(Reading time: 27 - 53 minutes)

சின்ன புன்னகையுடன் அவர் பேசுவதையே பார்த்திருந்தான் விஷ்வா.

'அன்னைக்கு விஷ்வா கல்யாணம் பத்தி பேசினோம். நியாயமா உன் கல்யாணம் பத்திதான் முதலிலே யோசிச்சு இருக்கணும். அம்மாவுக்கு அப்போ தோணலை கண்ணா. உனக்கு அபர்ணாவை பிடிக்கும்ன்னா சரின்னு சொல்லுப்பா. இனிமேலாவது உனக்கு வாழ்க்கையிலே நல்லதே நடக்கட்டும்..' இது அவன் அம்மா.

'எனக்கு முழு சம்மதம்..' என்றான் பரத் அவள் அம்மாவை பார்த்து 'ஆனா அபர்ணா என்ன சொல்றா. நீங்க அவ கிட்டே பேசினீங்களா??? அவளை யாரும் கட்டாய படுத்தாதீங்க. நான் அவ மனசு மாறி வர வரைக்கும் கூட வெயிட் பண்ண தயார்...'

'இல்ல பரத்..' என்றார் அவன் அப்பா. 'ஒரு பொண்ணை மணமேடை வரைக்கும் கொண்டு வந்தாச்சு. இனிமே எல்லாத்தையும் கலைச்சிட்டு திரும்பி போறது அவ்வளவு நல்லதில்லை. தைரியமா சரின்னு சொல்லு எல்லாம் சரியா நடக்கும்..'

'எல்லாவற்றையும் கலைத்தது அவன்தானே!!!' உள்ளுக்குள் உறுத்தியது அவனுக்கு. அதற்கு மேல் மறுப்பு சொல்வதற்கும் தோன்றவில்லை.

'சரிப்பா..' தலை அசைத்தான் பரத்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

ஒரு புன்னகையுடன் எழுந்து அவனருகில் வந்து அவனை நோக்கி கை நீட்டினான் அஷோக். பரத் எழுந்து அவன் கையை பற்றிக்கொள்ள அவனை தன்னோடு சேர்த்துக்கொண்டான் அஷோக்.

'உங்களுக்கு அப்பூவை கொடுக்கறதிலே எனக்கு பெர்சனலா ரொம்ப சந்தோஷம்.. உங்களை கல்யாணம் பண்ண பிறகு உங்க அன்பிலே அவ எங்க எல்லாரையும் மறந்திடுவா. அது மட்டும் நிச்சியம். அதனாலே உங்ககிட்டே ஒரே ஒரு ரெக்வெஸ்ட். அப்பப்போ எங்களை பத்தி அவளுக்கு கொஞ்சம் ஞாபகப்படுதிக்கிட்டே இருங்க. ப்ளீஸ்..'

'மை காட்..' மலர்ந்து சிரித்தான் பரத். அங்கே எல்லரிடத்திலுமே அழகான சந்தோஷம் பரவியது. ஆனால் அபர்ணா??? பரத்தின் அடி மனதில் அதே உறுத்தல் மீண்டும் மீண்டும்!!!

சில நிமிடங்களில் அவர்கள் எல்லாரும் அங்கிருந்து அகல உள்ளே வந்த விஷ்வாவின் அருகில் ஓடி வந்தான் பரத்.

'அபர்ணா என்னடா சொன்னா??? நீ பேசினியா அவகிட்டே???

'அவளுக்கென்ன??? அவளுக்கும் சம்மதம்' என்றான் விஷ்வா கைப்பேசியில் எதையோ துழாவியபடியே .

'சந்தோஷமா சரின்னு சொன்னாளா. ப்ளீஸ் என்னை பார்த்து சொல்லு விஷ்வா..' பரத் கவலை படர்ந்த குரலில் கேட்க நிமிர்ந்தான் விஷ்வா.

'டேய்...இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்ல??? அவ இப்போ இருக்கிற மன நிலை உனக்கு தெரியும். ஆனா நீ மட்டும்தான் அவ சந்தோஷத்தை அவளுக்கு திருப்பி கொடுக்க முடியும். இது எங்க எல்லாருக்கும் புரிஞ்சது. ஏன் அவளுக்கு கூட புரிஞ்சு இருக்கலாம். அதனாலேதான் இந்த கல்யாணத்தை அவ மறுக்கலை. நீ குழப்பிக்காதே. இப்போ தூங்கு. காலையிலே நீ ஃபிரெஷ்ஷா இருக்கணும்...' படுத்துவிட்டான் விஷ்வா.

ரத்துக்கும் உறக்கத்துக்கும் வெகு தூரம்!!!.

'அழைக்கலாமா அவளை??? அழைத்து கேட்கலாமா??? என்ன கேட்பதாம்??? இந்த திருமணத்தில் உனக்கு சம்மதமா என்றா??? இந்த கேள்வியில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா??? வேறே என்ன பேசுவதாம்???

கைப்பேசியை எடுப்பதும் கண்ணம்மா என்ற பெயரில் அவன் பதித்து வைத்திருந்த அவள் எண்ணை விரல்களால் வருடிப்பார்ப்பதும், திரும்ப வேண்டாம் என்ற முடிவில் கைப்பேசியை  கீழே வைப்பதும் மட்டுமே அவன் வேலையாக இருந்தது.

'இரவு கடந்திருந்தது. மெலிதான தூறலுடன் அழகான காலையாக விடிந்திருந்தது அன்றைய பொழுது.

'குட் மார்னிங் ப்ரதர். பெஸ்ட் விஷஸ்..'

அன்றைய தினத்துக்கான முதல் வாழ்த்து விஷ்வாவினுடையதாகவே இருந்தது. 'ஒன்பது மணிக்கு முஹூர்த்தம். மணி இப்போவே ஆறாச்சு. ரெடி ஆகு பார்க்கலாம்  மட மடன்னு..' என்றபடியே கையிலிருந்த காபியை பரத்தை நோக்கி நீட்டினான் விஷ்வா.

'அபர்ணா எழுந்திட்டாளாடா??? நைட் தூங்கினாளா??? உனக்கு தெரியுமா???' அவள் அறைக்கு சென்று அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வரும் தைரியம் கண்டிப்பாக இல்லை பரத்துக்கு.

அதெல்லாம்  எழுந்தாச்சு. நீ ரெடி ஆகுற வழியை பாரு..' பட்டு வேஷ்டி சட்டையை அவனிடம் கொடுத்துவிட்டு போய்விட்டான் விஷ்வா.

தயாராக துவங்கினான் பரத். சில நிமிடங்கள் கழித்து அறைக்கதவு தட்டப்பட வாசலில் அஸ்வினி.

'அன்னைக்கு நீங்க வாங்கின நகை எல்லாம் கொடுங்க. அதை எல்லாம் போட்டு விட்டு கூட்டிட்டு வரேன் அப்பூவை..'

'அவ சந்தோஷமா இருக்காளா அஸ்வினி???'.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.