(Reading time: 12 - 24 minutes)

"யாரோ என் தலையில கொட்டிட்டாங்க மயா...",என்றான் சுற்றியும் முற்றியும் பார்த்துக் கொண்டும் தலையை தேய்த்துக் கொண்டும்..

"என்னடா சொல்லற..?? நான் உன்னை கொட்ட வந்தது உண்மைதான்.. ஆனால் கொட்டைலேயே..",என்றாள் சிறிது கடுப்பாக..

"ஏய்.. உன் கொட்டு எனக்கு தெரியாதா..",என்றான் 'பூஜை' சூரி ஸ்டைலில்..

"அப்புறம் யாருடா உன்னை கொட்டுனது..",என்றவள் தங்கள் அருகில் கமுக்கமாக தன் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்த தியாவை ஆச்சர்யமாக பார்த்தாள்..

அவளது பார்வையை தொடர்ந்தவனும் தியாவைக் கண்டு ஆச்சர்ய பட்டாலும் அவளை நோக்கி,"நீயா என்னை கொட்டுன..??",என்று கேட்டான் முறைப்பாக..

"நீ பண்ற வேலைக்கு உன்னை புதைக்காம இருக்கேன்னு சந்தோஷபடு மேன்..",என்றாள் நக்கலாக..

தியாவின் பேச்சை கேட்ட இருவரும் திகைத்துத்தான் போயினர்.. முசுட்டு முசோலினிக்கு இப்படி கூட பேச தெரியுமா என்று மனதில் நினைப்பதாய் வெளியில் உளறியதை கேட்ட இரு பெண்களும் ஒன்று போல் நங்கென்று வைத்தனர் அவன் தலையில்..

"போங்க புள்ளைங்களா எப்பப்பாத்தாலும் இந்த மாமனைக் கொட்டிடே இருக்காதீங்க.. நீங்க கொட்டு கொட்டுனு கொட்றத எவ்ளோ வாட்டிதான் நம்ம ரீடர்ஸ் படிப்பாங்க.. பினிஷ்மென்டை மாத்துங்க பேபிமாஸ்..",என்றான் கண்ணடித்தபடியே..

மேற்கே சூரியன் மறையத் துவங்கிய நேரம் செழுவூரில் ஒரு மாநாடு தொடங்கியது..

"இந்த பாறையில் செதுக்கப்பட்டிருக்கும் பூ என்னண்ணா..??",தனுசுஜனிடம் கேட்டாள் மயா..

"தெரியல மயா.. அந்த சிலை ஒரு பூவுன்னு மட்டும் தான் கெஸ் பண்ண முடியுதே ஒழிய என்ன பூவுனு தெரியல மா.. அங்க பாரு பூவோட இதழ்கள் மட்டும் தான் ஓரளவிற்கு ஒழுங்கா இருக்கு.. மத்த எல்லாம் சிதைஞ்சிருக்கு",என்றான் அதனை சுட்டிக் காட்டிய படியே..

தே நேரம் அங்கு வந்த ஆச்சார்யா,"கைஸ்.. இந்த சிலையை பற்றிய ஆராச்சியை துடங்குவதற்கு முன் ஐ வாண்ட் டு நோ அபிடேட் அபௌட் டுடேஸ்  வர்க்.."

உடனே தனுசுஜன்,"சார்.. இன்னைக்கு இருநூற்றி ஐம்பது அடி தோண்டி இருக்கிறோம்.. நமக்கு இந்த சிதிலமடைந்த சிலை மட்டும் கிடைத்திருந்தாலும் ஐ திங்க் வீ ஆர் ட்ராவலிங் இன் தி ரைட் ட்ராக்..",என்றான்..

அவன் கூறுவதை கூரிய பார்வையுடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தவர் தன் கண்ணாடியை சரிசெய்தபடியே,"குட்..அநேகமா நாளைக்கு நமக்கு ஏதாவது க்ளூ கிடைக்கும்..சரி.. இந்த சிலையை எக்ஸாமின் பண்ணுங்க..சப்மிட் தி ரிபோர்ட்ஸ் வித் இன் டுநைட்..",என்று விட்டு தன் கூடாரத்திற்கு சென்றுவிட்டார்..

ஞ்சி இருந்த நால்வரும் அந்த சிலையை பார்வையிட தொடங்கினர்..

"சுஜன் அண்ணா..நான் இந்த சிலையிலிருந்து ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு பார்க்கிறான்....", என்ற எழில் அந்த சிலையை பார்வையிட ஆரம்பித்தான்..

"எழில்.. நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தேன் டா.. எனக்கு ஒன்னும் தட்டுப்படல.. அட்லீஸ்ட் இந்த சிலை சிதிலமடையாம இருந்திருந்தா நம்ம இந்த பூவோட பெயரையாவது கண்டு பிடிச்சிருக்கலாம்.."என்றான் யோசனையாக..

"ஹே.. இந்த பூவ நல்லா பாருங்களேன்..எனக்கென்னமோ இது அடுக்குப் பூ மாதிரி தெரியுது..",என்றாள் மயா..

"ஆமா..இந்த சிலையை திருப்பி போட்டு பார்ப்போம்..",என்ற எழில் சுஜனுடன் சேர்ந்து அதை திருப்பினான்..

அந்த சிலையின் பின்புறத்தை கண்டதும் அந்நால்வரின் முகமும் நான்கு வகையான பாவனையை காட்டியது..

ட்டி..

ஊட்டி மலை பியூட்டி உன் பேரு என்னமா..??

தன் அருகில் வாக்கிங் போய்க்கொண்டிருந்த பெண்ணை பார்த்து பாடினார் தாத்தா..

அப்பெண்ணும் அவரை நோக்கி,

அப்படியே பின்னாடி பாரு தாத்தா அங்கே உன் மாமியா..

"என் மாமியார் தான் நாற்பது வருஷத்துக்கு முன்னாடியே போய் சேர்ந்துட்டாங்களே..", என்று அசால்ட்டாக சொன்னவர் பின்னால் திரும்பினார்..

ஒரு நிமிடம் அதிர்ந்து போனார் அங்கு பாட்டியுடன் வந்த போலீஸை கண்டு..

அவர் முழிப்பதை கண்ட ஜிஷிதா (தாத்தாவோட கேர்ள் பிரெண்ட்),"தோஸ்த் அவங்க என் அம்மா..பயப்படாதே..",என்று அவர் காதில் கிசுகிசுத்தாள்..

அவளைச் செல்லமாக முறைத்தவர், அவள் அன்னையின் புறம் திரும்பி வணக்கம் என்றுவிட்டு பாட்டியிடம்,"க்ரியா எங்கே..??",என்று கேட்டார்..

"அவ ஒரு போன் வந்துச்சுனு பேச போயிருக்கா.. இப்போ வந்திருவா.." ,என்றார்..

"ஹெலோ..யாருங்க..??"

அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ வேகவேகமாக எதிர்முனை குறிப்பிட்ட இடத்தை நோக்கி முன்னேறினான் க்ரியா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.