(Reading time: 8 - 16 minutes)

04. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

"ன்ன உங்களுக்கு?கொஞ்ச நாளாவே ஏன் இப்படி வித்தியாசமா பண்றீங்க?"-சற்றே கோபமாக வினவினாள் மித்ரா.

"இப்படி உட்கார்!"-எதிரில் இருந்த ஆசனத்தை சுட்டினான் ராணா.

கோப மூச்சை விடுத்தவள்,அவன் எதிரே அமர்ந்தாள்.

"பொண்ணுன்னா எப்படி இருக்கணும்?"

"ஆ..??"-திடீரென்று அவன் விடுத்த வினா அவளை திடுக்கிட வைத்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"டோன்ட் மிஸ்டேக்!எப்படி நடந்துக்கணும்?"

"எப்படி நடந்துக்கணும்?"

"அடக்க ஒடுக்கமா இல்லைனாலும்,பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்!அன்பா பழகணும்!அறிவா இருக்கணும்!மொத்ததுல உன்னை மாதிரி இருக்கணும்!"-அவனது புகழ்ச்சி அவள் முகத்தை மலர வைத்தது.

"ஆனா!அவளும் இருக்கா பாரு..!பத்ரகாளி!!பொண்ணா அவ!"

"யாரு?"

"அந்த மாயா!என்னை...நல்லாக் கேளு மித்ரா!கமிஷ்னர்ல இருந்து கலெக்டர் வரைக்கும் மரியாதை கொடுக்குற உன் மாமாவை எப்படி அவமானப்படுத்துனா தெரியுமா?"-என்று நிகழ்ந்த நிகழ்வை விளக்கினான் ருத்ரா.அதைக்கேட்டவள் பட்டென சிரித்துவிட்டாள்!"

"என்னடி சிரிக்கிற?"

"ஒண்ணுமில்லை..மேலே!"

"அவளை..அவளை நான் சும்மா விடமாட்டேன்!"

"மாமா!"-அவனது கரத்தை இறுகப் பற்றினாள் மித்ரா.

"எதுக்கு இந்தப் பகை??விடுங்க..!அதான் எல்லாம் முடிந்ததுல!"

"மித்ரா..!"

"மாமா!சில நேரத்துல நம்ம சந்தர்ப்ப சூழ்நிலை கூட நம்மை தவறு செய்ய தூண்டலாம்!"

"அது சரி!விட்டுக்கொடுப்பியா நீ?நீயும் பொண்ணு தானே!அதான் சப்போர்ட் அங்கே போகுது!"

"நான் ஒண்ணும் யாருக்கும் சப்போர்ட் பண்ணலை!அது சரி,ரகுராம் சாருக்கும் மாயாக்கும் அப்படி என்ன தான் பகை??"

"ஏ..ஆமா!அதைக் கேட்க மறந்துட்டேன்!அவ ஏதோ கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம உளர்னா!அர்ஜூனுக்கு கூட அவளை தெரிந்திருக்கு!!என்கிட்ட இருந்து கூட மறைத்துட்டான்!"

"மறைத்துட்டாரா??நீங்க மறந்துட்டிங்களா?"-அவன் கூர்மையாக சில நிமிடங்கள் சிந்தித்தான்.

"ஏ..நல்லா ஞாபகமிருக்கு!எனக்கு மாயான்னு யாரையும் தெரியாது!அர்ஜூனுக்கு மட்டும் எப்படி??"

"பேசாம அவர்கிட்டயே கேட்டுக்கோங்க!"

"அதான் பண்ணணும்!விடியட்டும் அவன் சட்டையை பிடித்து யாருடா அந்த மாயான்னு உலுக்கி எடுக்குறேன்!"

"நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க!முதல்ல சாப்பிட வாங்க!"

"என்ன சமையல்?"

"ம்..விஷம்!"

"நீ கொடுத்தாலும் கொடுப்படி!போ வரேன்!"-மெல்லிய புன்னகையை விடுத்தவள்,அங்கிருந்து நகர்ந்தாள்.தனிமையில் விழிகளை மூடியவனின் நினைவுகளில் மாயாவின் செய்கை வந்து போனது.

"திமிர் பிடித்தவள்!கடைசி வாய்ப்பு!மறுபடியும் எதாவது நடக்கட்டும்!தொலைந்தா அவ!"-என்றவன் கையிலிருந்த ஏதோ ஒரு காகிதத்தை கசக்கி தூர எறிந்தான்.

ண்ணிலடங்கா இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கும் பிரதான தலைப்பு குரோதம்!!வேதங்களில் ஆறுவகை பாவங்களுள் இரண்டாம் இடத்தை பிடித்த இந்த குரோதம் விளையும் ஆதி எவருக்கும் புலப்படாது!!அவன் செய்த தவறுக்கு தண்டனை அளித்தேன்!இதில்,குற்றமென்ன உள்ளது??என்று வாதடுவர் பலர்!!செய்த தவறுக்கு தண்டனை வழங்குவதில் யாதொன்றும் தவறில்லை!ஆனால்,வழங்கப்படும் தண்டனையானது எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பது அவசியம்!!உதாரணமாக,ஒருவனின் உயிர் பறிக்க வரும் சர்ப்பத்தினை கொல்வது தோஷம் என்று கூறப்படுகிறது!!அதற்காக,தீண்ட வரும் நாகத்தினை தோஷத்திற்கு அஞ்சி வதைக்காமல் விடுவதும் மடமையாகும்!!நிகழவிருக்கும் தீங்கினை உணர்ந்து அதை தடுக்க நாகத்தினை மாய்ப்பது தவறாகும்!!அதற்கு பிராயசித்தம் புவியில் உண்டு!!ஆனால்,ஒரு நாகம் எனை தீண்ட வந்தது இனி என் பார்வையில் சர்ப்பத்தின் இனமே படுதல் ஆகாது,அனைத்தையும் வதைப்பேன் என்பது குரோதம்!!மன்னிக்க இயலா பாவமாகும்!!அகிலத்தின் எவ்வகை சிறப்புமிக்க ஸ்தலங்களில் நீராடினாலும் அதற்குரிய தண்டனை மனிதனை நீங்காது!!

தனது மடிக்கணினியில் ஏதோ ஆராய்ந்துக் கொண்டிருந்தாள் மாயா.விழிகள் திரையில் பதிந்திருக்க,மனமோ,ஒருவனிடத்தில் நிலைப்பெற்று இருந்தது.யாரவன்??ருத்ரா..!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.