(Reading time: 12 - 24 minutes)

"ரேன் பாட்டி!"-என்று முன்னேறியவள் சில நொடிகள் பல்லவியின் அருகே நின்றாள்.எதிர் எதிர் துருவங்களாய் எதிர்திசை பார்த்து நின்றனர் இருவரும்!!

"எனக்கு உபகாரம் பண்ணணும்னா உயிரை விட்டுவிடுன்னு கேட்டிங்க!நானும் அந்த உபகாரம் செய்ய எவ்வளவோ முயற்சி பண்ணேன்.ஆனா,ஈடு இணை இல்லாத ஒருத்தனோட காதல் என்னை திரும்ப கூட்டிட்டு வந்துடுச்சி!இனி,நானே நினைத்தாலும் அந்தக் காதலுக்கோ,என்னை வளர்த்தவங்க என் மேலே வைத்த அன்புக்கோ என்னால கற்பனையில கூட துரோகம் செய்ய முடியாது!நான் உங்களுக்கும் சரி,உங்க குடும்பத்துக்கும் சரி இந்த ஜென்மத்துல நிம்மதியை தர மாட்டேன்.மன்னித்துவிடுங்க!"-என்று கூறிவிட்டு முன்னேறினாள்.பெரும் அதிர்ச்சி இதயத்தை தாக்க தான் ஈன்ற புதல்வியை திரும்பி பார்த்தார் பல்லவி.அவளது அடி ஒவ்வொன்றும் புது சகாப்தத்தை இயற்றின.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

தோ ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து மூழ்கி இருந்தவளை கலைத்தது அவளது கைப்பேசி.

"ஹலோ!"

"அண்ணி...நான் எட்வர்ட் பேசுறேன்!"

"எட்வர்ட்?என்னப்பா என்ன விஷயம்?"

"அண்ணி நான் உங்களை உடனே பார்க்கணும் அண்ணி!வீட்டுக்கு வாங்க ப்ளீஸ்!"

"என்னாச்சுப்பா?ஏன் பதற்றமா இருக்க?"

"ப்ளீஸ் அண்ணி!உடனே வாங்க!"

"இதோ வரேன்!"-அவசரமாக இணைப்பைத் துண்டித்துவிட்டு மிக அவசரமாக கிளம்பினாள் நிர்பயா.

பதினைந்து நிமிட அவசர பிராயணம் கழித்து....

"எட்வர்ட்?"

"வாங்க அண்ணி!"

"எதுக்கு என்ன வர சொன்ன?என்னாச்சு?"

"அண்ணி...!"-அவன் சில நிமிடங்கள் தயங்கினான்.

"சொல்லுப்பா!"-அவன் பார்வை ஒரு அறையில் நின்றது.அவன் பார்வை சென்ற திசையில் நோக்கினாள் நிர்பயா.அந்த அறையில் இருந்து ஒரு இளம் பெண் வெளி வந்தாள்.

அதுவரை புரியாமல் நின்றிருந்தவள் அதிர்ந்துப் போனாள்.

"எட்!யாரிது?"

"..............."

"சொல்லு...யாரிது?"

"இவ...இவ பெயர் அதிதீ!நாங்க 4 வருஷமா லவ் பண்றோம்!"-மேலும் ஒரு அதிர்ச்சி!!

"இவ வீட்டில இவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்துவிட்டாங்க!அவ,எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்கலை.பயத்துல,இங்கே வந்துட்டா!எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை அண்ணி!அண்ணனுக்கு இந்த விஷயம் தெரியாது.இந்த சூழ்நிலையில எனக்கு எதுவும் புரியலை!நீங்க தான் அண்ணி எதாவது பண்ணணும்!"

"4 வருஷமா லவ் பண்ற!அவர்கிட்ட சொல்லிருக்கலாம்ல!இப்போ என்ன பண்றது?"

"அண்ணி...எனக்கு பயமா இருக்கு அண்ணி!அண்ணனுக்கு இது தெரிந்தால் கொன்னுடுவார்!"-அப்பெண் அதிதீ கண்ணீரோடு எட்வர்ட்டை பார்த்தாள்.சில நிமிடங்கள் கனத்த மௌனம்.ஒருவர் விடும் மூச்சு மற்றவருக்கு கேட்கும் அளவு மௌனம்!!

அந்த மௌனத்தை கலைத்தது நிர்பயாவின் கைப்பேசி!!

"ஹலோ!"

"செல்லம்...வந்த வேலை முடிந்துடுச்சும்மா!ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு புதன்கிழமை காலையில கிளம்பி வந்துடுவேன்!"

"என்னங்க!"

"என்னம்மா?என்னாச்சு?குரல் ஒரு மாதிரி இருக்கு?"

"நீங்க கொஞ்சம் உடனே கிளம்பி வர முடியுமா?"

"ஏன்?எதாவது பிரச்சனையா?"

"இல்லை...நீங்க வாங்க சொல்றேன்!"-ஜோசப்பின் மனதில் ஏதோ தவறாகப்பட்டது.

"சரி...நான் வரேன்!எட்வர்ட்டை கோயம்புத்தூர் ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்பிட சொல்லு!"

"சரிங்க..."

"எதுவும் பிரச்சனை இல்லையேம்மா?உடம்புக்கு எதாவது பண்ணுதா?"

"அதெல்லாம் இல்லைங்க...நீங்க பயப்படாதீங்க!"

"சரி...நான் வந்து பேசுறேன்!"-இணைப்புத் தண்டிக்கப்பட்டது.

அவனது மனதில் ஏதோ தவறாகப்பட்டது.உடனடியாக,அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான்.

ன்றிரவு...

நெற்றியில் கை வைத்தப்படி,விழிகளை மூடிக்கொண்டு மௌனமாக அமர்ந்திருந்தான் ஜோசப்.

அதீதியை பத்திரமாக அவள் வீட்டில் ஒப்படைத்தாகி விட்டது.இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே வினா!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.