(Reading time: 25 - 49 minutes)

ஹிந்தன் என்னிடம் கூறினார், ஐஸ்வர்யாவுக்கு அந்த பையனின் அஜய் மேல் விருப்பம் இருக்கிறது ஓர் அளவு வசதியான் வீட்டுப் பையன் தான். நான் வேண்டுமென்றால் அந்த பையனின் வீட்டில் பேசி இருவருக்கும் திருமணம் முடித்துவைக்கிறேன் என்று கூறினார் .

நான்தான், என் மகள் கர்ப்பமாகும் அளவிற்கு இறங்கிச்சென்று விடமாட்டாள் என்று நினைத்து, வேண்டாம் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டேன் .

அதற்கு பிறகு மஹிந்தனின் அம்மா அப்பாவை பார்த்து பேசினேன் அவரும் ஐஸ்வர்யா மற்றும் அஜய் நட்பு பற்றியும் மஹிந்தன் கவிழையா பற்றியும் விசாரித்து இருப்பார் போல .

மஹிந்தனின் அம்மா என்னிடம் கூறினார் கவிழையாவுடன் மஹிந்தனுக்கு சுமூகமான உறவு இல்லை என்றும் அந்தப் பெண் சாதாரண மிடில் கிளாஸ் வீட்டுப் பெண் அந்தப் பெண்னை நான் மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். என் மருமகள் ஐஸ்வர்யாதான் என்று என்னிடம் கூறினார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேவதி சிவாவின் "வரத்தினால் பெற்ற சாபம்" - சமூக பார்வைக் கொண்ட தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

குழம்பிய நிலையில் இருந்த நான் அஜயை பற்றி விசாரித்து கிடைத்த எந்த ஒரு செய்தியும் நல்ல மாதிரியாக இல்லை. மேலும் கவிழையா மற்றும் மஹிந்தனின் கல்யாணத்தையும் அவர்களின் இருவருக்குள்ளும் இருக்கும் உறவு பற்றியும் விசாரித்தவரை இவருக்கும் உள்ள உறவு அழுத்தமானதாக இல்லை என்பது தெரிந்தது .

அதனால் நானும் மஹிந்தனின் அப்பா கூறியது போல் ஐஸ்வர்யாவிற்கும் மகிந்தனுக்கும் கல்யாணம் முடிந்துவிட்டால் இரண்டு பேரும் திருந்தி தங்களின் வாழ்க்கையை நன்றாக் கொண்டு போக நாம் துணையிருக்கலாம் என்று நினைத்தேன்.

ஆனால், இந்த கழுதை வயிற்றில் வாங்கிக்கொண்டு வரும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை என்று கூறினார் . பின், மஹிந்தனை பார்த்து தம்பி! நீங்கள் முன்பு சொன்னது போல் அந்த அஜய்யின் அப்பாவை பார்த்துப் பேசி இருவருக்கும் கல்யாணம் முடித்து வைக்க எனக்கு உதவ முடியுமா? என்று கேட்டார்.

அவர் கூறியதும்.., யாருக்காக செய்யாவிட்டாலும் நிச்சயம் உங்களுக்காக இந்த கல்யாணத்தை நான் கண்டிப்பாக முடித்து வைக்கிறேன் நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுங்கள் என்று கூறியவன் ழையாவுடன் வெளியேறினான்.

காரில் ஏறப்போகும் போது வேகமாக வந்த மதுரா, அண்ணி ஒரு நிமிடம் என்று கூறி தன் கையில் மறைத்து கொண்டுவந்த குங்குமச் சிமிழியை திறந்து அதில் இருந்த குங்குமத்தை காண்பித்து நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள் அண்ணி என்று கூறியவள், தன்னை புன்னகையுடன் பார்த்த தன் அண்ணனிடம் நான் உன்கூட சண்டை பேசமாட்டேன். நீ என்னிடம் கூட உனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை கூறவில்லையே! என்றவள் .

