(Reading time: 12 - 24 minutes)

"ன்னங்க!"-அச்சத்தோடு அவன் சிந்தனைகளை கலைத்தாள் நிர்பயா.அவளுக்கு பின்னால் சிறிது தூரத்தில் எட்வர்ட் நின்றிருந்தான்.சோபாவில் எழுந்தவன்,தன் கழுத்தை வளைத்து நெட்டி முறித்தான்.

"அன்னிக்கே கேட்டேன் உங்க இரண்டுப் பேருக்கும் நடுவுல எதாவது இருக்குதான்னு!அதெல்லாம் ஒண்ணுமே இல்லைண்ணான்னு சொன்ன!நானும் நம்பினேன்.இன்னிக்கு உன் அண்ணி இப்படி சொல்றா!நீயும்,அமைதியா நிற்கிற!என்ன நினைத்துக் கொண்டிருக்க உன் மனசுல?"-அந்தக் கேள்வியில் மறைந்திருந்த உச்சக்கட்ட கோபம் இருவரையும் அச்சுறுத்தியது.

"பதில் சொல்லுடா!என் கோபத்தை கிளறாதே...!"

"..............."

"இப்போ பேச போறீயா?இல்லையா?"-என்று எட்வர்ட்டை நோக்கி தன் கரத்தை ஓங்கினான் ஜோசப்.

"ஐயோ..!ஏங்க..!"-அவசரமாக அவன் கரத்தை தடுத்தாள் நிர்பயா.

"என்னங்க பண்றீங்க?அவன் உங்க தம்பி!இப்படி தான் கூடப்பிறந்தவன்கிட்ட கை நீட்டுவாங்களா?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

"நீ சும்மா இரும்மா!எனக்கு வர கோபத்துக்கு இவன் இப்போ வாயைத் திறக்கலை இவனை கொன்னுடுவேன் நான்!"-அவன் ஆவேசம் அதிகமானது.

"நிறுத்துங்க!ப்ளீஸ்.."

"அண்ணனை விடுங்கண்ணி!தப்பு என் மேலே தான் இருக்கு!அவர் என்னை அடிக்கட்டும்!"

"நீ சும்மா இரு!நீ வேற எரியுற நெருப்புல எண்ணெய்யை ஊற்றாதே..!"-என்று அவனை கண்டித்தாள் நிர்பயா.

"நீ உள்ளே போ எட்!"

"............."

"போன்னு சொல்றேன்ல போ!"-அவன் தலைகுனிந்தப்படி உள்ளே சென்று கதவை தாழிட்டு கொண்டான்.

"என்னங்க நீங்க?பொறுமையா பேசுவீங்கன்னு பார்த்தா இப்படி கோபப்படுறீங்க?"-அடுத்ததாக ஜோசப்பை சமாதானம் செய்தாள் அவள்.

"பின்ன என்ன அம்மூ?அன்னிக்கு கேட்டதுக்கு ஒரு பதில் சொன்னான்.இப்போ நடந்தது என்ன??எந்த தைரியத்துல அவன் பொய் சொன்னான்?என் மேலே இருக்கிற பயமா?இல்லை...அந்தப் பொண்ணை விட்டுவிடலாம்னு நினைத்தானா?"

"..............."

"நான் அவனை தம்பி மாதிரியா பார்க்கிறேன்.சொந்த மகன் மாதிரி பார்க்கிறேன்.ஒரு நல்ல நண்பனா பழகுறேன்.ஆனா,இவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட இருந்து அவன் எப்படி மறைத்தான்?"

"நீங்க முதல்ல கோபப்படாதீங்க!அவனுக்கு அம்மா இருந்திருந்தா தன் மனசை அவங்கக்கிட்ட கொட்டி தீர்த்திருப்பான்!அவன் உடல் அளவுல பலசாலி தான்.ஆனால்,மனசளவுல குழந்தை தான்.சின்ன வயசுல இருந்து ஒரு பொண்ணோட அன்பு கிடைக்காம வளர்ந்தவன்,தன்னோட ஏக்கத்துக்கு வடிகாலா ஒருத்தி வந்ததும்,அவக்கிட்ட தன் காதலை கொடுத்துட்டான்.காதலிக்கிறது தப்பில்லையே!நாம கூட அந்த பந்தத்தால தானே இணைந்தோம்?"

"ஆனா...!"

"பொறுமையா யோசிங்க!நீங்க கோபப்படும் போது எதையும் யோசிப்பதில்லை.அவங்க இரண்டு பேரும் சேர ஒரு வழி நிச்சயம் இருக்கணும் இல்லையா?"-அவன் பெருமூச்சு விட்டான்.

"எல்லாரும் உன்னை மாதிரியும்,தாத்தா பாட்டி மாதிரியும் இருந்துட மாட்டாங்கம்மா!"

"ஒருமுறை முயற்சி தான் பண்ணலாமே!ப்ளீஸ்..."

"..............."-நிர்பயா அவனது கன்னத்தில் மென்மையாக தன் இதழை ஒற்றி எடுத்தாள்.

"ப்ளீஸ்..."

"சரி...அந்தப் பொண்ணோட அப்பாவை கோவிலுக்கு வர சொல்லு!ஆனா,ஒருமுறை தான் என் முயற்சி இருக்கும்!நான் என் தம்பிக்கு ஒரு தந்தையோட சாபத்தை வாங்கி தர விரும்பலை!"-நிர்பயா தலையசைத்தாள்.

உறவுகள் குறித்த பல்வேறு செய்திகள் பலவேறு கோணங்களில் நம் நம்பிக்கையை சிதைக்கவே உருவாக்கப்பட்டுள்ளன.ஆனால்,அது உண்மையா என்று நம்மில் எவரும் சிந்திப்பதே இல்லை.நம்மில் சிறந்தவர் எவரோ நாம் அவர் காட்டும் பாதையையே அதிகமாக தேர்ந்தெடுக்கிறோம்!முன்னிருப்பவர் உறவுகளை சபித்தால்,பின் நிற்கும் நாமும் சாபம் வழங்குகிறோம்!தெரியாமலா உறவுகளை இறைவன் படைத்தான்??உறவு என்பது மகத்துவம் வாய்ந்தது.வெறும் குருதி அளிக்கும் பந்தங்கள் மட்டும் மகத்துவமானவை அல்ல!அன்பால் இணையும் ஒவ்வொரு ஆன்மாவும் உறவுகள் தான்.அதை சிலர் அவமதிக்கவே அவதரித்திருக்கலாம்.ஆனால்,தெரிந்தோ தெரியாமலோ உலகில் நம் மனதில் ஆழமாய் பதிந்த ஒவ்வொருவரிடமும் ஆழமான,அழகிய உறவினை நாம் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறோம்!என்ன?நான் சொல்வது சரி தானே??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.