(Reading time: 25 - 49 minutes)

11. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

ஹிந்தன் தன் தங்கை மதுரா தன்னிடம் பேசுவதற்கு அழைப்பதை அவன் மொபைல் திரையில் பார்த்தவன் போனை எடுக்க யோசனை செய்தான் .தான் மதுராவிடம் தற்போது பேசினால் அவள் தன்னை சமாதானப் படுத்த முயற்சி செய்வாள் ஆனால், தான் இப்பொழுது சமாதானமாகப் பேசும் மனநிலையில் இல்லை. அந்த ஐஸ்வர்யா யாரோ ஒருவனின் குழந்தைக்கு தன்னை அப்பன் ஆக்க நினைப்பதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவனின் குழந்தைக்கே ஐஸ்வர்யாவை தாய் ஆக்குவதை விரும்பாத தன்மேல் இப்படி ஓர் பழியைப் போட்டவளை, அவனாள் சும்மாவிட முடியும் என்று தோன்றவில்லை .

ழையா என்ன சொன்ன? யாரும் தன் கர்ப்பத்தைப் பற்றிய விசயத்தில் போய் சொல்ல மாட்டார்களா ? என் கூட வா வந்து பார் ! உனக்குத் தெரியும் என்று கூறியபடி எழுந்து சென்றான்.

அவன் பின்னாலேயே வந்த கவிழையாவிற்கு இன்னமும் மஹிந்தனின் மேல் நம்பிக்கை வரவில்லை. அவளுக்கு ஆசையாக ஐஸ்வர்யா கூறிய, “இந்தவிசயம் மட்டும் மஹிந்தனுக்க்த் தெரிந்தால் எவ்வளவு சந்தோசப்படுவார் தெரியுமா?” என்று கூறிய வார்த்தையே காதில் திரும்பத்திரும்ப ஒளித்தது .

ரூமை விட்டு வெளியில் வந்தவள் மஹிந்தனிடம், ஓர் உண்மையை அடித்துக் கூறி, தவறான ஆதாரத்தை காட்டி ஏமாற்ற போகும் உங்களின் செயலை காண உங்களுடன் வர எனக்கு இஷ்ட்டம் இல்லை, என்று கூறியவள் தன் இருக்கையில் உட்காரப் போனாள்.

ஏய்…! “என்ன ரொம்பத் தெரிந்தவள் மாதிரிப் பேசாதே” .உனக்கு என்ன எப்பப் பார்த்தாலும் நான் கோபப்பட்டு உன் கையை இழுத்துக் கொண்டு போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதா? ,ஒழுங்கா என் கூட வா! இல்லாவிட்டால் நான் தான் உன் கைபிடித்த கணவன் என்பதை அவ்வப்போது உனக்கு ஞாபகப் படுத்த உன் கையை இழுத்துக்கொண்டு தான் போக வேண்டும் என்று நீ ஆசைப் பட்டால் அதற்கும் நான் ரெடி, என்று கூறினான் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவன் அவ்வாறு கூறவும் “இவன் செய்தாலும் செய்வான் என்று மனதிற்குள் நினைத்தவள்” வேண்டாம், நானே வருகிறேன் என்று கூறினாள். .”அவன் பார்வையே அது அந்த பயம் இருக்கட்டும்” என்று கூறியது .

அவனின் பின் வந்த கவிழையா காரில் ஏறுவதற்காக காரின் பின் கதவை திறந்துவைத்து அவளை “வா” என்று அழைத்தான் மஹிந்தன். .மறுப்பு ஏதும் சொல்லாமல் ஏறிய கவிழையாவின் அருகில் அமர்ந்த மஹிந்தன், ‘கதிரிடம்’ பார்த்தீபனின் வீட்டிற்கு போகணும் கதிர் என்று கூறியதும். கதிர் அங்கு போக என்னை ஏண்டா கூப்பிட்டாய்? நான் உள்ளே எல்லாம் வரமாட்டேன் என்று கூறினான் .

