(Reading time: 7 - 14 minutes)

ழிலிடம் சிக்கியவள் அவனிடமிருந்து திமிறியபடி விலகினாள்..பின் அவனை முழு பலம் கொண்டு கீழே தள்ளிவிட்டாள்..

இந்த தாக்குதலை எதிர்பார்க்காத எழில் அவளை வசைபாட எத்தனித்த போது அங்கு வந்து சேர்ந்தனர் மயாவும் அந்த பெரியவரும்..

"தம்பி..வாங்க இருட்ட ஆரம்பிக்கறதுக்குள்ள இந்த காட்டை விட்டு போயாகணும்", என்று முன்னே நடக்க ஆரம்பித்தார்..

சருகுக் காட்டை தாண்டும் வரை அந்நால்வரும் மௌனமாகவும் அவ்வரவர் சிந்தனையிலும் லயித்திருந்தனர்..

"சங்களா.. அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன்.. இனி இந்த காட்டுக்குள்ள போகாதீங்க.. இன்னைக்கு நான் உங்களுக்கு துணைக்கு வந்த மாதிரி எல்லா நேரமும் வர முடியாது",என்றார் அந்த பெண்ணை பார்த்த படியே..

சரி தாத்தா என்றவர்களிடமிருந்து விடை பெற்றார் அவர்..

ந்தப் பெரியவரின் தலை மறைந்ததும் ஷ்ரனுவை அறைய தன் கையை உயர்த்தினாள் மயா.. அதை எதிர் பார்த்து காத்திருந்தார் போல் அவள் கையை அசால்ட்டாக தட்டிவிட்ட ஷ்ரனு அவள் முன் தனது ஆள் காட்டி விரலை ஆட்டிவிட்டு கூடாரம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்..

"டேய்..என்னடா இது..?? தப்பு பண்ணது அவ.. என்ன மிரட்டீட்டு போறா..?? "

"கடுப்ப கெளப்பாத மயா.. அந்த பாம்புக் கிட்ட இருந்து அவளை காப்பாத்த அவள பின்னாடி இழுத்துகிட்டு போனா.. என்னமோ கொலை பண்ண ட்ரை பண்றவன அட்டாக் பண்ற மாதிரி தள்ளிவிடறா.."

ஷ்ரனு போகும் பாதையை மட்டும் தான் அவர்களால் முறைக்க முடிந்தது..

லைகளின் அரசி, ஊட்டி

இரவின் மடியில் நிலவு மகள் அனைவர் கண்களுக்கும் விருந்தாகிக் கொண்டிருந்தாள்.. அந்தக் காட்சியை ரசித்தபடியே தனது கணினியில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தாள் க்ரியா..

"குட்டிமா.. இந்தா இந்த பாலை குடிச்சுட்டு வேலையை பாரு",ஆஜரான பாட்டி சகுந்தலாவைக் கண்டு தன் லேப் டாப்பை அவசரமாக மூடினாள்..

பிறகு பாட்டி கொண்டு வந்த பாலை பருகியவள் அப்பாடா என்று சாய்ந்தாள் பாட்டியின் மடியில்..

"ஏன் குட்டிமா இவ்ளோ நேரம் வேலை செய்யணுமா..?? பாரு ராத்திரி எல்லாம் செரியா தூங்காம கண்ணு வீங்கி கெடக்கு..", அக்கறையாக..

"பாட்டி..!! நான் வேலை செய்யறதே வருஷத்துக்கு ஒரு நாள் தான்..அது உங்களுக்கு பொறுக்கலையா..??",என்றாள் கேலியாக..

அவளை லைட்டாய் முறைத்த பாட்டி செல்லமாக அவள் முடி கோத ஆரம்பித்தார்.. அந்த அறையில் நிலவிய அமைதியை பொறுக்க முடியாதவராய் வந்து சேர்ந்தார் ப்ரணதீசன் தாத்தா..

"ஹே குட்டி..  பர்மிஷன் இல்லாம என் பியூட்டி மடியில நீ ஏன் படுத்திருக்க..??"

"பாட்டி மடில படுக்க பேட்டர்ன் ரைட்ஸ் வாங்கணுமோ..??", கண்ணடித்தபடியே..

"பின்ன வாங்க வேண்டாமா..?? நான் ஐம்பத்தி இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே வாங்கிட்டேன்",என்றார் தன் திருமண நாளை நினைவு கூர்ந்து..

இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு கடுப்படைந்த பாட்டி இருவரை நோக்கி சொல்லம்புகளை வீச தயாரானார்..அதை உணர்ந்த மற்றிருவர்களும் அவரை நோக்கி தங்கள் கொஞ்சல்லம்புகளை திருப்பி வீசினர் சமாதானமாக....

பதிமூன்றாம் வயதில் தாய் தந்தையை ஒரு விபத்தில் இழந்த க்ரியாவிற்கு தாய் தந்தையாகிப் போயினர் தாத்தா ப்ரணதீசனும் பாட்டி சகுந்தலாவும்.. பொருட்ச்செல்வம் நிறைய இருந்தாலும் அன்புசெல்வத்திற்காக ஏங்கியவளை ஊட்டிக்கு அழைத்து வந்து விட்டனர்..

"குட்டிமா அரட்டை அடிச்சது போதும் லைட் ஆப் பண்ணிட்டு தூங்கு",என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் அறையிலிருந்து வெளியேறினர் இருவரும்..

அவர்களின் அன்பை நினைத்து அவளின் கண்கள் பணித்தது.. நெஞ்சமும் சற்றே குறுகுறுத்தது அவர்கள் அறியாமல் தான் செய்து கொண்டிருக்கும் காரியத்தை நினைத்து.. கூடவே சற்று பயமும் தோன்றியது அந்தக் குரலுக்கு உரியவரை நினைத்து..

திங்க் ஆப் தி டெவில் என்பது போல் திரையில் ஒளிர்ந்தது அந்நபரின் பெயர்..

"க்ரியா முடிச்சுட்டியா..??"

" ம்..முடிச்சுட்டேன் பா.. மெயில் பண்ணவா..??"

"மெயில் எல்லாம் பண்ண வேண்டாம்.. நான் சொல்றப்போ கெளம்பி நான் சொல்ற இடத்துக்கு வா.."

"ஐயோ.. நான் மாட்டேன்.. தாத்தாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.. கொன்னே போட்டுருவாரு.."

"நண்டு.. ஓவரா பயப்படாதே.. தாத்தாவை ஏமாத்த நான் ஐடியா தரேன்.."

"இல்ல...தாத்.."

"அந்த ஓல்ட் மேனை சமாளிச்சரலாம் டோன்ட் வர்றி.. திங்க்ஸ் பேக் பண்ணி ரெடியா இரு என்ன.."

எதிர்முனை போனை வைத்ததைக் கூட உணராத க்ரியா தூரத்தில் தெரிந்த நிலவை வெறிக்க ஆரம்பித்தாள்..

வியூகம் வகுக்கலாம்...

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1111}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.