(Reading time: 12 - 24 minutes)

04. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

செழுவூர்

புழுதி காற்று கண்களை மறைத்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் புதிய கூடாரம் ஒன்றை நிர்மாணிக்கும் பணியில் மூழ்கியிருந்தனர் தியாவுடன் எழிலும் மயாவும்.. எல்லாம் நேற்று தியாவை கூட்டிக் கொண்டு வர தாமதமானதால் அச்சு கொடுத்த குட்டிப் பனிஷ்மென்ட்..

"என்னடா இந்த அச்சு நம்மள இப்படி கொடுமைப்படுத்தறாரு..??",என்று கேட்டாள் மயா எழிலிடம்.

"ஆமாம்..தப்பு பண்ணுனவளுக்கு வேலை கொடுத்தா பரவாயில்லை... நம்முளுக்கும் சேர்த்திக் கொடுத்தா என்ன அர்த்தம்..",என்றான் வராத கண்ணீரை துடைத்தபடியே எலி..

"கருடபுராணத்துல இதுக்கு ஏதாவது பனிஷ்மென்ட் இருந்தா சொல்லு எலி..??"

"ம்...ம்...ஆ.”, என்று யோசித்தவன் ," எஸ்.. நியாபகம் வந்திருச்சு பிராணரோதம்.. பீஸ் பீஸ் ஆக்குறது.."

இவர்களின் உரையாடலை பின்னிருந்து கேட்டுக் கொண்டிருந்த தியா சிரிக்க ஆரம்பித்தாள்..

"ஏன் தியா இப்போ சிரிக்கிற அப்பாவி ஜீவன்களை கொடுமை படுத்துனா நரகத்துள்ள இதுதான் தண்டனை.. நான் கருடபுராணத்துல படிச்சிருக்கேன்..",என்றான் எழில் தன் கூற்றை கேட்டு அவள் நகைப்பதை கண்டு ரோஷமாக..

"லூஸு.. நீ சொல்ற பனிஷ்மென்ட் நரகத்துல கொடுக்கறதுதான்.. ஆனா அது அப்பாவி ஜீவன்களுக்கு அல்ல வாயில்லா ஜீவன்களுக்கு.."

ஞே.. என்று முழித்துக் கொண்டிருந்தவனுக்கு நங்கென்று கொட்டு விழுந்தது.. யாரென்று சொல்லவா வேண்டும்..??

"வேலையை முடிச்சிட்டீங்களா பசங்களா..?? ",என்று வந்து சேர்ந்தான் தனுசுஜன்.. (இம்மூவரின் சீனியர் + அச்சுவின் அசிஸ்டன்ட்)

"முடிச்சாச்சுண்ணா..",என்று கைகளில் இருந்த மண்ணை தட்டிய வண்ணம் எழுந்தனர் மூவரும்..

"ஆச்சார்யா சார் உங்க மூணு பேரையும் கெளம்பி ஸ்பாட்டுக்கு வர சொன்னார் .. சீக்கிரம் வந்து சேருங்க..",என்றபடி தன் கூடாரத்தை நோக்கி நடந்து சென்றான்..

"தியா.. அந்த கல்லுக்கிட்ட இருந்து தானே குழி தோண்ட ஆரம்பிக்கணும்.. இவங்க ஏன் அங்க தோண்ட ஸ்டார்ட் பண்ண ரெடி ஆகறாங்க..??",என்று கேட்டான் எழில்..

"அது நேத்து இந்த இடத்துல துறப்பணவழுத்தி (DRILLING MACHINE) வெச்சு செக் பண்ணப்போ வெறும் மண்ணு மட்டும் தான் தென் பட்டுச்சு.. அதுனால ஆச்சார்யா சார் கொஞ்சம் கிழக்கு தள்ளி தோண்டலாம்னு சொன்னாரு.."

"ஹோ.. சரி வாங்க குழி வெட்டற இடத்துக்கு போகலாம்..",என்றான் மற்றிருவரை நோக்கி..

"ஜே சி பி'காரரே ஒரு முந்நூறு வரைக்கும் தோண்டுங்க..அதுக்கப்புறம் நாங்க கடப்பாரையை வெச்சு தோண்டிக்கறோம்..",என்று ஒருவரிடம் அறிவுறுத்திக் கொண்டிருந்தார் ஆச்சார்யா..

அப்பொழுது அங்கு வந்த மூவரையும் கண்டவர் அவர்களை நோக்கி,"இவங்க எவ்ளோ அடி ட்ரில் பன்றாங்கன்னு நோட் பண்ணுங்க.. த்ரீ ஹன்ட்ரெட் பீட்க்கு அப்புறம் பாத்துப் பாத்துதான் தோண்டனும்.. வீ  ஹாவ் டு பி அலெர்ட்.."

"எஸ் சார்.. பட் ஒரு டூ ஹன்ட்ரெட் பீட்லயே ராக்ஸ் தென்பட்டுச்சுனா..??",தியா கேள்வியாக..

"நாம் மார்க் பண்ணிவெச்சிருந்த அவுட்லைன்ல ட்ரில் பண்ணது உங்களுக்கு தெரியும்னு நினைக்கறேன்..அப்போ நியர்லி ஒரு போர் ஹன்ட்ரெட் பீட்டுக்கு எதுவும் தென்படல.. சோ இப் மை கால்குலேஷன் இஸ் ரைட் த்ரீ ஹன்ட்ரெட் பீட் வரைக்கும் தேர் வில் பி நோ ராக்ஸ்..",என்றார் கர்வமாக..

"ஓ கே சார்.. வீ வில் கோ அண்ட் டேக் தி ரீடிங்ஸ் ",என்று அவரிடமிருந்து விடை பெற்றனர் மூவரும்..

ருவறையில் நம்மை  சுமந்தெடுப்பவள் தாய் என்றாள் தாயை சுமந்து கொண்டிருப்பவள் தெய்வம் அன்றோ..??

மழையை தன்னுள் அடக்கி ஓரறிவு ஜீவன் தொடங்கி ஆரறிவு ஜீவன் வரை அனைவருக்கும் அதனை பகிர்ந்து கொடுக்கும் அன்னப்பூரணி அவள்.. ஏழை பணக்காரன் என்று பாகுபாடில்லாமல் அவர்களுக்கு வாழ்விடத்தை தந்து அருள்பவள்..

பல புதிர்களை உள்ளடிக்கியவளுக்கான பூஜை ஆரம்பித்தது விநாயகர்  துதியுடன் அந்த செம்மண்ணில்..

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர விண்மனி யாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம். 

ல கோடி வருடங்களுக்கு முன்னாள் தன் தலைவனான கதிரவனிடமிருந்து பிரிந்து சில இலட்சம் கிலோ மீ. கடந்து தன் நிலவு மகளுடன் தீப்பிழம்பாய் குடியேறியவள்..

வருடங்கள் கோடி கடந்த பின் கோபம் தணிந்து மென்மையானவள்.. பெண்ணின் இயல்பு அன்பை செலுத்துவதும் உயிரை சிருஷ்டிப்பதும் தானே..??

உருவாகியது முதல் நுண்ணுயிர்.. தொடங்கியது முதல் யுகம்.. உருப்பெற்றது புதுவுலகம்..

யுக யுகமாய் ரசித்து தன் பிள்ளைகளை உயிர்பெற செய்தாள் பூமா தேவி அன்று.. மனிதன் தன் அன்னையையே சிதைந்து கொண்டிருக்கின்றான் தன் பேராசைக்காக இன்று...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.