(Reading time: 27 - 53 minutes)

'தெல்லாம் சந்தோஷமா வருவா. நீங்க குழப்பிக்காம ரெடி ஆகுங்க..' நகைகளை வாங்கிக்கொண்டு போய் விட்டாள் அவள். 

'என்ன செய்துக்கொண்டிருக்கிறாய்??? எப்படி இருக்கிறாய் கண்ணம்மா நீ??? மணமேடையில் என் முகத்தை பார்த்த மாத்திரத்தில் அழுது விடுவாயா நீ ??? தவிப்பின் அலைகளில் அவன்.

நேரம் காலை எட்டே கால்  மண்டபத்தில் மறுபடியும் கொஞ்சம் கொஞ்சமாக கோலாகலம் திரும்ப துவங்கி இருந்தது.

அதே நேரத்தில் அங்கே அருண் வீட்டில்.......

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

இரவு முழுதும் சரியான உறக்கம் இல்லாத நிலையில் அப்போதுதான் படுக்கையை விட்டு எழுந்தான் அருண். நேற்று முழுவதும் அவனது கைப்பேசி அணைக்கப்பட்டே இருந்தது.

'நியாயமாக இன்று கல்யாண மண்டபத்தில் இருந்திருக்க வேண்டும் நான். அதுதான் முடிந்து போன கதை ஆயிற்றே. அதை பற்றி நான் ஏன் யோசிக்கிறேன். அவளை திருமணம் செய்தால் என்ன கிடைக்க போகிறதாம் பெரிதாக??? எல்லாவற்றுக்கும் பயம் மட்டுமே அவளுக்கு. அதனோடு அந்த விஷயமும் சேர்த்துக்கொண்டால் அவ்வளவுதான். நண்பர்களின் கேலியும், கிண்டலும் தான் எனக்கு மிச்சமாகும்..' இப்படியாக போய்க்கொண்டிருந்தது அருணுடைய எண்ண ஓட்டங்கள்.

ஆனாலும் மறுபடியும் மறுபடியும் அதே எண்ணமே வந்தது 'நியாயமாக இன்று திருமணம் நடந்திருக்க வேண்டுமெனக்கு!!!

'நான்!!! நான்!!! எனக்கு!!!..'  என்பது மட்டுமே பிரதானமாக தோன்றிக்கொண்டிருந்து அவனுக்கு. ஒரு நொடி கூட அவள் என்ன செய்துக்கொண்டிருப்பாள் என்ற எண்ணம் வந்து போகவில்லை அவனுக்கு!!! அந்த இடத்தில்தான் பரத் வித்தியாச பட்டு உயர்ந்து நிற்கிறான் என்று புரியவும் இல்லை அருணுக்கு.

அவ கண்ணிலே தண்ணி மட்டும் வராம பார்த்துக்கோ..' அன்று அம்மா சொன்னாரே அது மட்டும் நினைவுக்கு வரவே இல்லை அவனுக்கு.

தே நேரத்தில் அங்கே அருண் வீட்டு கூடத்தில்தான் அமர்ந்திருந்தாள் இந்துஜா.

'இல்ல உங்க அண்ணன் கல்யாணம் வருதில்ல. 'எது நடந்தாலும் பயப்படாதே. நான் உன்னை விட்டுடுட மாட்டேன்..' அன்று சொன்னனே விஷ்வா. அதற்கான அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாக நேற்றுதான் புரிய வந்தது அவளுக்கு.

'இங்கே அருண் வீட்டாரிடமிருந்து இவளுக்கு கிடைத்த பதில் 'அபர்ணா ஏமாற்றிவிட்டாள்' என்பது.

நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக அவனுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறாள் இந்துஜா.

'என்னவாயிற்று??? என்னவாயிற்று என??? பதில் வரவே இல்லை அவளுக்கு.

இப்போது ஒரு குறுஞ்செய்தி 'பயமா இருக்கு விஷ்வா!!! ப்ளீஸ் ரிப்ளை என்ன ஆச்சு???'

அது விஷ்வாவின் கைப்பேசியை அடைய 'அந்த பயமா இருக்கு விஷ்வா..' அவனை என்னவோ செய்ய,

'அபர்ணாவுக்கும் எங்க அண்ணன் பரத்துக்கும் இன்னைக்கு கல்யாணம். டோன்ட் வொர்ரி எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட் சூன்..' விஷ்வா செய்திருக்ககூடாது அதை!!! செய்து விட்டான் அதை!!! குறுஞ்செய்தியை யோசிக்காமல் அனுப்பி விட்டிருந்தான் அவளுக்கு.

பதில் வருவதற்கும் அருண் இந்துஜாவின் அருகில் வருவதற்கும் சரியாக இருந்தது. அவனை பார்த்தவுடன் ஏனோ இந்துஜா கொஞ்சம் திகைக்க

'யார் மெசேஜ்..' என்றான் சுருங்கிய முகத்துடன். ஏதோ ஒரு பொறிதட்ட 'விஷ்வாதானே..' என்றபடி பிடுங்கி விட்டிருந்தான் கைப்பேசியை.

'அபர்ணாவுக்கும் எங்க அண்ணன் பரத்துக்கும் இன்னைக்கு கல்யாணம். டோன்ட் வொர்ரி எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட் சூன்..'

'என்னது??? பரத் தாலி கட்டப்போகிறானா அவளுக்கு!!!! பேரதிர்ச்சி அருணுக்கு.

பரத் தாலி கட்டப்போகிறான் என்றால் ஒரு வேளை நடந்தது எல்லாம் அவன் வேலைதானா??? எப்படி இதை யோசிக்க மறந்தேன்??? திடீரென புதிதாய் ஒரு கேள்வி அவனுக்குள்ளே

'அப்படி என்றால்??? அப்படி என்றால்??? அவன் என்னை ஏமாற்றி விட்டானோ.??? இந்துஜா அவனை பயத்துடனே பார்த்திருக்க அருண் மனம் தாறுமாறாக யோசிக்க துவங்கியது.

'ஒரு வேளை நேற்று காலையில் என்னிடம் பேச வந்தது அபர்ணாவே இல்லையோ. அஸ்வினியாக இருக்குமோ???' அவனுக்கு இப்போது தட்டியது மின்னல்.

'ஆம் வந்தது அஸ்வினியே தான். நேற்று அவள் வந்தபோது அவள் விரல்களை கவனித்தேனே. அதில் நீளநீளமான நகங்கள் இருந்தனவே. எப்போதுமே அபர்ணா நகங்களை நீளமாக வளர விட்டதே இல்லையே. நேற்றே இது வித்தியாசமாக பட்டதே. எனக்கு. அவள் சொன்ன விஷயத்தின் தாக்கத்தில் இது என் மனதில் பதியவில்லையே. அப்போது தோன்றவில்லையே இது!!! அப்படி என்றால் அவள் சொன்னது எல்லாம் பொய்யா??? '  படபடவென கேள்விகளும் பதில்களும் அவனுக்குள்ளே.

போயாக வேண்டும். உடனே மண்டபத்துக்கு சென்றாக வேண்டும்' பரபரத்தான் அருண்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.