(Reading time: 12 - 24 minutes)

"சார் என் பெயர் ஜோசப்!நான்..."-இறைவன் நீலக்கண்டனின் ஆலயத்தின் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு உரையாடினான் ஜோசப்.

"தெரியும் தம்பி!கலெக்டர் எல்லாத்தையும் சொன்னாங்க.இதோப் பாருங்க தம்பி!என்னால உங்க விருப்பத்தை ஈடு செய்ய முடியாது.இந்தக் காலத்துல ஜாதி இல்லை,மதம் இல்லைன்னு பேசலாம்.அது கேட்க நல்லா இருக்கும்!ஆனா,இது மாதிரி கலப்பு திருமணம் பண்ணா அவமானப்படுத்தவே நாலு பேர் கிளம்பி வருவாங்க!நான் ஒண்ணும் இருக்கப்பட்டவன் இல்லை.நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் தான்.மானம்,அவமானத்துக்கு பயப்பட வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்.என்னை மன்னிச்சிடுங்க!என்னால இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது!"-ஜோசப் மௌனம் காத்தான்.

"மதம் மட்டும் தான் உங்க முடிவுக்கு காரணமா?உங்க பொண்ணோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு தரலையா?'

"மதிப்பு கொடுத்தேன்.கடைசியில அவ,அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி,ஒருத்தனை காதலிக்கிறேன்னு வந்து நிற்கிறா!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"நாளைக்கு வேற ஒருத்தனுக்கு அவளை கல்யாணம் செய்தா,தன் கடந்த காலத்தை அவ மறந்துட்டு வாழுவான்னு நினைக்கிறீங்களா?"

"காலம் எல்லாத்தையும் மாற்றிடும் தம்பி!"-மிக சாதுர்யமாக வாதாடும் ஜோசப்,இப்போதும் பேச இயலாமல் தவித்தான்.

"நான் வரேன் தம்பி!"

"ஸாரி சார்!நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்!இந்த விஷயம் முதலிலே எனக்கு தெரிந்திருந்தா,என் தம்பியை கண்டித்து வைத்திருப்பேன்.மன்னிச்சிடுங்க..."

"நான் பேசுனதை தப்பா எடுத்துக்காதீங்க!என் நிலைமையை புரிந்துக்கோங்க!"

"புரியுது சார்!அவன் அம்மா இல்லாம வளர்ந்த பையன்,அதான் உங்க பொண்ணோட பாசம் அவனை திசை மாற்றிடுச்சு!உங்க பொண்ணுக் கூட இருந்தா ஆயுசுக்கும் சந்தோஷமா இருக்கலாம்னு நம்பிட்டான்.இனி அவனால உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது!"-சற்று தூரத்தில் இருந்து இதைக்கேட்ட எட்வர்டுக்கும்,நிர்பயாக்கும் பகீரென்றது.

"உங்க தம்பியை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.அவரை மாதிரி நல்லவர் தேடினாலும் கிடைக்க மாட்டாங்க!நீங்க கூப்பிட்டு பேசும் போதே நீங்களும் நல்லவர்னு தெரியுது!ஆனா.."

"புரியுது சார்!காலம் முழுக்க நாம அடுத்தவங்களுக்காக தான் வாழணும்!நம்மளோட சந்தோஷம் நமக்கு இரண்டாம் பட்சம் தான்!ஆனா,இப்போதும் இருக்கிற நம்பிக்கையில கேட்கிறேன்.கொஞ்சம் யோசித்துப் பாருங்க!எட்வர்ட் எந்த நேரத்திலும் உங்க பொண்ணை கலங்க விட மாட்டான்."

"............"

"அதீதி மேலே அவன் உயிரையே வைத்திருக்கான்.இப்போ ஒருவேளை அவ கிடைக்கலைன்னா அவன் வாழ்க்கை எப்படி மாறும்னு தெரியலை!"

"................"

"உங்களுக்கு என்ன சார் அவனோட மதம் தானே பிரச்சனை?நான் அவனை மதம் மாற சொல்றேனே!"-ஜோசப்பின் வார்த்தைகள் அவர் மனதை தைத்தது.

"கொஞ்சம் யோசித்து பாருங்க!"

"நியாயப்படி பொண்ணோட வீட்டில தான் இப்படி கெஞ்சுவாங்க!நான் இங்கே சம்மதிக்க கூடாதுன்னு தான் வந்தேன்!ஆனா,உங்க பேச்சை கேட்டதும் கன்னத்துல அறையுற மாதிரி இருக்கு!நாங்க அந்தக் காலத்திலேஇருக்கோம்!"-ஒரு கனத்த மௌனம்.

"சரிப்பா!நான் என் மனைவிக்கிட்ட ஒருமுறை கலந்து பேசுறேன்!ஆனாலும் ஒரு விஷயம்!"

"சொல்லுங்க!"

"எட்வர்ட் ஒரு நல்ல நிலைமைக்கு வர வரையில் என் மகளை நான் தர முடியாது.2 வருஷம் போகட்டும்!அதுக்கு அப்பறம்,எனக்கு இது சரின்னு தோணுச்சுன்னா,நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.இல்லையா??என் பொண்ணை விட்டு அவன் போயிடணும்!"

"சார்!நீங்க இவ்வளவு இறங்கி வந்ததே பெரிசு!இந்த 2 வருஷம் கூட எட்வர்ட் அதீதிக்கூட பேச மாட்டான்!அவளை பார்க்க மாட்டான்.நீங்க எதிர்ப்பார்க்கிற நிலைமைக்கு வந்துட்டு அவன் திரும்பி வருவான்!அப்படியும் நீங்க விரும்பலைன்னா,உங்க பொண்ணு நிழலைக்கூட அவன் நெருங்க மாட்டான்.என்னை நம்புங்க!"

"சரிப்பா!அப்போ நான் வரேன்!"

"வாங்க சார்!"-ஆனந்தமாக விடையளித்தான் ஜோசப்.

மாற்றம் கொண்ட நெஞ்சம் மாற்றத்தை அளிக்க என்றும் தயக்கம் கொண்டதில்லை அல்லவா???

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.