(Reading time: 4 - 7 minutes)

01. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

தாகம்.. தாகம்.. தாகம்.. விண்ணின் தாகம் கடலில் சேர்கின்றது.. மழையின் தாகம் மண்ணை அடைகின்றது.. விதையின் தாகம் கனியில் கனிகின்றது.. சிற்பியின் தாகம் சிலையாய் வடிகின்றது.. தாயின் தாகம் மழலை முத்தத்தில் முடிகின்றது..கவிஞனின் தாகம் கவிதையில் தணிகிறது.. நம் நாயகியின் தாகம்..??

சுட்டெரிக்கும் கதிர்களால் கதிரவன் அந்த கிராமத்தையே விழுங்கிக் கொண்டிருந்தான்.. தண்ணீர் பஞ்சம் காரணமாக ஆறுகள் முதல் குட்டைகள் வரை வற்றிக்கிடந்தது.. விவசாயமோ பாழடைந்து கிடந்தது.. மக்களோ அவ்வூரை விட்டு இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.. அந்த செழிப்பில்லாத ஊரோ செழுவூர்..

மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த ஊரில் சின்ன சின்னதாய் மூன்று நான்கு கூடாரங்கள் (TENT) முளைத்திருந்தன.. கோடாலிகளும்,மண் வெட்டிகளும், உளிகளும், சாக்குகளும்  என நிறைந்திருந்தது ஒரு கூடாரம்...

" விக்ஸு.. இன்னும் ஏண்டி அந்த பெட்டியை ஏன் திறக்காமல் இருக்க..?? ",என்று கேட்டான் விஷ்மயாவிடம் எழில்..

"நம்ம தீப்ஸ் தான் அத திறக்க வேண்டாம்னு சொல்லிட்டு வெளில போனா எலி.."

"அடியேய்..அதுக்குள்ள தாண்டி நட்டு போல்ட்னு ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் இருக்கு..அத பிரிச்சா தான் வேலைய ஆரம்பிக்க முடியும்.. மணி நாலாக போகுது.. அவ எங்க போய் தொலைஞ்சா..??"

"பக்கி நானும் உன் கூட தானே இருக்கேன்..என்கிட்ட கேட்டா..??",எலியிடம் எகிறினாள் விக்ஸ்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"Mr. எழில் விழியன் அண்ட் Ms. விஷ்மயா கோபாலன்.. வாட் தி ஹெல் இஸ் கோயிங் ஓன் ஹியர்..?? உங்களை டூல் பாக்ஸ் எடுத்துட்டு வர சொன்னதா எனக்கு ஞாபகம்",சிங்கத்தின் கர்ஜனை போல் ஒலித்தது அச்சு என்று விக்ஸாலும் எலியாலும் அழைக்கப்படும் ராமகிருஷ்ண ஆச்சார்யாவின் குரல்..

காடு போல் அடர்த்தியாக ஆங்காங்கே நரை விழுந்த முடி..  தீக்ஷயமான சாம்பல் நிற விழிகளை மறைத்திருந்தது அந்த ரேபான் ரக கண்ணாடி.. நண்பர்களாயினும் என்னிடம் ஒரு அடி எட்டி நில் என்பது போல் ஒரு அசாத்திய கம்பீரம்..

நெற்றிச் சுருக்கத்தை வைத்து தான் அவர் ஐம்பதுகளின் முடிவிலுள்ளவர் என்று கண்டுபிடிக்க முடியும்..

ஒரு அசாத்தியமான தோற்றத்துடன் காட்சியளித்தவர் மென்மையாய் வாய்மொழிந்தாலே அனைவருக்கும் ஒருவித நடுக்கம் வரும்..இவர் கர்ஜித்தால்..??

அச்சுவின் குரலை கேட்டு ஒரு நிமிடம் நடுங்கினாலும் விக்ஸ் தன் திருவாய் மலர்ந்து,"சார்..இந்த பாக்ஸ் கீ மெழுகு...ஸ்ஸ்ஸ்...சாரி சார்... கீ ஷ்ரனு கிட்ட இருக்கு",என்றாள் நடுங்கிய படியே..

"வேர் இஸ் Ms.தியா ஷ்ரனு..??",என்று மீண்டும் கர்ஜித்தார் அச்சு..

ஷ்ரனு எங்கு என்று அறியாதவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பேய் முழி முழிக்க ஆரம்பித்தனர்..

"உங்க இரெண்டு பேரையும் தான் கேட்கிறேன்.. வேர் இஸ் தட் இடியட்..??", என்று கேட்டார் குரலில் இன்னும் சிறிது காரம் ஏற்றி..

"வி டோன்ட் நோ சார்",என்றாள் விக்ஸ் அவசரமாக..

அவர்களை பார்த்து முறைத்தவர்,"நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது.. இன்னும் பத்து நிமிஷத்துல ஷி மஸ்ட் பி ஹியர்.."

"எஸ் சார்..எஸ் சார்..",என்று தலையாட்டியவர்கள் ஷ்ரனுவை தேடும் வேட்டையில் இறங்கினர்..

"டேய் எலி..இந்த வத்தி எங்கடா போயிருப்பா..?? எப்போ பார்த்தாலும் இவளை தேடி அலையறுதே நமக்கு பொழப்பா போயிருச்சு..",என்றாள் விஷ்மயா சலித்தபடியே..

"யாருக்கு தெரியும்.. அங்க வர அந்த தாத்தாகிட்ட கேட்டு பார்க்கலாம்.."

"தாத்தா..இந்த வழியா ஒரு பொண்ணு போறத பார்த்தீர்களா..??"

அவர் யோசிப்பதை கண்டவன்,"கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க தாத்தா..பசங்க போடற சட்டை பான்ட் போட்ருக்கும் அது.. டீடெயிலா சொல்லனும்னா இந்த விக்ஸ் மாதிரி இல்லாம கொஞ்சம் பொண்ணு மாதிரி நீள முடியோட இருக்கும்",என்றான் விக்ஸின் குட்டை முடியை சுட்டி காட்டியபடி..

அவன் அடையாளம் சொன்னதை கேட்டு சட்டென்று சிரித்த அந்த பெரியவர்,"ஓ..அந்த பொண்ணா.. சருகுக் காட்டுக்குள்ள போறத பார்த்தேன் தம்பி.. கிழக்காலே சுமார் முந்நூறு பர்லாங் தூரம் போனீங்கன்னா வலது பக்கமா இருக்கும் அந்த காடு...பார்த்து போங்க..",என்றவர் சிறிது நடுங்கிய படியே அவர்களை கடந்து சென்றார்..

அவர் சென்ற பின் விக்ஸை நோக்கி திரும்பியவன், கையில் ஒரு மரக்கட்டையை வைத்துக் கொண்டு அவனை அடிக்க தயாராக இருந்தவளை கண்டு ஓட்டம் பிடித்தான்.. சில பல சண்டைகளுடன் சருகுக் காட்டை அடைந்தனர் விக்ஸும் எலியும்..

அங்கே அவர்கள் கண்ட கட்சி ஒரு நிமிடம் அவர்களை உறைய வைத்தது…!!!

வியூகம் வகுக்கலாம்...

Episode # 02

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.