(Reading time: 15 - 29 minutes)

24. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

Puthir podum nenjam

புதிர் 24

இவன் இதய அறையில்

இனி  கருவறை வாசம்!

நிகழ் காலம்

ஜூனியர் எஞ்சினியர்”, என்ற ஸ்ருதியின் ஐடி கார்ட்டை பார்த்ததும் வந்த நினைவலைகளில் மூழ்கி இருந்தவனுக்கு.. பரணிதரனின் அறிமுகம் வந்ததும்.. அந்த நினைவுக்குள் செல்லவே பின்வாங்கியது மனது!

“பெல்லி பாய் கேட்டது போலவே பரணிதரனை சரியா முப்பதாவது நாள்ல காண்பிச்சார் பாஜி!! அது கூட கோ இன்சிடென்ஸ்ன்னு விட்டுடு.. ஏதேட்சையா பார்க்கிற ஒருத்தரை நினைவு வைக்க முடியுமா? ஆனா, முப்பது நாள் கழிச்சு பார்த்தப்பவும்.. முந்தின நிமிஷம் தான் பார்த்தது போல அப்படியே ஃப்ரஷ்ஷா பரணி முகம்.. அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும்.. அதை அவன் சொன்ன டோன் கூட மறக்கலை!!  அதுக்கு காரணம் என்னவா இருக்க முடியும்? கண்டிப்பா இட் இஸ் லவ் அன்ட் லவ் ஒன்லி! I’m madly in Love with him”

பரணிதரன் மீதிருந்த காதலுக்கு அஞ்சனா சொன்ன விளக்கம் நினைவுக்கு வர.. அப்பொழுது போல இப்பொழுது திட்டினான் பைத்தியக்காரி!!!!! என்று! இவளையும் கஷ்டபடுத்தி எல்லாரையும் கஷ்டபடுத்திட்டாளே!!!!

ஆர்யா அண்ணா மட்டும் இல்லைன்னா என்னவாகி இருக்கும்???!!!!!

இப்பொழுதும் நெகிழ்ந்தது நெஞ்சம் ஆர்யமனை நினைத்து! தன் உடன் பிறந்த அண்ணனிற்கு மேலாக மரியாதையும், பாசமும் அவன் மீது வந்தது அதனால் தானா?

பெருமூச்சு விட்டு கண்களை இறுக மூடித் திறந்தவனையே பார்த்துக் கொண்டிருந்தது ஸ்ருதி வாசனின் பிம்பம்!!!

‘எப்பாடி!!! என்ன முழிடா சாமி இது!’,

அந்த அடையாள அட்டையை சட்டென்று கவிழ்த்து போட்டவன் கண்ணில்  இப்பொழுது மேக்ஸ் சாஃப்ட்டின் தொடர்பு எண் பளிச்சிட்டது!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ன் முழியை வேற எங்காயவது வைச்சு தொலைஞ்சு இருக்க வேண்டியது தானே??? ஏன் பார்த்தே??’

தன்னைத் தானே நொந்து கொண்டிருந்தாள் ஸ்ருதி!!!

அடையாள அட்டை காணாமல் போனதை ரிபோர்ட் செய்ய தன்னுடன் பயிற்சியில் இருக்கும் அபினவ்வுடன் ஹச். ஆரை பார்க்க லிஃப்ட்டில் சென்று கொண்டிருந்த ஸ்ருதிக்கு அந்த அடையாள அட்டையை  எங்கே தொலைத்தோம்.. எப்படி தொலைத்தோம் என்பதை கூட யோசிக்க தோன்றவில்லை!!

சசி எப்பொழுது ஆர்யமனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்றாளோ.. அப்போதிருந்தே அவள் நினைவெல்லாம் அதை சுற்றித் தான் - அதாவது அது பொய்யாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான்... 

அதனால் தான் அபினவ் காதில் விழுந்த சேதியாக ஆர்யமனுக்கும்  கோகிலாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்றதைக் கூட வதந்தி என ஒதுக்க நினைத்தாள்.. ஆனால், இப்பொழுது???

தன் முன்னே அழகு பதுமையாய் நின்று கொண்டிருக்கும் கோகிலா, ஆர்யமன் என்ற பெயரில் உள்ளவனோடு பரிமாறும் வாட்ஸ் ஆப் தகவல்களை தன் கண்ணே   பார்த்து விட்ட பின் அது வதந்தி என்று ஒதுக்க முடியுமா?

காதில் விழும் விஷயத்தை கூட மற்றொரு காது வழியாக கடந்து போய் விடும்! கண்களால் அப்படி முடியாதென்று தானே என்று தானே மூடியோடு வரும் பேக்கேஜ்ஜாக  கண்களைக் கொடுத்திருக்கிறார் கடவுள்!

அதனால் தான், தன் விழியையும் முழியையும் திட்டிக்  கொண்டே ‘இனி எதையும் பார்க்க கூடாது’ என்று கண்களை இறுக மூடிக் கொண்டாள்!

ஆனால், அவள் மூளையோ கண நேரத்தில் தான் படித்த,

“இந்த நிமிஷம் எனக்கு ரொம்ப ரொம்ப தேவையானதை கொடுத்திருக்கே..”

என்ற ஆர்யாவின் தகவலையும்..

“உங்களை ஹேப்பியாக்கும் மந்திரம் உங்க பப்பிக்கு தெரியாம போகுமா”

என்ற கோகிலாவின் பதிலையும் பிரித்து மேய்ந்து விட்டிருந்தது!

மனமோ கோகிலாவின் பதிலை எண்ணி, அதிலும் அதிலிருந்த உங்க பப்பியை கண்டதும்… ஏனோ... சசி அலைபேசியில் பார்த்த அஞ்சனாவின் அந்த துறுதுறுப்பான முகமும் கள்மிஷமற்ற சிரிப்பும் வந்து போக.. அந்த பெண் ஏமாற்றப் படுகிறாளோ??!!!! என்ற கேள்வி பெருங்கவலையாக வேறு எதையும் யோசிக்க விடாது அவள் மனதை ஆக்கிரமித்தது!

ஒரு கால் நொடிக்கும் குறையான நேரத்திற்குள் விரிந்த இந்த எண்ணம்  அவளை உணர்ச்சியின் தாக்கத்திற்குள்ளே இழுத்துக் கொண்ட பொழுது கோகிலாவின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

முதல் ரிங்கிலே அதை எடுத்த கோகிலா, மறுமுனையில் என்ன கேட்டாளோ..

அதே சமயம் லிஃப்ட் கதவும் திறந்து கொள்ள...

“ரேவதி கிருஷ்ணன் அப்பாயின்மென்ட் தானே? ப்ளீஸ் நானே போய்க்கிறேனே!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.