்டு வந்திருக்கேன்!"

"டென்டர் விஷயமா?"

"..............."

"டென்டர் விஷயமா?"-அழுத்தமாக கேட்டாள் அவள்.

அவள் நடவடிக்கையில் தூண்டிவிடப்பட்டவன் கொதித்து எழ பார்க்க,அவன் கைகளை பற்றினான் அர்ஜூன்.கண்களால் அமைதியாகும் படி கெஞ்சினான்.

"எஸ் மாயா!"

"மாயா!ஒரு விஷயம் வேணும்னு முடிவு பண்ணா அதை அடைந்தே தீருவான்னு தெரியாதா?"

"மாயா ட்ரை டூ அண்டர் ஸ்டாண்ட்!உனக்கே தெரியும் ரகுராம் சார் இன்டஸ்டிரில எப்படி வாழ்ந்தவர்னு!இன்னிக்கு எல்லாம் முடியுற நிலையில இருக்கு!எல்லாரும் உன்னை எதிர்க்க பயப்படுறாங்க மாயா!"

"அதான் உதவி கேட்டு வந்திருக்கியா?"

"மாயா!நான் உன்கிட்ட ஒரு ஃப்ரண்ட்டா இந்த உதவியை கேட்கிறேன்!"

"அதெல்லாம் ஸ்கூல் லைப்போடே கட் ஆயிடுச்சு!"

"உண்மைதான்!ஆனா,உன் நண்பன் மாறலை!உன் நண்பனா இந்த உதவியை கேட்கிறேன் மாயா!"-ருத்ரா புரியாமல் விழித்தான்.மாயாவின் பார்வை வெகு நேரமாக அங்கு சிரம் தாழ்ந்து அமர்ந்திருந்த பெண்ணின் மேல் மொய்த்தது.ஒருவித ஏளனப் பார்வை அது!!அவரை நோக்கி தன் விரலை சொடுக்கினாள் மாயா!!

அவர் கண்ணீரோடு நிமிர்ந்துப் பார்த்தார்.

"மிஸஸ்.காயத்ரி....ரகுராம்!"-அழுத்தமாக உரைத்தாள் அவள்.

"மறுபடியும் சந்திப்போம்னு எதிர்ப்பார்க்கலை தானே!"

"மாயா!"-தடுக்க வந்த அர்ஜூனை கை உயர்த்தி நிறுத்தினாள் அவள்.

"பாவம்!உங்க நிலைமையை நினைச்சா பரிதாபமா இருக்கு!"

"மாயா!"

"என் பேரை சொல்லி கூப்பிடுற துணிச்சல் உனக்கு வரக்கூடாது!"

".............."

"அன்னிக்கு என்ன சொன்ன?உன் ரத்தம் தானே!உன்னை மாதிரி தான் இருப்பான்னு என் அப்பாவை அவமானப்படுத்தி போன ஞாபகமிருக்கா!அதே ரத்தம்...திரும்பி வந்திருக்கு!இந்த நாளுக்காக தான் காத்துக்கிட்டு இருந்தேன்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.