(Reading time: 27 - 53 minutes)

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 17 - வத்ஸலா

VTVK

டதடத்து துடிக்கும் இதயத்துடன் நிமிர்ந்தான் பரத். மாப்பிளையை வரவேற்கவென ஒலிக்க ஆரம்பித்தது நாதஸ்வரமும், மேளமும்.

'நிஜமாகவே அவன் வந்து விட்டனா என்ன??? யோசித்தவனின் மனத்திரையில் அன்று மொட்டை மாடியில் அருண் செய்த செயலே வந்து வந்து போனது.

'இல்லை. அவன் வந்தே விட்டாலும் சரி. அந்த முரடனுக்கு உன்னை விட்டுக்கொடுப்பதாக இல்லை நான். எனக்கும் உனக்கும் திருமணம் நடக்கிறதோ இல்லையோ. உன்னை அவனுடன் அனுப்பவதாக இல்லை நான்.' உறுதியாக கூவிக்கொண்டிருந்த இதயத்துடன் வாசல் நோக்கி விரைந்தான் பரத்.

வானத்தில் மழை மேகங்கள் கூடிக்கொண்டிருக்க, மெலிதான இடி சத்தம் எங்கிருந்தோ கேட்டுக்கொண்டிருந்தது.

எல்லாரும் வாசலில் கூடி இருக்க, அங்கே சலசலப்பு. வந்திருந்த அந்த வேனில் மாப்பிள்ளை வீட்டார் யாரும் இல்லை!!! டிரைவர் மட்டும் இறங்கினான் வேனில் இருந்து!!!

அதற்குள் யாரோ நிறுத்த சொல்லி இருக்க வேண்டும்!!! கேட்டுக்கொண்டிருந்த நாதஸ்வர ஓசை சட்டென நிற்க, பதறிப்போய் டிரைவரை நெருங்கினார் அபர்ணாவின் அப்பா..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

தே நேரத்தில் அங்கே உள் அறையில்

'அருண் வரலை அபர்ணா!!!' ப்ரியா சொன்னாள் அபர்ணாவினிடத்தில்.

'வரலையா??? நிஜமாவே வரலையா???' விருட்டென எழுந்து நின்றாள் அபர்ணா.

'ம்ஹூம்..'

'நான் கண்டிப்பா வந்திடுவார்னு நினைச்சேன்..' தோற்றுப்போன தொனியில் சொன்னாள் பெண்.

கருங்கல்லாய் இறுகிப்போனது அபர்ணாவின் முகம். அவளது நம்பிக்கைகள் உடைந்து தூள் தூளாகிப்போய்க்கொண்டிருகின்றன என்ற உண்மை கொதிக்கும் அமிலமாய் கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்குள் இறங்கியது.

அங்கே வாசலில்

'என்னாச்சு யாரும் வரலையா???' பதறிப்போய் கேட்டார் அவள் அப்பா.

'இல்லை சார் யாரும் வரலை..' சொன்னான் அந்த டிரைவர். சுவாசம் அழுந்தும் உணர்வுடன் பரத் நின்றிருக்க மெல்ல நடந்து அவனருகில் வந்து நின்றாள் அஸ்வினி.

வரலையா??? ஏன் என்ன சொன்னாங்க??? அப்பாவின் குரல் அதிர்ச்சி வெள்ளத்தில் மூழ்கி வெளிவந்தது.

'இந்த கல்யாணத்திலே இஷ்டம் இல்லை. காரணத்தை அவங்க பொண்ணு அபர்ணாகிட்டேயே கேட்டுக்க சொல்லுங்கன்னு சொன்னங்க..' என்றான் அந்த டிரைவர்.

'நல்லதா போச்சு..' என்றாள் அஸ்வினி கிசுகிசு குரலில். 'எனக்கு கொஞ்சம் பயம்தான் திடீர்னு அருண் வந்திடுவானோன்னு. அப்படி வந்தா அவ்வளவுதான் அபர்ணா வாழ்க்கை.

அவள் பேசியது அவன் காதில் ஏறியதா என்றே தெரியவில்லை. அபர்ணாவின்  அப்பாவை பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் பரத். ஒரு மகளின் தந்தையாக அவர் எந்த மனநிலையில் இருப்பார் என நன்றாக உணர முடிந்தது பரத்துக்கு. அவன் அடி மனதில் ஒரு வலி பிறந்ததும் நிஜம்.

'இறைவா அவருக்கு தைரியத்தை கொடு...' .

'அபர்ணாவை கேக்குறதா???' என்றார் அவர்.

என்ன நடக்கிறது என்று புரியவில்லை தான் அவருக்கு. இருந்தாலும் சட்டென மன தைரியத்தை இழந்து விடவில்லை அபர்ணாவின் அப்பா.

காலையிலிருந்தே அவர்களை கைப்பேசியில் அழைத்துக்கொண்டேதானே இருக்கிறார் அவர். அந்த அழைப்பை கூட ஏற்க முடியாத அளவுக்கு, டிரைவரிடம் சொல்லி அனுப்பும் அளவுக்கு என்ன நடந்ததாம்??? எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்???' அவர் முகத்தில் கோப ரேகைகளே நிறைந்திருந்தன.

அந்த டிரைவரிடத்தில் என்ன விவாதிப்பதாம்??? சட்டென திரும்பி உள்நோக்கி நடந்தார் அவர்.,

இறுகிக்கிடந்த இதயத்துடன் அவரை பரத் பின் தொடர அவனுடனே அஸ்வினி நடக்க, அஸ்வினியையும், பரத்தையும் பார்த்தபடியே அவர்கள் பின்னால் நடந்தார் அபர்ணாவின் அம்மா.

'நான் தாலி கட்டும் போது உங்க அக்கா அழுவாளா அஸ்வினி???' சற்று முன் கேட்டானே  அவன்!!! அப்படி என்றால் இவர்கள் இருவரும் திட்டம் போட்டு ஏதேனும் செய்துக்கொண்டிருக்கிறார்களோ??? அவரை குடைந்தன பல கேள்விகள்.

பரத்தின் முகபாவமே 'அப்படித்தான் இருக்க வேண்டும்" என்ற பதிலை கொடுத்துக்கொண்டிருந்தது அம்மாவுக்கு. ஆனால் எதையுமே வெளிக்கட்டிக்கொள்ளவில்லை அவர்.

'சரி இவர்கள் போடும் திட்டம் ஒரு புறம் இருக்கட்டும். தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் வரை  கொண்டு வந்து விட்டு அவளை தவிக்க விடுபவன் எப்படி பட்ட மனிதன்???' அருணை நினைக்கையிலேயே கசந்து வழிந்தது அம்மாவுக்கு.

அப்போதுதான் மண்டபத்தினுள் நுழைந்தான் விஷ்வா. வாசலில் கூடி இருந்தவர்களின் முக பாவங்களே ஏதோ ஒன்று சரி இல்லை என்பதை அவனுக்கு உணர்த்தின. விறுவிறுவென உள்ளே நுழைந்தான் அவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.