(Reading time: 15 - 29 minutes)

க்ளோபல் ஹாஸ்பிட்டல் பக்கம் தான்! உங்களுக்கு ஏன் சிரமம்?”,

என்று பேசிக் கொண்டே லிஃப்ட்டில் இருந்து வெளியேறி கோகிலா... அதற்கு மறுமுனையில் என்ன கேட்டாளோ..

“ஹய்யோ! அப்படிலாம் இல்லை! உங்க கூடவே வர்றேன்! போதுமா?”, என்று சம்மதித்து அழைப்பை முடித்தாள்!

அவளைத் தொடர்ந்து வெளியேறி... எதிரே இருந்த இருந்த ஹச். ஆர் அறை நோக்கி நடந்த அபினவ்விற்கும் ஸ்ருதிக்கும் அவள் பேசியது சன்னமாக கேட்க தான் செய்தது!

ஸ்ருதியின்  காதிற்குள் அபினவ்,  “க்ளோபல் ஹாஸ்பிட்டல் ரேவதி கிருஷ்ணன் ஒரு பாப்புலர் கைன்னகாலஜிஸ்ட் தெரியுமா? அங்கே போறதை தான் ஆர்யாகிட்ட பேசினாங்க”

என்றான் கிசுகிசுப்பாக! அவன் சொன்ன பின் தான் கோகிலாவை அழைத்தது ஆர்யா தான் என புரிந்தது ஸ்ருதிக்கு!

“விஷயம் வேற எங்கயோ போகுது! அவங்க எப்படி வேணா இருந்துட்டு போறாங்க! ஒருத்தவங்க கேரக்டரை கமென்ட் பண்றது கன் பாயின்ட்ல நிறுத்துறதுக்கு சமம்! வேண்டாம்! இது நமக்கு வேண்டாம்!!! யார்கிட்டவும் இதை பத்தி பேசவும் வேண்டாம்! சரியா??”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அபினவ்வை நோக்கி ஸ்திரமாக சொல்ல அதில் இருந்த உண்மையை உணர்ந்தவனாக அத்தோடு அந்த பேச்சை நிறுத்திக் கொண்டான்.

ஹச். ஆர் வேலையை முடித்து விட்டு மீண்டும் தங்கள்  ட்ரையினிங் அறைக்கே திரும்பிய சமயம் அங்கே ஸ்ருதிக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

அது அவள் தோழி காட்டிய திருமண அட்டை ரூபத்தில் வந்தது. அது அலுவலக நூலகத்தில் இருந்து எடுத்த புத்தகம் ஒன்றில் இருந்ததாக அதை காட்டியவள்,

“மியூசிக்கல் கிரீட்டிங் கார்ட் போல இருக்கு பாரேன்.. கிரியேட்டிவ்வான வெட்டிங் கார்ட்! திறந்து பாரேன்”, என்று கொடுக்க...

அதன் முகப்பில் இருந்த பெயரைப் பார்த்ததுமே பேயறைந்தது போலாகிற்று ஸ்ருதியின் முகம்! அந்த அட்டையைத்  திறந்ததும்,

“ஹெலோ ஃப்ரண்ட்ஸ்! வர்ற ஜனவரி மாதம்... பதினாறாம் தேதி மேகமலையில் வைத்து எங்க மேரேஜ் நடக்க இருக்கு! நீங்க எல்லாரும்  ஃபேமிலியோட கலந்துகிட்டு எங்களை வாழ்த்த வேண்டி அன்போடு அழைப்பது”

ஆண் குரலும் பெண் குரலுமாக மாறி மாறி ஒலித்து விட்டு முடிவில்,

“உங்கள் அஞ்சனாவும் ”, என்ற பெண் குரலைத் தொடர்ந்து.. “பரணியும்”, என்ற ஆண் குரலில் முடிந்தது அந்த ஒலிப் பதிவு.

‘அஞ்சனா அந்த பரணியை மேரேஜ் செய்ய போறேன்னு எவ்வளோ ஹேப்பியா சொல்றாங்க!’

என்ற அந்த யோசனையிலே இருக்க... அறையின்  இன்டர்காம் ஒலித்ததும், அது எடுக்கபட்டு, “ஸ்ருதி உனக்கு ஃபோன்”, என்று அவள் குழுவில் இருப்பவன் அழைப்பதையும் கவனத்தில் கொள்ளவே இல்லை.

‘இவன் தான் ஹஸ்பன்ட் ன்னு ஃபிக்ஸ் பண்ணி... பத்திரிக்கை அடிச்சு கல்யாணம் வரை வந்த  பிறகு வேற ஒருத்தனை மேரேஜ் செய்ற நிலை வந்தா??’

அதுவும் அவளை மணம் முடித்த ஆர்யமன் பற்றி நல்ல விதமாக எதுவுமே இவள் காதுகளுக்கு எட்டவில்லையே! அஞ்சனா மீது உண்டான பரிதாபத்தில்,

“பாவம் அஞ்சனா!!!”, என்றாள் அத்தனை கவலையாய்!!!

ரீசிவரை வைத்திருந்தவனோ  பொறுமை இழந்து,

“அஞ்சனா பாவம்லாம் அப்புறம் இருக்கட்டும்.. வந்து போனை அட்டென்ட் பண்ணு”,

கத்தாத குறையாக சொன்னதும்  சுதாரித்த ஸ்ருதி. அதை வாங்கி  ஹலோ என்று சொல்லி கூட முடிக்கவில்லை!

“அஞ்சனா ஏன் பாவம்?”,

காட்டமாக ஒலித்தது மறுமுனை!!! ஒரு ஷணம் ஸ்ருதியின் இதயம் துடிக்கவே மறந்து போனது! பின் தன்னை திடப் படுத்தி, 

“நீங்க யாரு?”, என்று இவள் கேட்டதுமே,

“அஞ்சனாவை பத்தி பேச நீ யாரு???”

இன்னும் காரமாக வந்த கேள்வியில் அதுவும் மரியாதை இன்றி எகத்தாளமாக கேட்ட விதம் தன்மானத்தை சுட, ஸ்ருதிக்கு சுருக்கென்று கோபம் வந்து விட்டது!

‘அரையும் குறையுமா ஒட்டு கேட்டுட்டு நம்மளை கேள்வி கேட்குறான்! என்ன திமிர்’, என்ற எண்ணமே பேச்சாக வெளிவந்தது!

“என் வாய் நான் பேசுறேன்! உன்கிட்டயா வந்து சொன்னேன்? கேள்வி கேட்கிறே?”, இவளும் விடாமல் பட படவென வெடிக்க...

“எங்க ஆபீஸ்ல உட்கார்ந்துட்டு… என் கசினை பத்தியே புரணி பேசுவ... எதுவும் கேட்காம வேடிக்கை பார்த்துட்டு போகணுமா?? யாருக்கிட்ட பேசுறோம்ன்னு கூட தெரியாம அது என்ன தெனாவெட்டு???!”,

மறுமுனையில் இருந்த மர்ம மனிதன் போட்ட போடில் விக்கித்து போனாள் ஸ்ருதி!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.