பின், கவிழ்யாவைப் பார்த்து சாரி அண்ணி இப்பொழுது வீட்டில் உள்ள சூழ்நிலையில் உங்களை என்னால் வெளிப்படையாக் வரவேற்கவோ, அன்பாக பேசவோ முடியாது. ஆனால்! கண்டிப்பாக இவவளவு அழகான அண்ணி எனக்கு கிடைத்தது சந்தோசம் என்றவள், கவிழையா பொட்டின் கீழே குங்குமம் இட்டிருப்பதை பார்த்தவள் தன் கையில் குங்குமத்தை எடுத்து அவளில் நெற்றியின் மேல் உச்சியில் வைத்தவள், அண்ணி! ஏற்க்கனவே நீங்கள் பார்க்க சின்னப் பெண்ணாக இருக்கிறீர்கள் அதனால் இனி எப்பொழுதும் வெளியில் செல்லும் போது இப்பொழுது நான் வைத்ததைப் போல் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்களை காலேஜ் படிக்கும் பெண் என்று நினைத்துவிடப் போகிறார்கள், என்று கூறினாள்.

கவிழையாவிற்கு, மதுரா பேசுவது எதுவும் புத்திக்குள் ஏறவே இல்லை ஆனால் அவள் சிரித்த முகமாக பேசுவதால் பதிலுக்குப் புன்னகை மட்டுமே செய்தாள். கவிழையாவின் நிலையை உணர்ந்த கதிர் மஹிந்தனின் காதில் டேய் உன் தங்கை பேசுவதை கவனிக்கும் நிலையில் கவிழையா இல்லை .எனவே இன்னொரு நாள் மத்துராவிடம் பேசலாம் இப்பொழுது இடத்தை காலி பண்ணலாம், என்று முனுமுனுத்தான் .

மஹிந்தனை பார்த்து மதுரா என்ன அண்ணா? அண்ணி என்னிடம் பேசுவதற்கே இப்படி யோசிக்கிறார்கள், என்று கேட்டாள் .

அவள் அவ்வாறு கூறியதும் டக்கென்று கவிழையா அச்சோ அப்படியெல்லாம் இல்லை. எனக்கு திடீர் என்று ஏற்ப்பட்ட இந்த நிலைமையில் என்ன பேச! என்ன செய்ய! என்றே தெரியவில்லை என்று கூறி, மேலும் தன் நிலைமையை கூறப்போனாள்.

உடனே மஹிந்தன் “மதுரா இப்பொழுது உன் அண்ணி மிகவும் குழம்பிப் போய் இருக்கிறாள்” இன்னும் அவள் அவர்கள் வீட்டில் எங்களுக்கு கல்யாணம் ஆகிய விசயத்தை கூறவில்லை .முதலில் அவளின் பயத்தை போக்கவேண்டும் பிறகு உன்னிடம் உட்கார்ந்து மணிக்கணக்காக அவளை பேசவைக்கலாம் என்றவன் , வா ழையா! என்று அவளின் கையை பிடித்து காரின் கதவைத்திறந்து உள்ளே ஏறும்படி கூறினான்.

கவிழையாவிற்கு மஹிந்தனின் காரில் ஏறவே பயமாக இருந்தது. அவன் இனி அவளை தன் அப்பாவின் வீட்டில் விட்டு வைப்பதில்லை என்று கூறிய வார்த்தை பயத்தை ஏற்படுத்தியிருந்தது.

எனவே அவள், நான் உங்களுடன் காரில் வரமாட்டேன் நீங்கள் என்னை என் வீட்டிற்கு விடமாட்டீர்கள் என்று பயத்துடன் கூறினாள் .

அவள் அவ்வாறு கூறியதும் மஹிந்தன் இப்பொழுது நாம் உன் வீட்டிற்குத்தான் போகிறோம் பிராமிஸ் என்று கூறியவன் அவளின் நம்பாத கண்ணின் பாவத்தில் மதுரா நான் உன் அண்ணியை அவள் வீட்டிற்கு கூப்பிட்டுப் போகாமல் வேறு எங்காவது கூட்டிக்கொண்டு போனால் எனக்கு என்ன பனிஸ்மென்ட் கொடுக்கலாம், என்று கேட்டான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.