(Reading time: 27 - 53 minutes)

ந்த நிலையில் அங்கே போனால் எனக்கு என்ன மரியாதை கிடைக்கும்??? எல்லாரும் எப்படி பார்ப்பார்கள் என்னை??? கவலை இல்லை. எனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை. பரத் அபர்ணா திருமணம் மட்டும் நடக்க கூடாது. இன்று திருமணம் நின்று விட்டால் போதும் அதன் பின் நான் அவளை சமாதான படுத்திக்கொள்வேன்.

கைப்பேசியை இந்துவிடம் தூக்கி போட்டுவிட்டு, இரவு உடையை மாற்றிக்கொண்டு யாரிடமும் எதையும் சொல்லிக்கொள்ளாமல் தனது இரு சக்கர வாகனத்தை அவன் உதைத்து கிளப்பிய போது நேரம் காலை 8.30.

'உன் அவசர புத்தியினாலும், கோபத்தினாலும் பெருசா எதையோ இழக்க போறே அருண்...' அடிக்கடி சொல்வாளே அம்மா. 'இப்போது அது உண்மையாகி போனதோ???

'நேற்றுகூட அம்மா அத்தனை தூரம் சொன்னாளே அவசரபடாதே அருண். கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் பார்க்கலாம் என. நான் ஒப்புக்கொள்ளவில்லையே!!!' 

சற்று நேரம் நின்றிருந்த மழை இப்போது மறுபடியும் வலுக்க ஆரம்பித்திருந்தது. சாலையில் காலை நேர பரபரப்பில் இங்கமங்கும் வாகனங்கள். வேகமெடுக்க முடியவில்லை அருணால். தடுமாற்றத்துடனே செலுத்திக்கொண்டிருந்தான் வாகனத்தை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

தே நேரத்தில் அங்கே மண்டபத்தில்

பட்டு வேஷ்டியும் சட்டையும் மாலையுமாக மணமேடையில் கம்பீரமாக வந்து அமர்ந்தான் பரத்!!! இதோ அவனருகில் அவனது அமரப்போகிறாள் அவனவள். இது அவனது பல ஆண்டு கால தவம், வேண்டுதல், எதிர்ப்பார்ப்பு ஆசை தவிப்பு, ஏக்கம் எல்லாம் எல்லாம் எல்லாம்.!!!

ஆனால் இன்று அவள் மனநிலை எப்படி இருக்கும்??? அழுது அழுது ரொம்பவும் தளர்ந்து போயிருப்பாளோ??? எப்படி வருவாள் அவள்??? கண்களில் கண்ணீருடனா??? கண்டிப்பாக அப்படித்தானே இருக்கும்!!!

அப்படி இருந்தால் என்னால் அவள் கழுத்தில் தாலி கட்ட முடியுமா??? சந்தோஷமாக புன்னகைக்கா விட்டாலும், அவள் முகத்தில் வருத்தம் இல்லாமல் இருந்தால் கூட போதும்!!!

ப்ரோகிதர் சொல்வதை எல்லாம் அவன் செய்துக்கொண்டிருக்க அவன் பின்னால் அவன் அப்பா அம்மா விஷ்வா என அனைவரும் இருக்க.

'எனக்கு உன்னை பார்க்கணும் கண்ணம்மா.. முதல்லே நீ எப்படி இருக்கேன்னு பார்க்கணும்'   நிமிடத்துக்கு ஒரு முறை அவள் வரவை எதிர்ப்பார்த்து தேடிக்கொண்டே இருந்தன பரத்தின் கண்கள்.

சிக்னல்!!! ஒவ்வொரு சிக்னலிலும் நிறுத்தம். எல்லா வாகனங்களையும் தாண்டி பறக்கவும் இயலவில்லை அருணால். நேரம் கடந்துக்கொண்டே இருக்கிறது. ஒன்பது மணிக்கு முஹூர்த்தம் ஆயிற்றே??? இப்போது நேரம் எட்டே முக்கால்??? இப்போது என்ன செய்வது???

ஒரு முடிவுக்கு வந்து வண்டியை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு அவசரமாக அபர்ணாவின் எண்ணை அழைத்தான் அருண். அங்கே மண்டபத்தில் கைப்பேசி அவளது கைப்பைக்குள் ஒரு மூலையில் கிடைக்கிறது. அது ஒலிப்பது கூட யார் காதிலும் விழவில்லை.

திரும்ப திரும்ப திரும்ப திரும்ப முயன்றுகொண்டே இருக்கிறான் அருண். ஆனாலும் அவனுக்கு தோல்வியே!!!

சில நாட்களுக்கு அவள் என்னிடம் பேசிவிடும் தவிப்பில் மறுபடி மறுபடி என்னை அழைத்தாளே??? எத்தனை அலட்சியம் எனக்கு??? எப்படி துண்டித்தேன் அவள் அழைப்பை!!!

அன்று அந்த மொட்டை மாடியில் எத்தனை கேவலாமாக நடந்துக்கொண்டேன். அதன் பிறகும் என்னிடம் பேசத்தானே செய்தாள் அவள்.

நேற்று கூட எனது அழைப்புக்காக அவள் காத்திருந்து காத்திருந்து தோற்றிருப்பாள். அழைத்து அழைத்து பார்த்திருப்பாள். நான் அணைத்து வைத்திருந்தேனே என் கைப்பேசியை!!!

நமக்கு சொந்தமான ஒன்று நமக்கு அது சொந்தமாக இருக்கும் வரை, அது சொந்தமாக இருப்பதாலேயே அதன் அருமை நமக்கு தெரிவதில்லையே. இன்று கையை விட்டு போய்விடுமோ என்று தோன்றும் போது மனம் தவிக்கிறதே!!!

மறுபடியும் வண்டியை கிளப்பிக்கொண்டு பறந்தான் அருண்.

ங்கே மண்டபத்தில்

ஒவ்வொரு நொடியும் நத்தை வேகத்தில் நகர்வது போல் இருந்தது பரத்துக்கு. ஓடி சென்று அவள் முகம் பார்த்துவிட துடித்தது அவன் மனம்.

'போதுமடி அலங்காரமெல்லாம். எதுவும் வேண்டாம் கிளம்பி வா. ஒரே ஒரு கீற்று புன்னகையை மட்டும் சுமந்து வா கண்ணம்மா எனக்கு அது போதும்..' தவித்து தவித்து சுவாசித்துக்கொண்டிருந்தான் பரத்.

வந்தது அந்த நிமிடம்!! அரக்கு நிற சேலையும், மணமணக்கும் பூச்சரங்களும், மின்னும் நகைகளும், அழகு மாலையுமாய் மேடையை நோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தாள் அபர்ணா!!! அவள் பின்னால் அஸ்வினியும் அவள் அம்மாவும்!!!

மேடை ஏறி அவனருகில் வந்து அமர்ந்தாள் அபர்ணா.. சத்தியமாய் உயிர் அவன் வசம் இல்லை. அவசரமாய், அவசரம் அவசரமாய் அவள் முகத்தில் புன்னகை கீற்றை தேடுகின்றன அவன் கண்கள்.

எந்த விதமான வருத்தமோ, கோபமோ, கண்ணீரோ, சந்தோஷமோ இல்லாத ஒரு நிர்மலமான பாவம் மட்டுமே குடி இருந்தது அவள் முகத்தில். அவளிடம் கண்ணீர் இல்லை என்பதே அவனுக்கு ஒரு மிகப்பெரிய ஆறுதல்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.