(Reading time: 7 - 14 minutes)

03. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

ருகு காடு, செழுவூர்

குருத்திலிருந்து அரும்பாகி துளிர்விட்டு தளிராகி இலையாகி பழுப்பு நிறம் பேணி வயது முதிர்ந்து சருகானது சருகுக் காடு.. பச்சை நிறம் என்பதே அந்த காட்டில் உள்ள மரங்களுக்கு சிம்ம சொப்பனம் தான்.. காட்டில் ஒரு அடி எடுத்து வைத்தாலும் சருகின் ஒலியானது அந்த காடு முழுவதும் எதிரொலிக்கும்..

"எழில்.. அந்த பக்கம் ஏதோ சத்தம் கேக்குது..வா போய் பார்க்கலாம்.." ,என்றாள் மயா..

இருவரும் ஒலி வரும் திசை நோக்கி முன்னேறினர்..அங்கு கண்ட காட்சியில் உறைந்து போயினர் இனிமையாய்..

யற்கையின் அமைப்பில் எல்லாம் அழகு தான்.. தூறல் போடும் மேகம் முதல் தூறல் தேங்கும் நிலம் வரை.. பள்ளிக்கு செல்லும் பொழுது அந்த மழை நீர் தேங்கி நிற்கும் குட்டைகளை தாண்டி போவதில் தான் எத்தனை இன்பம்..

சேறும் சகதியும் கலந்துள்ள குட்டைகளையே ரசிக்கும் நாம் அதில் மலர்கள் பூத்துக் குலுக்கினால்..??

ழிலும் மயாவும் சென்ற இடத்தில் ஆயிரத்திற்கும் மேல் சின்ன சின்னதாக குட்டைகள் காட்சியளித்தன.. ஒவ்வொரு குட்டையின் நடுவிலும் ஒரு வகை மலர்…  கூட்டம் கூட்டமாக பூத்திருந்தது… ஒன்றில் தாமரை என்றால் மற்றொன்றில் அல்லி இன்னுமொன்றில் முல்லை என பல வகைகள்..

அந்த இடமே ஒரு அழகான பூஞ்சோலை போல் காட்சியளித்தது.. பச்சை என்ற ஒன்றை அந்த ஊரில் காணாதவர்கள் அந்த காட்சியை கண்டு அதிசயித்தும் பிரமித்தும் போயினர் இயற்கையின் படைப்பை கண்டு..

அழுகு என்றாலே ஆபத்து என்று பொருளோ..??

"இஸ்.. இஸ்..."

"ஏன் பக்கி எறும்பு கடிச்சிருச்சா...?? இஸ் இஸ்ஸுங்கற..?? "

"நான் எப்போ விக்ஸ்....",என்று அவளை நோக்கி திரும்பியவன் "பா...பா...",என்று திக்க ஆரம்பித்தான்..

"என்னடா எதோ பாம்பை பார்த்த மாதிரி திக்கற..??" ,என்றவள் அவன் நோக்கும் திசை நோக்கி திரும்பினாள்..

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்பது போல் பாம்பும் இவர்களும் சில நொடிகள் நோக்கிக் கொண்டிருந்தனர்..

"டேய்...இப்போ என்னடா பண்றது..??",என்று கேட்டாள் விக்ஸ் நடுங்கியபடியே..

"நான் 5 டூ 1 கவுண்ட் பன்றேன்..திரும்பி பாக்கமா ஓடிறலாம் என்ன..??",என்றவன் "பைவ் ட்...ட்..ஊ..ஓட்ரீ ஓட்ரீ..",என்று கூவிக்கொண்டே ஓட்டம் எடுத்தான் அவன் எதிரில் ஒரு பாம்பு படம் எடுப்பதை கண்டு..

"பிசாசு...டாங்கி..விட்டுட்டு போகாத டா பக்கி...",என்ற படியே அவன் பின்னே ஓடியவள் சருகு காட்டின் நுழைவாயிலில் தான் தன் ஓட்டத்தை முடித்தாள்... கூடவே புலியும் ச்சே ச்சே எலியும்..

ற்று நேரம் மூச்சுவாங்கிய விக்ஸ், நிலத்தில் எதையோ குச்சியால் வரைந்து கொண்டிருந்த எலியை நெருங்கி அவன் மண்டையில் ஓங்கி ஒன்று வைத்தாள்..

"அறிவில்லை உனக்கு... பாம்பை பார்த்ததும் பச்சோந்தி மாதிரி கூட வந்தவளை கழட்டிவிட்டுட்டு இங்க வந்து என்னடா வரஞ்சிட்டு இருக்க..??",என்றாள் முறைத்தபடியே..

"லூசு..உள்ள ஷ்ரனு மாட்டிட்டு இருக்கா.. அதான் அவளை காப்பாத்த மேப் போட்டுட்டு இருக்கேன்"

அவன் பதிலில் கடுப்படைந்தாலும், "இந்த ஊர்ல இருக்கற யாரையாவது கூட்டிக்கிட்டு போலாம் டா..",என்றாள் நடுங்கிய படியே. அவர்களை காப்பாற்றவே அங்கு வந்த ஒரு பெரியவர் அவர்களிடம் என்னவென்று விசாரித்தார்..

"தம்பி.. நான் உங்க இரண்டு பேர் கூட காட்டுக்குள்ள வரேன்.. வாங்க போலாம்" ,என்றார்..

"தாத்தா.. அங்கே நெறையா பாம்பு இருந்துச்சு..",என்றாள் மயா பயந்தபடியே..

" இந்த பொட்டக் காட்டுக்குள்ள எந்த பாம்பு பொண்ணு இருக்க போகுது.. ஏதோ ஒண்ணு இரண்டு வேணும்னா இருந்திருக்கும்.. நீங்க சொல்ற மாதிரி கூட்டமா எல்லாம் இருக்காது.. சரி.. என் பின்னாடியே வாங்க.. சத்தம் போடக்கூடாது.."என்றவர் அந்த காட்டுக்குள் நுழைந்தார்..

விக்ஸும் எலியும் அந்த காட்டிற்குள் காலடி எடுத்து வைத்தனர் இரண்டாம் முறையாக அந்த பெரியவருடன் சிறு நடுக்கத்துடன்..

மூவரும் அந்த குட்டைகள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆனால், அந்த இடத்தில் பாம்புகளின் சுவடே இல்லாமல் ரம்மியமாக காட்சியளித்தது..

மயாவும் எழிலும் சிறிது அதிர்ந்தாலும் எதுவும் பேசாமல் அந்த பெரியவரை பின் தொடர்ந்தனர் அடுத்த அதிர்ச்சியை எதிர்நோக்கி..

சருகு காட்டிற்குள் இன்னும் சற்று தூரம் உள் நுழைந்தவர்கள் அங்கு கண்ட நங்கையை கண்டு மிரண்டு போயினர்..

ரு நீல விழிகள்.. அலையலையாக முதுகு முழுதும் படர்ந்து கிடந்த கருங்கூந்தல்.. படம் எடுக்கும் பாம்பழகா இல்லை அந்த பாம்பை கையில் பிடிக்க முயற்சி செய்யும் அந்த பெண் அழகா..??

அந்த நங்கையை விளிக்க இருந்த மயாவை அடக்கிய அந்த பெரியவர்..எழிலை நோக்கி ஏதோ சைகை செய்தார்.. அதை புரிந்து கொண்ட எழிலும் அந்த பெண்ணின் பின் புறம் சென்று அவளை பிடித்து பின்னுக்கு மெதுவாக இழுத்துச் சென்றான் பாம்பின் கவனம் அவர்களை கவராதபடி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.