(Reading time: 25 - 49 minutes)

நீவேற, அவன் ஒரு சுண்டக்காப்பயல் அவனைப்போய் எனக்கு போட்டியாக, மாப்பிள்ளையாக, என் மாமனார் பார்த்திருக்கிறார் பார் .அதுமட்டுமில்லை மேடம் என் கண்காணாத இடத்திற்கு அந்த தனுசின் மூலம் எஸ்கேப் ஆகப் போகிறார்களாம். இப்படி யோசிக்க ஆரம்பித்த பின்னால் இனி தனியாக இவளை அப்பாவின் வீட்டிற்கு அனுப்பலாமா ? சோ, இந்த செகண்டில் இருந்து என் பார்வையில் என் இடத்தில் மட்டும் தான் மேடம் இனி இருக்கணும், புரியுதா ழையா? என்று அவளின் தாடையை தன் கைகளினால் பிடித்து தன் முகத்தை பார்க்குமாறு செய்து அவளின் கண்களுக்குள் பார்த்துக்கொண்டு கேட்டான் .

கவிழையாவிற்கு எப்பொழுது அவன் கை தன் தோளில் சுற்றி இழுத்ததோ அப்பொழுதே பயத்தில் அவளுக்கு உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது ,மேலும் இதுவரை காரில் போகும் போது அவன் முகமும் கண்களும் தன்னை ஊடுருவிப்பார்த்தாலும் சற்று தள்ளி உட்கார்ந்து கண்ணியமாகத்தான் வந்திருக்கிறான் எனவே ட்ரைவர் முன் இவன் ஜென்டிலாக நடந்துகொள்வான் என்ற நம்பிக்கையில் தான் காரில் தைரியமாக அவனுடன் செல்வாள் .

ஆனால் இன்று கதிர் டிரைவராக வந்ததால் அவனுடன் தன்னைப் பற்றி பேசுவதும் கதிர் இருப்பதையும் பொருட்படுத்தாமல் தன்னுடன் நெருங்கியமர்ந்து தன்னைப் பார்த்து இப்படிக் கேட்கவும் கவிழையாவிற்கு நடுக்கம் அதிகரித்தது .

இருந்தாலும் நடுக்கத்துடன் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டதும், உமா போனில் ரெகார்ட் ஆகியிருந்த அவளின் பேச்சை தன் போனிற்கு ஏற்க்கனவே அனுப்பி பதிவு செய்த அவளின் ரெகார்டை ஒரு கையை அவளின் தொழில் போட்டவாறு மறுகையில் பதிவை ஆண் செய்து ஒலிக்க விட்டான் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

அந்த பதிவு முடிவதற்குள் மஹிந்தனின் போனிற்கு பார்த்தீபனின் அழைப்பு மணி யோசைவந்தது. உடனே அவளின் தோளில்மேளிருந்து தன் கையை எடுத்துவிட்டு சற்று சாய்ந்து சொல்லுங்கள் பார்த்தீபன்! எல்லோரும் வீட்டில்தான் இருக்கிறார்களா? என்று கேட்டான் .

பெரியவர்கள் அனைவரும் வீட்டில் தான் இருக்கிறார்கள் , ஐஸ்வர்யா வெளியில் கிளம்புகிறாள் அவளை போகவிடட்டுமா? அல்லது இருக்கச் சொல்லனுமா? நாமே எல்லாவற்றையும் பேசி முடித்துவிடலாம் என்று பெரியம்மாள் கூறுகிறார்கள் என்று சொன்னான் .

நீங்கள் ஒன்றும் மறுத்துப் பேசவேண்டாம் நான் உங்கள் வீட்டின் வாசலுக்கு வந்துவிட்டேன் என்று கூறியவன் அவள் வீட்டு வாசலில் உள்ள கேட்டின் முன் சென்றதும் காவலாளி கதவை திறந்துவிட்டதும் அம்மாளிகையின் வாசலில் முன் காரை கதிர் நிறுத்தி, காரில் இருந்து இறங்கி மஹிந்தன் இறங்க கதவைத் திறந்துவிட்டான் .

தன் அண்ணன் தான் போனில் தொடர்பு கொண்டபொழுது போனை எடுக்காததால், வாசலிலேயே அவனிடம் பேசி சற்று பொறுமையாகவும் சமாதானமாகவும் பேசச் சொல்லுவதற்காக வாசலிலேயே காத்து இருந்த மதுரா, தன் அண்ணன் காரில் இருந்து இறங்கவும் வேகமாக வந்தவள் அவனுடன் ஓர் பெண்ணும் இறங்குவதைப் பார்த்து யோசனையுடன் அவளை பார்த்தாள் .

அவளை பார்த்தவுடன் மதுராவிற்கு அன்று போட்டோவில் மஹிந்தனுடன் பார்த்தவள் இவள் தானே என்று நினைத்தாள், தன்னைப் பார்த்து பேசவந்த தன் தங்கை, ழையாவை பார்த்ததும் தயக்கத்தோடு நிற்பதைப் பார்த்தவன் .

மதுரா இவள் கவிழையா நான் ழையா என்று கூப்பிடுவேன் இவள் தான் உன் அண்ணி என்று கூறி அறிமுகப்படுத்தினான் .அவன் திடீர் என்று அவ்வாறு கூறவும், “இப்பொழுது இருக்கும் இந்தவீட்டின் சூழலில் இவர்களை எதற்கு அண்ணா இங்கே கூட்டிக்கொண்டு வந்தாய்?” என்று கூறியவள் .

சாரி அண்ணி…! உங்களை நான் என் வீட்டிற்கு வரவேண்டாம் என்ற அர்த்தத்தில் கூறவில்லை .ஆனால் இப்பொழுது வீட்டின் சூழல் சொல்லும் படியாக இல்லை என்று கூறினாள் மதுரா.

கவிழையாவிற்கு சங்கடமாக இருந்தது .உடனே இதற்கு உன் அண்ணன் தான் காரணம் என்று தனிவான குரலில் முனுமுனுத்தாள் .

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே வெளியில் வந்த பார்த்தீபன் உள்ளே வாங்க மஹிந் வீட்டில் பெரியவர்கள் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறியனான் கதிரை பார்த்துவிட்டு தலையசைத்தவன் கவிழையாவை யோசனையுடன் பார்த்துக்கொண்டே மஹிந் குடும்ப விஷயத்தை பேசும் போது அடுத்தவர்கள் உள்ளே எதற்கு? இங்கு விசிட்டர்ஸ் ஹாலில் உட்காரவைத்துவிடலாமா? என்று கேட்டான்.

பார்த்தீபன் அவ்வாறு கூறியதும் ழையாவின் அருகில் சென்று நெருங்கி நின்ற மஹிந்தன் “இவள் அடுத்தவள் இல்லை பார்த்தீபன் என் மனைவி” kopaththaikuraiththஎன்று கூறி கவிழையாவின் கையுடன் தன் கையை கோர்த்துக்கொண்டவன் ஐஸ்வர்யாவை இவளிடம் ஓர் விளக்கம் சொல்ல வைக்க வேண்டியிருப்பதால் இங்கே கூடிக்கொண்டுவந்துள்ளேன் என்றவன் கூறியபடி அவள் கைபிடித்தபடியே அவர்களின் வீட்டினுள் நுழைந்தான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.