(Reading time: 10 - 20 minutes)

வளை மெல்ல நீங்கியவன் அவளது கண்களை உற்றுப் பார்த்தான்.அதில் கண்ணீர் திரண்டிருந்தது.

"கல்யாணத்தை நிறுத்த சொல்லுவ?"

"............"

"நீ சொல்லி தான் பாரேன்!உன்னை என்ன பண்றேன்னு அப்பறம் தெரியும்!நான் ஒண்ணும் முழுசா மாறலை!இன்னும் எனக்குள்ள பழைய ஜோசப் உயிரோட தான் இருக்கான் ஞாபகமிருக்கட்டும்!"-அவளது இடையை பற்றி தன்னருகே இழுத்தான் அவன்.

"அறைந்ததை மனசுல வைத்துக்காதே!வலிக்குதா?"

"..............."-அவன் தான் அறைந்த அதே கன்னத்தில் முத்தமிட்டான்.

அவள் கண்ணீரோடு அவனை அணைத்துக் கொண்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழ் என்று பேர்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"என்னை மன்னிச்சிடுங்க!"

"பண்றதை பண்ணிட்டு மன்னிப்பு வேறயா?தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தையே மன்னிப்பு தான்!உனக்கு தண்டனை இருக்கு!"

"தண்டனையா?"

"ம்...பட்,இப்போ வேணாம்!நிறைய பேருக்கு தெரிந்துவிடும்!கல்யாணம் முடியட்டும் அப்பறம் சொல்றேன்!"

"புரியலையே!"

"அப்பாவியா இருக்கியே செல்லம்..!நான் அப்படி இல்லை.நான் பேட் பாய் தானே!அதான்,அப்பறம் பர்ஸ்னலா சொல்றேன்னு சொல்றேன்!"-சில நிமிடங்களுக்கு முன் பிரளயம் செய்தவர்களா இப்படி அக மகிழ்கின்றனர்??

"குட்நைட் செல்லம்!எதையும் யோசிக்க கூடாது!நான் இருக்கேன்.அது போதும்ல உனக்கு?"

"ம்..."

"அப்போ!எதையும் யோசிக்காம அமைதியா தூங்கு!கனவுல பேசலாம்!புரியுதா?"-அவள் முகத்தில் அவ்வளவு நாணம்!!

"ம்.."

"வரேன்!"-என்றவன் அவள் நெற்றியிலும் இதழ் பதித்துவிட்டு ஓடினான்.[போதும்பா!]

கீழே அமைதியாக இறங்கி வந்தவனை கலவரத்தோடு பார்த்தார் வைத்தியநாதன்.

"என்னப்பா சொன்னா?"

"எங்க கல்யாணம் நடக்கும் தாத்தா!சீக்கிரமே உன் பேத்தியை நான் வந்து கடத்தி போவேன்.அதுக்கான ஏற்பாடுகளை ஆரம்பிங்க!"-என்றவனின் முகத்திலிருந்த புத்துணர்வு வைத்தியநாதனின் மனதினை நிம்மதியடைய வைத்தது.

"னக்கும் என் அப்பாவை பிடிக்கும்!ஆனா,அவருக்கு தான் என்னை பிடிக்காது!"-என்றோ ஒருநாள் நிர்பயா உதிர்த்த சொற்கள் மீண்டும் மீண்டும் அவரது நினைவிற்கு வந்தது.

"எக்ஸ்யூஸ்மீ சார்!"-யாரோ ஒருவரின் அழைப்பில் கலைந்தவர் தன்னை சுதாரித்தார்.

"வா நடராஜ்!"

"சார் ஸ்வீட் எடுத்துக்கோங்க!"

"என்ன விஷேசம்?"-என்றப்படி ஒரு லட்டுவை எடுத்தார்.

"என் பொண்ணு 12வது பாஸ் பண்ணிட்டா!"-அவர் மனதில் சுருக்கென்று தைத்தது.

"சார்?"

"குட்!மேற்கொண்டு என்ன?"

"கலெக்ட்ர் ஆக ஆசைப்படுறா!நம்ம நிர்பயா மேடம் மாதிரி பெரிசா சாதிக்கணுமாம்!"-என்று பூரித்து போனார் அவர்.சங்கரனின் முகத்தில் ஒருவித சலனம்.

"நல்லா படிக்க வை!"

"சரிங்க சார்!"-என்றவர் புன்னகைத்தப்படி வெளியேறினார்.

பெற்ற மகள் தேர்ச்சி அடைந்ததற்கே இனிப்பு வழங்குகிறான்.நான் பெற்ற மகளோ அனைத்திலும் முதலிடத்தை பெற்றவள்!!ஆட்சியர் தேர்விலும் தமிழகத்தில் முதலிடத்தை தட்டி சென்றவள் அல்லவா அவள்??ஆனால்,இதுநாள் வரை அவளது வெற்றியை குறித்து நான் சிந்தித்தும் பார்த்ததில்லையே..!

அதற்கு மேலும் அங்கு அமர அவரது மனம் மறுத்தது.தனது கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினார்.

மனம் முழுதும் ஏதோ ஒரு புது உணர்வு உயிரையே கொன்றது!!

"அப்பா!நான் டிஸ்ட்ரிக் பர்ஸ்ட் வந்திருக்கேன்பா!"

"இப்போ என்ன அதுக்கு?என் நேரத்தை வீணாக்காதே!மரியாதையா போ.இருக்கிற டென்ஷன்ல கொன்னுடுவேன்!"-பழங்கதைகள் அவரை காரை வேகமாக செலுத்த வைத்தது.

ஒருநாள் கூட அவளை நான் சீராட்டியதில்லையே!பின் அவள் எப்படி என்னை பிடிக்குமென்றாள்??அதே சிந்தனையில் இருந்தவர் எதிரே வந்த வாகனத்தை கவனிக்காமல் அதன் மேல் மோதினார்.நல்லவேளையாக பெரும் விபத்தில்லை!!

அதிலிருந்து கோபமாக இறங்கி வந்தாள் நிர்பயா.

"ஏ..யாரது வெளியே வா!"-அவர் மனதில் எங்கிருந்தோ முதல்முறையாக அச்சம் தொற்றிக்கொண்டது.சிறு நடுக்கத்துடனே இறங்கினார்.அவரை பார்த்தவள் முகத்தில் ஒருவித விலகல்!!சில நொடிகள் மௌனம் காத்தவள்,ஏதும் பேசாமல் திரும்பி சென்று தன் காரில் ஏறினார்.காரை வந்த வழியே திருப்பி அங்கிருந்து கிளம்பினாள்.அவளை தடுக்க வேண்டும் என்று மனதுள் அசரீரி ஒலித்தும் அவர் மனம் அப்பணி ஆற்ற அனுமதி வழங்கவில்லை.அது எவ்வாறு வழங்கும்??

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.