(Reading time: 12 - 24 minutes)

17. நிர்பயா - சகி

Nirbhaya

ன்று அந்த சிவன் கோவிலில் விஷேச ஆராதனை நிகழ்ந்துக் கொண்டிருந்தது.

பால்,தயிர்,சந்தனம்,இளநீர் என்று தனித்துவம் வாய்ந்த சிறந்த 18 பொருட்களால் இறைவன் சங்கர நாராயணனுக்கு ஆராதனை நிகழ்த்தப்பட்டது.

"இனி எந்த துஷ்ட சக்தியோட நிழலும் என் நிர்பயா மேலே படக்கூடாது!"-மனமுருக வேண்டினார் பார்வதி.

"த்ரியம்பகம் யஜாமஹே சுகன்திங் புஷ்டி வர்தனம் உர்வாருதமிப வந்தனார் மிருத்யுர் முக்ஷி யமாங்கிருதாம்!"-மஹா மிருத்யுன்ஜெய மந்திரம் உடலையே சிலிர்க்க செய்தது.

அச்சமயம் நிர்பயாவின் கைப்பேசி ஒலிக்க அவள் சப்தமில்லாமல் நகர்ந்தாள்.

"ஹலோ!"

"16 முறை கால் பண்ணிட்டேன்.ஏன் எடுக்கலை?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"என்கூட பேசாதீங்க!"

"எதுக்கு?"

"கோயிலுக்கு கூப்பிட்டா வர மாட்டேன்னு சொல்லிட்டிங்க!"

"ம்கூம்..!அதான் கோபமா?நீயே சொல்லு இதுநாள் ஒருமுறையாவது கடவுளை பற்றி யோசித்தாவது பார்த்திருக்கேனா நான்??"

"அட்லீஸ்ட் சும்மா கூட வந்திருக்கலாமே!"

"நான் ஒரு கேஸ் விஷயமா சென்னைக்கு வந்திருக்கேன் செல்லம்...!"

"ஓ..அப்படி என்ன?என்னை விட முக்கியமான கேஸ்?"

"ஆரம்பிச்சிட்டியா?அம்மா தாயே..!இனி இதுமாதிரி போக மாட்டேன்.ஒருமுறை அடியேனை மன்னித்துவிடு!"

"சரி...மன்னிச்சிட்டேன்!எப்போ ஊருக்கு வருவீங்க?"

"2 நாள் ஆகும்!"

"உடம்பை பார்த்துக்கோங்க!ஒழுங்கா சாப்பிடுங்க!"

"சரிங்க தேவி..."

"லேட் நைட் முழிக்காதீங்க!டென்ஷன் ஆகாதீங்க!"

"ஆகட்டும்!"

"எட்வர்ட் எங்கே இருக்கான்?"

"அவன் வீட்டில தான் இருப்பான்."

"சரி...ஜாக்கிரதை!"

"எவ்வளவு அக்கறை என் மேலே?சரி அப்பறம்?"

"அப்பறம்?"

"வேற என்ன?"

"எதுவுமில்லையே...!"

"இல்லையா?"

"நான் கோவில்ல இருக்கேன்!"

"ஓ காட்...!அப்போ வீட்டுக்கு போன பிறகு?"

"போனை வைக்கிறீங்களா?"

"ப்ளீஸ்...!"

"ஊருக்கு வாங்க!அப்பறம் பார்க்கலாம்!"

"ப்ச்...2 நாள் ஆகும்!"

"பரவாயில்லை...!"

"இரு...உன்னை வந்து கவனிக்கிறேன்!"-என்றவன் இணைப்பைத் துண்டித்தான்.அவனது குழந்தைத்தனம் அவளது முகத்தில் நாணத்தை வரவழைத்தது.சூழலை சுதாரித்து திரும்பியவள் அதிர்ந்துப் போனாள்.சில அடிகள் தொலைவில் பல்லவியும்,விசாலாட்சியும் நின்றிருந்தனர்.

விசாலாட்சி அவளருகே அக்கறையோடு வந்து அவளது கன்னத்தை வருடினார்.

"எப்படி இருக்கடா?"

"நல்லா இருக்கேன் பாட்டி..!"

"உடம்புக்கு பரவாயில்லையா?"

"ம்..பரவாயில்லை..!"-அவளது விழிகள் பல்லவியை பார்த்துக் கொண்டிருந்தன.

"எங்களை மன்னித்துவிடும்மா!எங்களால நிறைய கஷ்டத்தை அனுபவித்துட்ட!"

"பெரிய வார்த்தை எல்லாம் வேணாம் பாட்டி!அது உங்களால நடந்த விஷயமில்லை.நான் தான் என் விதிக்கு காரணமாகி இருக்கேன்.என்னால நீங்க உங்க வீட்டு வாரிசை இழந்து இருக்கீங்க!நியாயப்படி நான் தான் மன்னிப்புக் கேட்கணும்!ஆனா,என் மனசுல இருக்கிற வைராக்கியம் அதை செய்ய விடாது!"-பல்லவியின் விழிகள் கூர்மையாகின.

"நான் என்னோட தனிப்பட்ட விருப்பத்தை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போறவ தான்.அந்த வைராக்கியம் தான என்னை உயிரோட மீட்டு வந்திருக்கு!இதை நான் சொல்றதுக்கு மன்னித்துவிடுங்க!நான் இதோட நிற்க மாட்டேன்.இனி இழக்க எதுவும் இல்லைங்கிற பட்சத்துல நான் எதுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை பாட்டி!நான் உங்க பையனையும் சரி,உங்க பேரனையும் சரி எந்த ஜென்மத்திலும் மன்னிக்க மாட்டேன்!"-இதைக்கேட்ட பல்லவி ஆடிப்போனார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.