(Reading time: 9 - 17 minutes)

"...!நானும் பார்த்திட்டே இருக்கேன்!பேசிட்டே போற?என்னடி?யார்டி நீ அவங்களுக்கு?எவ்வளவு தைரியம் உனக்கு?பெரியவங்கன்னு மரியாதை இல்லாம உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போற?"-கொதித்துவிட்டான் ருத்ரா.மாயாவின் ஏளன பார்வை அவனை தாக்கியது.

அவள் தனது சுட்டு விரலை தன் இதழ் மீது வைத்தாள்.அவள் நடவடிக்கையில் மேலும் பொங்கியவனை அடக்கினான் அர்ஜூன்.

"பிரதாப்!என் கூட வா!"-தன் மித்திரனை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினான் அவன்.அவர்கள் வெளியேறியதும்,மீண்டும் விரலை சொடுக்கினாள் மாயா.

கண்களில் அச்சத்தோடு எதிர் நின்றவளை பார்த்தார் காயத்ரி.

"அப்பறம்!வாழ்க்கை எல்லாம் துக்கத்துல போகுதுன்னு கேள்விப்பட்டேன்!ரொம்ப சந்தோஷம்!மனசு திருப்தியா இருக்கு!"

"மாயா ஏன் இப்படி பேசுற?நான் உன் அம்மாம்மா!"

"ம்??கேட்கலை...சத்தமா சொல்லு!"

".............."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"அம்மாவா??பத்து மாசம் வெறும் உடல் வலியை மட்டும் தாங்கி பெற்றெடுத்த!என் அப்பா நீ விட்டுட்டு போனதுல இருந்து சாகுற வரை என்னையும் உன்னை மாதிரி ஒரு கேவலமான பிறப்பு செய்த துரோக வலியையும் மனசுல சுமந்து நரக வேதனையை அனுபவித்தாரே இதுல எது பாசம்?எது உண்மையான தாய்மை??சொல்லு!"

"மாயா!"

"உஷ்!இந்த மாயாக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னா போதும்,வேரோட அழித்துடுவா!உன் வம்சத்தையே தரைமட்டமாக்குவேன்!"

"............"

"என்ன இப்போ என்கிட்ட அந்த டென்டரை யாசகமா கேட்டு வந்திருக்க அவ்வளவு தானே!"-அதிர்ந்துப் போய் தன் புதல்வியை பார்த்தார் காயத்ரி.

"நிஷாந்த்!"

"மேம்!"

"நம்ம கொட்டேஷனை அனுப்ப வேணாம்!டென்டரை இவங்களுக்கே கொடுக்க சொல்லு!இது அர்ஜூன் கேட்ட ஒரே காரணத்துக்காக!"-என்றவள் விருட்டென்று வெளியேற இரண்டடி எடுத்து வைத்தாள்.

"நிஷாந்த்!"

"மேடம்!"

"அவங்க உட்கார்ந்திருந்த சோபாவை எடுத்துட்டு போய் எரித்துவிடு!இந்த ரூமை நல்லா கிளீன் பண்ண சொல்லு!"-அக்னி சொற்களை உதிர்த்துவிட்டு அவள் வெளியேற,ஜடமாய் மயங்கி சரிந்தாள் காயத்ரி.அதை அவள் கவனித்த போதும் கண்டுக்கொள்ளாமல் வெளியே நகர்ந்தாள் மாயா.

மனிதனாகப்பட்டவனுக்கு காலமானது இரு வாய்ப்புகளை நல்குகிறது!!ஒன்று,துன்பம் தாங்கி சாதிக்கும் தர்ம மார்க்கம்!மற்றொன்று குரோதம் கொண்டு வாழும் அதர்ம பாதை!தர்ம பாதையில் சலித்துப் போனவன் போக வாழ்வுக்காய் அதர்மத்தை நாடுகிறான்!விளைவு...இறுதியில் துயர்!!தவறிழைத்தவனை தண்டிக்க வேண்டுமெனில் வழிகள் உண்டு ஆயிரம்!!ஆனால்,தன்னிலை தவறினால் அதிலிருந்து மீள வழி அறியது உண்மையில் சிரமமான ஒன்றே!!

னது அறையில் அமர்ந்து எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள் மாயா.அவளது கரங்கள் மகேந்திரனோடு சிறு வயதில் அவள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இறுக அணைத்திருந்தது.கண்களில் கண்ணீர் நான் வெளி வரட்டுமா என்று வினவ,அதற்கு தடையிட்டாள் அவள்!!பிடிவாதம் மிக்கவளாயிற்றே!!கடிகாரத்தின் முட்கள் விரைந்து காலத்தை இரவு ஒன்பது என்று சுட்டியது!!

"அம்...மூ!"-செவிகள் கேட்ட குரலால் திடுக்கிட்டாள் அவள்.

"எங்க இருக்கா என் அம்மூ?அப்பா வீட்டுக்கு வந்துட்டேன்!"-பதறியப்படி மெத்தையில் இருந்து எழுந்தாள் அவள்.

"அம்மூ!எங்க அம்மூவை காணும்?"

"பா!அப்பா..!"-காலம் கொண்ட தன் தந்தையை விழிகள் எதிரில் காண அவளின் மனம் உண்மை நிலையை மறந்தது.

"அம்மூ!"

"அப்பா!அப்பா நான் இங்கே இருக்கேன்!"

"எங்கே போயிட்ட!"

"அப்பா நான் இருக்கேன்பா!"-இருகரம் நீட்டி அழைத்தவள்,சட்டென அமைதியானாள்.

"அப்பா..!"-என்று துள்ளிக்குதித்து ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டாள் சிறுமி ஒருத்தி!!ஆம்..!சிறு வயது மாயா!

அதிர்ச்சியோடு நிகழ்வதை பார்த்துக் கொண்டிருந்தாள் மாயா.

"அப்பா!நான் கிளாஸ்ல ஃபர்ஸ்ட் ரேங்க் தெரியுமா?"-குதூகலித்தாள் அச்சிறுமி.

"ஆ..!அப்படியா?எங்கே ரேங்க் கார்ட் காட்டு!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.