அவன் கூறியதும் “நீ உள்ளே வருகிறாய்.... உன்னிடம் நான் கேட்ட எல்லாம் எடுத்துவந்திருக்கிறாயா? என்று கேட்டுவிட்டு . இன்றுடன் அந்த ஐஸ்வர்யாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடப் போகிறேன் என்றான்.

உடனே கதிர் “டேய் நீ அவளை பற்றிய விஷயத்தை அவர்கள் வீட்டில் சொல்லிவிட்டாயா?” அந்த ஐஸ்வர்யா தான் கர்ப்பமாக உள்ளேன் என்பதை ஒத்துக்கொண்டாளா, அப்போ உனக்கு அவளுடன் நடக்க இருந்த கல்யாணம் நின்றுவிட்டதா? என்று தொடர்ந்து கேள்வியாக கேட்டான்.

அவன் தொடர்ந்து கேள்வி கேட்டவுடன் மஹிந்தன் கதிரிடம் டேய் கேள்விக்கு பிறந்தவனே அதச் சொல்லத்தான் அங்கு போறோம் என்று சொன்னான் .

கதிர் ழையாவை திரும்பி பார்த்துவிட்டு சரி அங்கே எதற்கு கவிழையா மேடத்தை கூப்பிட்டுக்கொண்டு போகிறாய் என்று முடித்தான் .

உடனே மஹிந்தன் எப்போ அவள் இவளிடம் என்று கூறி கவிழையாவின் தோளின்மேல் கை போட்டு தன் அருகே இழுத்து, அவளின் கண்களை ஊடுருவி பார்த்தவாறு நான் தான் ஐஸ்வர்யாவின் வயிற்றில் இருந்த குழந்தைக்கு அப்பா என்று பொய்சொல்லி , என்னிடம் விளையாடப் பார்த்தாளோ, அப்பவே அதிரடியாக நானே நேரில் சென்று அவளை ஒரு வழி பண்ணத்தான் அங்கு போகிறேன் என்றான் .

அதெல்லாம் சரிதான் ஆனால உன் ழையாவை ஏன் அங்கு கூப்பிட்டுப் போகிறாய்? என்று கேட்டான் கதிர் .

தன் தோளின் மேல் உள்ள மஹிந்தனின் கையை எடுக்கப் போராடி அவனிடம் இருந்து விலக நினைத்த கவிழையாவை அசால்டாக சமாளித்தபடி மேலும் தன் அருகில் அவளை நெருக்கி அவளின் முகத்தில் இருந்த கண்களை அருகில் பார்த்துக் கொண்டே ழையாவிற்கு நான் ஐஸ்வர்யாவின் கர்ப்பத்திற்கு காரணம் இல்லை என்று சொல்வதில் நம்பிக்கை இல்லையாம். சோ ! இவள கண் முன்னாள் நான் ஆதாரத்துடன் பேசணும்.

அதற்க்குமட்டும் அல்ல கதிர்! இனி மிசஸ் மஹிந்தன் என் கூடவே என் வீட்டில் தான் இருக்கப் போகிறார்கள் நான் இனி இவளை அவளுடைய அப்பன் வீட்டிற்கு அனுப்புவதாக் இல்லை. ஏன் தெரியுமா? கதிர் என்றவன் உனக்கு எப்படித்தெரியும் நானே சொல்கிறேன் .

மிசஸ் கவிழையாவிற்கு அவர்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து இருக்கிறார்கள் மாப்பிள்ளை பெயர் தனுஷ் என்றவுடன் கதிர், டேய்! நீ ஒரு இரண்டுமணிக்கு முன்னாள் விசாரிக்கச் சொன்னேயே அந்த சீனிவாசனும் அவர் மகனையும். அவன் பெயர்கூட தனுஷ் தானே, உன் மிசஸ் வீட்டில் அவனுடனான கல்யாணப் பேச்சை நிறுத்தத் தான் நீ அவனைப் பற்றி விசாரிக்கச் சொன்னாயா? என்று கேட்டான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.