(Reading time: 10 - 20 minutes)

"ன்ன தாத்தா?எதாவது பிரச்சனையா?"

"நீ வாப்பா சொல்றேன்!"

"சரி தாத்தா!நான் வரேன்!"-அவன் இணைப்பை துண்டித்தான்.

அவன் மனதில் பல கேள்விகள்!!

என்னவாக இருக்கும்?ஏன் இந்நேரத்தில் வர கூறுகிறார்?மனம் முழுதும் பயம் அப்பிக்கொண்டது.

தயக்கத்தோடு தனது பைக் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

கவனம் நிச்சயம் சாலையில் இல்லை.மனம் எங்கோ அலைப்பாய்ந்து கொண்டிருந்தது!!எனினும்,சரியாக அவள் இல்லம் வந்து சேர்ந்தான்.கதவு திறந்திருந்த சமயத்திலும் அழைப்புமணியை அடித்தான்.அதன் சத்தம் கூடத்தில் எதிரொலித்து அங்கிருந்தோர் கவனத்தை ஈர்த்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз…!

படிக்க தவறாதீர்கள்..

"வாப்பா!என்ன வெளியே நின்னுட்ட வா!"-அவனை அழைத்தார் வைத்தியநாதன்.அவனது கவனமோ அவர் அருகே அமர்ந்திருந்த நிர்பயாவிடமே இருந்தது.அவனை கண்டவள் கண்கள் சட்டென கரைய ஆரம்பிக்க எதையும் சிந்திக்காமல் எழுந்து உள்ளே சென்றாள் அவள்.இவனது மனம் நன்றாக வலித்தது!!எனினும் சூழலை உணர்ந்தவன் தன் முகத்தில் ஒரு போலியான புன்னகையை கடன் வாங்கிக் கொண்டான்.

"எதுக்கு வர சொன்னீங்க?"

"................"-வைத்தியநாதன் சிறிது மௌனம் காத்தார்.

"சொல்லுங்க?"

"இதை நீ எப்படி ஏற்றுக்க போறேன்னு தெரியலைப்பா!"

"..............."

"நிர்பயா உன்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னு சொல்றா!"-அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.

"எ...என்ன..சொல்றீங்க?"

"அவ அதுக்கான காரணம் சொல்ல மறுக்கிறாப்பா!எனக்கு நீ வந்து பேசுனா சரியா இருக்கும்னு தோணுச்சு!அதான் உன்னை வர சொன்னேன்!"-அவன் விழிகள் கசிய ஆரம்பித்தன.

"நான் உன்னை மாதிரி நல்லவனை இழக்க விரும்பலை!போய் பேசு!மனசுவிட்டு பேசுங்க!"-அவன் சற்றும் தாமதிக்கவில்லை அவளது அறையை நோக்கி ஓடினான்.

மனம் முழுதும் இருந்த வேதனைகள் அவனது கோபத்தை தூண்டின.அதே கோபத்தோடு அந்த அறைக்கதவை திறந்தான்.அவன் வருகையை உணர்ந்தவள் கண்களை துடைத்துக் கொண்டாள்.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!"

"இனி பேச எதுவுமில்லை!நீங்க கிளம்புங்க!"-அவன் அந்தக்கதவை சாத்தி தாழிட்டான்.

கோபமாக வந்தவன்,அவளது புஜங்களை இறுகப் பற்றினான்.

"நான் பேசணும்னு சொன்னேன்!"-அவள் கண்களில் ஒருவித அச்சம்!!

"என்னாச்சு உனக்கு?ஏன் கல்யாணம் வேணாம்னு சொன்ன?"

".............."

"பதில் சொல்லுடி!"-அவன் தன் பிடியை இறுக்கினான்.

"ஏன் இப்படி பண்ற?நான் என்ன பண்ணேன்?"-அவள் அழுகை பலமானது!!

"பதில் சொல்லுடி!"

"என்னால உங்க வாரிசை சுமக்க முடியாது!"-பொறுமை இழந்தவள் கத்தி விட்டாள்.

"என்னால உங்களோட வாரிசை சுமக்க முடியாதுங்க!நான் அந்த தகுதியை இழந்துட்டேன்.என்னால ஒரு நல்ல மனைவியா உங்க கூட வாழ முடியாது!"-அவள் கூறி முடித்திருக்கவும் மாட்டாள் ஜோசப் அதற்குள் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.அவனது செய்கை அவளது புத்திக்கு எட்டவில்லை,அதிர்ந்து போய் நின்றாள் அவள்.

"என் காதலை இந்த அளவு தான் மதிப்பிட்டு இருக்கியா?கேவலம் இதுக்காகவா நான் உன் கூட பழகினேன்?எவ்வளவு தைரியம் உனக்கு?இதை ஒரு காரணமா என்கிட்ட சொல்ற?"

".............."

"எனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியும்!"-அவளுக்கு மேலும் அதிர்ச்சி!

"என்ன நினைச்சிட்டு இருக்க நீ?நீயில்லைன்னா இன்னொருத்தி பின்னாடி போயிடுவேனா?இதோப்பார் மனசுல நினைத்தது உன்னை தான்!உன்னை மட்டும் தான்!எவன் எதிர்த்து நின்றாலும் சரி,நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்!உன்னை தவிர வேற யாரையும் கனவுல கூட நினைத்துப் பார்க்க முடியாது!"-அவன் அழுத்தமாக கூறினான்.

"வாரிசை சுமக்க முடியாதாம்!காதல்னா என்னன்னு தெரியுமாடி உனக்கு?எனக்கு உன்னை பார்க்கிற வரை காதல்னா என்னன்னு தெரியாது!ஏன் பாசம்னா என்னன்னு கூட தெரியாது!அப்படிப்பட்ட என்னை மாற்ற தெரிந்த உனக்கு!நான் எப்படிப்பட்டவன்னு கணிக்க தெரியலை!இரண்டு பேர் காதலோட சாட்சி தான் வாரிசு!வாரிசு தான் காதலோட ஆதாரம்னு இல்லை!எனக்கு தேவையில்லைடி!நம்ம காதலுக்கு ஒரு சாட்சி எனக்கு அவசியமே இல்லை.எனக்கு தேவை நீ!நீ மட்டும் தான்!எந்த சூழ்நிலையிலும் உன்னை என்னால விட முடியாது!"-மனதின் அழுத்தங்களை எல்லாம் அவன் கொட்டி தீர்க்க,ஆடிப்போனாள் நிர்பயா.

"உனக்காக தான் பிறந்தேன்!உனக்காக தான் வந்தேன்!உனக்காக தான் வாழ்வேன்!உனக்காக தான் எல்லாமும் செய்வேன்!"-என்றவன் அவளை சிந்திக்கவிடாமல் இழுத்து அவளது இதழ்களை வசப்படுத்திக் கொண்டான்.அவளது மன எண்ணங்களை எல்லாம் தவிடுப்பொடியாக்கியது அவனது செய்கை!!

[இது தான் காதலின் முதல் இலக்கணம்]

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.