(Reading time: 15 - 29 minutes)

ய்யோ!!! இது யாரு??’, திகைத்தவள்..

‘கசின் சொன்னாரே.. அப்போ.. ஹர்ஷவர்தன் ஸாரா??? அச்சோ’, என்று பயந்தாலும், அவன் சொன்ன குற்றச்சாட்டை மனம் ஏற்கவில்லை!

“ஹ.. ஹர்...ஹர்ஷவர்தன் ஸார் நீங்களா? நான் மேடம் பத்தி தப்பபா எதுவும் பேசலை! அவங்க மேரேஜ்ல ஏதோ ப்ராப்ளம்ன்னு கேள்வி பட்டேனா அதான் ஒரு கர்டசில தான் பாவம்ன்னு சொன்னேன்.. ரியலி ஐ மென்ட் இட்! ”

என்றாள் அதை உணர்ந்தவளாக!

“இதை ஏன் முதல்ல சொல்ல வேண்டியது தானே??”, சற்றே குளிர்ந்தவனாக காட்டியது அவன் கேட்ட விதம்!

“முதல்ல ஏதோ ஃப்ராடு நினைச்சேன் ஸார்!!!”, என்று இழுக்க...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“என்னது ஃப்ராடா???”, மிரட்டல் போல.. ஆனால் மிரட்டல் அல்ல என்பது சட்டென்று அவள் அறிவிற்கு எட்டாது போக..

“அது அப்போ தான் ஸார்... இப்போ நீங்க ஹர்ஷவர்தன்”

அவள் குரலில்  ஒரு நடுக்கம்!

“ஹ்ம்ம்”, அதை உரைத்த விதம் சற்றே தளர்ந்திருக்கிறான் என்பது உரைத்தது இவளுக்கு..

‘ஹப்பாடா’, இவள் மூச்சு விட்டு கூட முடிக்கவில்லை..

“ஆக, வேலையை பார்க்காம இப்படி மத்தவங்களை பத்தி கதையடிக்கிறது தான் வேலையா வைச்சு இருக்கீங்க! இன்னும் வேற என்னலாம் கேள்விபட்டேன்னு எல்லாமே தெரிஞ்சாகணும்!”

விசாரணை தொனியில் மீண்டும் அவளை மிரள வைத்தான்.

“அது.. அது... உங்ககிட்ட சொன்னது தான் ஸார்! வேற எதுவும் எனக்கு தெரியாது!”

“அதை என்னை பார்த்து சொல்லு! என் கண்ணை பார்த்து சொல்லு! அப்போ டிசைட் பண்றேன் நம்பவா! வேண்டாமான்னு!”,

இது வினையா? விளையாட்டா? குழம்பி போன ஸ்ருதிக்கு. மூளை வேற

இது அருள் பட வசனம் என்று எடுத்து கொடுக்க...  சம்பளம் போடுகிறவனிடம் அப்படியேவா கேட்க முடியும்?

“நீங்க அமெரிக்கால இருக்கீங்களே எப்படி???”,  தயங்கியவாறு இவள் இழுக்க....

“இல்லை... இங்கே கான்ஃப்ரன்ஸ்க்காக வந்திருக்கேன்! உன் மூலமா சில விஷயம் தெரியணும் எனக்கு! அடையாறு காஃபி டேக்கு வந்திடு!”, என்று அடுக்கிக் கொண்டே போக…வேகமாக இடையிட்டவள்,

“வெளியே பார்த்து பேசுறது எல்லாம் எங்க அண்ணன் விரும்ப மாட்டாங்க! ஸாரி!”,  பட்டென்று சொல்லி விட...

“அப்ப ஆபிஸ் வர்றதை தவிர... உன்னை பார்க்க வேற வழியே இல்லையா?”

சொன்ன பொழுது அதில் ஒரு ஏக்கம் இழையோடியதோ???

‘என்னை ஏன் பார்க்கணும்னு நினைக்கிறான்???’,

இளம் பெண்ணிற்குரிய ஆர்வம் கலந்த  படபடப்பும் ஒரு பக்கம் என்றால்..

‘இவனிடம் கவனமாக இருக்கணும்’, தன்னை காத்து கொள்ளும் தெளிவு மறு பக்கம்!!!

பல சிந்தனையில் மூழ்கிப் போனவளிடம்.

“சரி!!! ஒரு மணி நேரத்தில் ஆபிஸ் காஃபடேரியால இருப்பேன்!”

என்று அவன் விடைபெற்றதும், இன்டர்காமை வைத்து விட்டு திரும்பியவளை கலவர முகத்துடன் எதிர்கொண்டாள் அவள் தோழி!

“ஹே.. என்னடி யார் ஃபோன்ல? ஹர்ஷவர்தன்னு சொல்லிக்கிட்டு இருந்த! ஏதாவது ப்ராப்ளமா?”,

அவள் மட்டுமல்ல அந்த பயிற்சி குழுவில் இருந்த அத்தனை பேரும் இவளையே பார்த்திருந்தனர். தான் விளித்த  ஹர்ஷவர்தன் இவர்களை  கொக்கி போட்டு இழுத்திருந்ததை புரிந்து கொண்ட ஸ்ருதி, தங்கள் உரையாடலை சுருக்கமாக சொல்ல..

“ஒரு வேளை, ஆர்யாவை பத்தி ரூமர்ஸ் ஓடுதே.. உன்கிட்ட எதுவும் விசாரிக்க நினைக்கிறாரோ??”,

அவள் தோழி கேட்கவும், ‘இப்படி ஒரு ஆங்கிள் இருக்குதோ!  ஏன் என்னை பார்த்து மட்டும் கேட்கணும்ன்னு தோணுது? ஹய்யோ வாழைப் பழ கேள்விக்கு முழிக்கிற கவுண்டமணி மாதிரியே ஆகிட்டேனே!’

என்று முழித்தவளுக்கு... “மீட் பண்ண வேற வழியே இல்லையா?”

கேட்டவன் குரல் இன்னும் காதிற்குள் ஒலித்து கொண்டே இருந்தது!

அதிலிருந்த தவிப்பு ஆர்யாவை பற்றி தெரிந்து கொள்ளவா? அப்படி அவளுக்கு தோன்றவில்லை!  அதை பின்னுக்கு தள்ளியவள்,

‘போன்ல சொதப்பின மாதிரி நேர்ல பார்க்கிறப்போவும் சொதப்பிடக் கூடாது’, என்று எண்ணிக் கொண்டவளாக,

“முதல்ல அந்த ஹர்ஷவர்தன் எப்படி இருப்பார்ன்னு பார்க்கணும்! நம்ம கம்பெனி வெப்சைட்ல இருக்கும் தானே?”,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.