(Reading time: 9 - 17 minutes)

"வாங்க காட்டுறேன்!"-அவரை இழுத்துக் கொண்டு போனாள் மாயா.

அவ்வளவு நேரமும் அடங்கி இருந்த கண்ணீர் அவள் பிடிவாதத்தை உடைத்துக் கொண்டு வெளி வந்தது.மேசையை இறுகப்பிடித்தப்படி அதை கட்டுப்படுத்த முயன்றாள் மாயா.கண நேரத்தில் தன் தோளை யாரோ ஸ்பரிசிப்பதாய் ஒரு உணர்வு ஏற்பட,திடுக்கிட்டு திரும்பினாள்.அதே புன்னகை மாற முகத்துடன்,நின்றிருந்தார் மகேந்திரன்.

"பா!"-அவர் அவளது கண்களைத் துடைத்தார்.

"நீ செய்தது நியாயமா அம்மூ?"

"பா!நான் சொல்றதை கேளுங்க!"

"நீ செய்தது நியாயமா?"

"இல்லை..."

"மனச்சாட்சிக்கு தப்புன்னு தெரிந்து ஏன் அப்படி பண்ண?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"ஏன்னா,அவங்க உங்களை.."

"அது கடந்த காலம் செல்லம்!முடிந்துப் போன விஷயம்!காயத்ரியை நீ வேதனைப்படுத்தி பழி வாங்க நினைக்கிற!எனக்காக செய்ய துடிக்கிற?என்ன பயன்?அதைப் பார்க்க நான் இல்லையே!"

"அப்பா!"

"அதான் உண்மை அம்மூ!நீ செய்தது தப்பு!ஒருத்தன் செய்த தப்புக்கு அவனை மன்னிக்கிறது தான் பெரிய தண்டனை!"

"ஆனா,மன்னித்து விட்டுட்டே இருந்தா,அதனால அவன் அதிகமா தப்பு பண்ணா!"

"முதல்ல தப்புக்கும்,குற்றத்துக்கும் வித்தியாசம் தெரிந்துக்கோடா!காயத்ரி தெரியாம செய்த தப்பு அது!"

"என்னால அதை மன்னிக்க முடியாதுப்பா!"

"உனக்கும் அவளுக்கும் எந்த பந்தமும் இல்லைன்னு சொன்ன,அப்பறம் எந்த அதிகாரத்தை வைத்து அவ மனசை வேதனைப்படுத்துன?"

"............."

"நீ செய்தது தப்பு!அதுக்கான பிராயசித்தை செய்!"

"அப்பா!"-அவரை அணைக்க அவள் முயல,அதற்குள் காற்றோடு காற்றாய் கலந்தது அவர் உருவம்!!

"பா!"-கண்ணீரோடு மண்டியிட்டாள் மாயா.நிகழ்ந்தது தான் யாது??எல்லாம் அவள் மாயை!!!அவள் கற்பனை மட்டுமே!!!

நடுக்கத்துடன் தன் கைப்பேசியை எடுத்து யாரையோ அழைத்தாள் மாயா.

"நிஷாந்த்!"

".............."

"அந்த டென்டர் காயத்ரி ரகுராம்க்கு தான் போகணும்!எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை!அவங்க தான் இந்த டென்டரை முடிக்கணும்!இதுக்கு காரணம் நான்தான்னு யாருக்கும் தெரியக் கூடாது!"

".............."-இணைப்பை துண்டித்தாள் மாயா.மீண்டும் கண்ணீர் பீறிட்டு வந்தது.

"அப்பா!"-கண்ணீரோடு தரையில் விழுந்தாள் அவள்.மனம் கொண்ட சமர்பணம்!!இறைவனுக்கு அடுத்து தந்தை தான் அவள் உலகம்!!தன் தந்தைக்கு ஏற்பட்ட பழி துடைக்கவே வாழ்வனைத்தும் போராடி தன் சுகபோகங்களை தியாகம் செய்தாள்!!பல்வேறு இன்னல்களை ஸ்வீகரித்தாள்!!தன் இச்சைகளை துறந்தாள்!!தன் மனதினை இறுகிய பாறையாய் உருமாற்றினாள்!!அனைத்தும் பெண்களின் இருதயத்திலும் ராஜகோபுரம் ஒன்று உண்டு!!சந்தித்த துயர்களை கணக்கில் கொண்டு அக்கோபுரத்தை தகர்த்தெறிந்தாள்.அதன் நடுநாயகமாய் விளங்கும் சிம்மாசனம் சுற்றி பல வேலிகளை அமைத்தாள்!சுக வாழ்வினை கொண்ட ஒரு சந்நியாசியாய் வாழ்வை வளர்த்தாள்.அதில் விளைந்த ஒவ்வொரு நொடியையும் தானே செதுக்கும் அதிகாரத்தை தன் தியாகங்களால் பெற்றாள்!!மனவுறுதியையும்,பிடிவாதத்தையும் தன் பிரதி பிம்பமாய் கொண்டாள் இந்த மாயா!!

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.