(Reading time: 15 - 29 minutes)

ன் தோழியிடம் பதில் சொன்ன வேகத்தில் அலைபேசியை உருட்ட...

அவளை விட வேகமாக இயங்கியது மொத்த குழுவும்! ஹர்ஷவர்தனை பற்றி கம்பெனி வெப்சைட்டில் துவங்கி லிங்க்ட் இன், ஃபேஸ்புக் வரை அத்தனை பேரும் தேட...

ஒருவன் ஹர்ஷவர்தனின் முகநூல் பக்கத்தையே கண்டுபிடித்து அதிலிருந்த ஹர்ஷவர்தன் புகைப்படத்தை ஸ்ருதியிடம் காட்டினான்.

“ஜஸ்ட் என்கேஜ்டு”, ஸ்டிக்கர் ஒட்டபட்ட காரில்  அலெக்சியை அணைத்த படி சாய்ந்து நின்ற ஹர்ஷ்ஷை பார்த்ததும், ‘இவனா நம்மகிட்ட அப்படி பேசியது?’

என்ற யோசனை வந்தது அவளுக்கு!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

ர்யமனின் கேபினில்....

மகப்பேறு மருத்துவரிடம் அழைத்து செல்கிறேன் என்றதும், தயக்கம் காட்டிய கோகிலாவிடம், “அப்போ அந்த உரிமை உங்களுக்கு கிடையாதுன்னு சொல்ல வர்ற?”,

என்று அவளால் மறுப்பு சொல்ல முடியாத கேள்வியை கேட்டு சம்மதிக்க வைத்த ஆர்யமனுக்கு.... என்னவோ நெஞ்சமெல்லாம் பரபரத்தது!!

‘டாக்டர் என்ன சொல்ல போறாரோ??!!!’ என்று!

எங்கே தன் கண்கள் பார்த்ததை அவர் நிராகரித்து விடுவாரோ என்ற பதைபதைப்பு - தன் குழந்தைக்கு ஒன்று என்றால் பதைபதைக்குமே பெத்த வயிறு... அந்த  “மதர்ஹூட் அட்ரலின் ரஷ்” அவனிடம்!

இத்தனை பரபரப்பு பதைபதைப்பிற்கு மத்தியிலும்  அதன் தாக்கம் துளி கூட இன்றி, தன் மேஜை ட்ராயரில் இருந்த அந்த ப்ரக்ணன்ஸி கார்ட்டை பூவைப்  போல எடுத்தது அவன் கரம்!

அதில் இருந்த இரண்டு டிக் - அதாவது கருத்தரிப்பை உறுதி செய்யும் அந்த குறியீடையே மகிழ்ச்சி பொங்க பார்த்த ஷணம் அவனுக்குள் குடி கொண்ட அந்த பெருமிதம்!! அதற்கு அளவே இல்லை!!!

“நான் அப்பாவாகப் போறேன்”, என்று சத்தம் போட்டு கத்த வேண்டும் போல இருந்தது!

தாய் முகமறியா.. தந்தை முகமறியாதவனுக்கு... இந்த பந்தம் - இவன் முதல் ரத்த சொந்தம்! தகப்பன் பரிணாமம்! இதய அறை முழுவதும் கருவறை வாசம்!!!

குழந்தையைப் போல தாங்கியிருந்த அந்த கருத்தரிப்பு உறுதி செய்யும் அட்டையை தொட்டிலில் கிடத்துவது போல பத்திரமாக மேஜை டிராயருக்குள் வைத்தவன் கண்களில்... கருத்தில்.. மீண்டும் பப்பியின் கடிதம்!!

தன் மலையளவு காதலையும் பின் தள்ளி விட்ட கடுகளவு சிசுவை எண்ணி  பெருமிதமாக உணர்ந்தவனின் பார்வை கடிதத்தை தழுவ...

‘குழந்தை தான் முக்கியமா? நானு??? என்னைத் தூக்க மாட்டியா?’

அந்த கடிதம் உயிர் பெற்று வந்து அவனை நோக்கி கை நீட்டி அழைப்பது போல இருந்தது!

மென்னகையுடன் நொடி தாமதிக்காமல் அதை கையில் எடுத்து பிரித்து படிக்கப் போன சமயம் பார்த்து அலைபேசி அழைப்பு! அழைத்தது மார்க்கெட்டிங் ஆபிசர்!  மீட்டிங்கை அவன் பொறுப்பில் தானே விட்டு இருக்கிறான்! அந்த அழைப்பை தவிர்க்க முடியாமல் எடுத்தவனிடம்,

அவன் வெளிநாட்டு பிரதிநிதிகள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ஆர்வமாக இருக்கும்  செய்தி சொல்லப்பட்டதும், காலம் தாழ்த்தி சந்தர்ப்பத்தை கோட்டை விட்டு விடக் கூடாது  என்பது மண்டைக்குள் உரைக்க சுதாரித்தான்!

ஆனாலும் மனம் பப்பியிடமே சுருண்டு கிடக்க... 

‘அந்த டீலை க்ளோஸ் செய்துட்டு... நிதானமாக டீல் பண்ணலாம்!’,

தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அந்த கடிதத்தை பாக்கெட்டில் போட்டு கொண்டு கிளம்ப.... அவன்  சட்டைப்பையை நிரப்பிய  லாவண்டர் வாசம்.... மெல்ல மெல்ல சுவாசப் பையையும் நிரப்ப ஆரம்பித்தது!

அதுவே பப்பி தன்னுடனே இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தர, புது உற்சாகத்தோடு, அந்த பேச்சு வார்த்தையை எதிர் கொண்டான்!  பெரும் பணம் போட்டு வாங்கும் முன் அத்தனை சாதக பாதகங்களையும் ஆராய்ந்த அந்த வெளிநாட்டு நிறுவன பிரதிநிதிகளிடம், அவன் அதை எடுத்துரைத்த விதமே தனி தான்!

தன்னை நல்ல வியாபாரி, தொழில் நுட்பத்தில் திறமையானவன் என்று காட்டி கொள்வதை விட, தொழிலில் நேர்மையை கடைபிடிக்கும் நிறுவனம் இது  என்று நிறுவனத்தை முன்னிறுத்தி, அதிலிருந்த உண்மையையும் விளக்கி அவர்களுக்கு புரிய வைக்க.... அது நன்றாகவே வேலை பார்த்தது!

அடுத்து அவர்கள் ஒப்பந்த விதிகளை பற்றி பேசலாம் என்று பொழுது  வெற்றியை நெருங்கி விட்டோம் என்பதை சர்வ நிச்சயமாக உணர்ந்தான்.

இதை கடந்து விட்டால் இனி ஒப்பந்தம் படிவம் சரி பார்க்க பட்டு கையெழுத்து போடுவது தான் பாக்கி! இத்தனை நாள் உழைப்பிற்கு ஊதியம் கிடைத்து விடும்!

பணத்தை தேடி அவன் ஓட்டம் இருந்ததில்லை! அவன் படைப்புகளே அதை தேடி வந்து கொடுத்து விடும். இப்பொழுதும் தேடி இருக்க மாட்டான் தான்! ஆனால், தன்னால் கடன் பட்ட ஹர்ஷ்ஷின் சொத்துக்களை மீட்க அவசரமான அவசியமானது பணத்தேவை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.