(Reading time: 27 - 53 minutes)

'சில நிமிடங்கள் கடக்க 'ப்ளீஸ்.. எல்லாரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்க. என்னை தனியா விடுங்க..' என்றாள் அபர்ணா. தலை வெடித்து விடும் போல் தோன்றியது அவளுக்கு.

'தனியா என்ன பண்ண போறே??? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..' அவளது அம்மா பதற..

'அம்மா... நான் ஒண்ணும் கோழை இல்ல ஒண்ணும் பண்ணிக்க மாட்டேன். வேணும்னா ப்ரியா என்கூட இருக்கட்டும் நீங்க எல்லாரும் கொஞ்ச நேரம் என்னை விடுங்க... அதுக்கு அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்..' குரல் கரைய சொன்னாள் பெண்.

வேறு வழி இல்லாமல் எல்லாரும் நகரப்போக

'அஸ்வினி..' அழைத்தாள் அபர்ணா. அஸ்வினி திரும்ப

'அதுதான் எல்லாம் முடிஞ்சது இல்லையா??? என் போனை என்கிட்டே கொடுத்திடேன் ப்ளீஸ்..'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз…!

படிக்க தவறாதீர்கள்..

'எதை மனதில் வைத்துக்கொண்டு இப்படி பேசுகிறாள்??? நா வறண்டு போனது அஸ்வினிக்கு. 'பேசாமல் கைபேசியை அவளிடம் நீட்டிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் அஸ்வினி.

ப்ரியாவை தவிர மற்ற எல்லாரும் அந்த அறையை விட்டு வெளியேற கதவை சாத்திக்கொண்டாள் அபர்ணா. அந்த அறைக்கு வெளியே இருந்த ஒரு நாற்காலியில் கண் மூடி சாய்ந்திருந்தான் பரத்,.

'என்னாச்சு ஏன் இவ்வளவு டல்லா வந்து உட்கார்ந்துடீங்க???' என்றபடியே அவனருகில் வந்தாள் அஸ்வினி. 'எல்லாம் நல்லதுக்குதான். கவலை படாதீங்க. ப்ரியா அக்காவுக்கு நல்ல ஃப்ரெண்ட். கண்டிப்பா நல்ல அட்வைஸ் கொடுப்பாங்க. எல்லாம் சரியா நடக்கும். எழுந்து வாங்க

கண் திறந்து ஒரு பெருமூச்சுடன் புன்னகைதான் அவன். 'நீ போம்மா... நான் கொஞ்ச நேரத்திலே வரேன்..'  அவன் சொல்ல அங்கிருந்து நகர்ந்தாள் அஸ்வினி.

'அபர்ணா இப்படி மயங்கி விழுவாள் என நினைக்கவே இல்லை பரத். அவளது கண்ணீரையே பொறுத்துக்கொள்ள முடியாதவனால் இதை கொஞ்சம் கூட ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.

வெளியே இடியும், மழையும் போட்டிப்போட்டு விளாசிக்கொண்டிருக்க அவனது உள்ளமும் அதற்கு இணையாக குமறிக்கொண்டுதான் இருந்தது.

'சாரி கண்ணம்மா. உன்னை கஷ்டப்படுத்திட்டேன் நான்..'  மானசீகமாக அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்தான் அவன். இருப்பினும் ஆற மறுத்தது அவன் உள்ளம்.

'துரோகம் செய்திருக்கிறேன் அவளுக்கு. கண்டிப்பாய் துரோகம்தான் செய்திருக்கிறேன். துரோகம் செய்துவிட்டு அவளை காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரிவதில் என்ன புண்ணியம்???  உண்மைகள் ஒரு நாள் அவளுக்கு தெரிய வரும். அப்போது அவள் 'உங்களை எவ்வளவு நம்பினேன்' என ஒரே ஒரு முறை கேட்டால் கூட போதும், நான் செத்து விடுவேனே!!!

'என்ன செய்வது??? என்ன செய்வது இப்போது???' மனதிற்குள் பல நூறு அலைகள் மோதி மோதி விலகின. சில நிமிட யோசனை. பின் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தவனாக எழுந்தான் பரத்.

ரை மணி நேரம் கடந்திருந்தது.

அந்த மண்டபத்தை ஒட்டியே பெசன்ட் நகர் கடற்கரை!!! மழை பெய்துக்கொண்டிருக்க கடற்கரையில் ஆள் நடமாட்டம் இல்லை. மழை நீர் உடல் நனைக்க நனைக்க, அலை ஓரத்தில் நடந்துக்கொண்டிருந்தான் பரத். சாரலிலும், காற்றிலும் உள்ளக்கொதிப்பு, அழுத்தம் எல்லாமும் ஆறிப்போவதைப்போல் ஒரு உணர்வு. எவ்வளவு நேரம் அப்படி நடந்தானோ ???

திடீரென ஒலித்தது கைப்பேசி. மறுமுனையில் விஷ்வா.

'எங்கேடா இருக்கே..'

'இங்கே பீச்லே...'

'மழையிலே பீச்லே என்ன பண்றே???"

'இல்லடா.. கொஞ்ச நேரம் மழையிலே நின்னா நல்லா இருக்கும்னு தோணிச்சு அதான்..'. வரேன். கொஞ்ச நேரத்திலே வரேன்...' துண்டித்தான் அழைப்பை.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவன் பின்னாலிருந்து விஷ்வாவின் குரல்

'இங்கே மழையிலே என்னடா பண்றே.. உன்னை எவ்வளவு நேரமா தேடறேன் நான்..'

திடுக்கென திரும்பினான் பரத். கையில் குடையுடன் நின்றிருந்தான் விஷ்வா.

'மழையிலே நின்னா மனசு ஆறிப்போயிடும்னு பாக்குறியா. அதெல்லாம் ஆறாது. சரி அருண் என்ன தப்பு பண்ணான்???' பளிச்சென கேட்டான் விஷ்வா.

உள்ளுக்குள் திடுக்கிடல் பரத்துக்கு. 'அருணா??? உன் கேள்வி புரியலை..' என்றான் பார்வையை திருப்பிக்கொண்டு.

'டேய்.. டேய்.. நீ மூன்னூறு நானுறு கிலோமீட்டர் தள்ளி இருந்தப்பவே நீ என்ன நினைக்கறேன்னு சொன்னவன் நான். இப்போ ஒரே வீட்டிலே ஒரே ரூம்லே என்னோடவே இருக்கே, எனக்கு தெரியாம நீ மூச்சு கூட விட முடியாது.' அழகாய் சிரித்தான் விஷ்வா.

விஷ்வாவின் பக்கம் திரும்ப கூட இல்லை பரத். கடல் அலைகளையே பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.

'சரி சரி வா காருக்கு போவோம்'. அவனுக்கும் சேர்த்து குடை பிடித்தபடி சொன்னான் விஷ்வா. ' அப்புறம் நாளைக்கு மணமேடையிலே இருமிக்கிட்டு உட்கார்ந்திருப்பே...'

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.