(Reading time: 12 - 24 minutes)

"ண்ணா.. ஒரு இருநூறு அடி வரைக்கும் கொஞ்சம் வெரசா தோண்டுங்க.. அதுக்கப்புறம் கொஞ்சம் மெதுவா தோண்டனும்.." ,என்றாள் தியா ஜே சி பி ஓட்டுனரிடம்..

ஒரு நூற்றி ஐம்பது அடி கடந்திருக்கும் "நங்"கென்று ஒரு ஒலி குழியிலிருந்து வெளிவந்தது..

"அண்ணா.. ட்ரில் பண்றதை நிறுத்துங்க..",சத்தமிட்ட தனுசுஜன் குழிக்குள் இறங்கினான் தியாவுடன்..

"தியா.. அந்த மன்வாரியை (Trowel) யூஸ் பண்ணி தோண்டு டா...."

"இந்தாங்கண்ணா நீங்க ஒரு சைட் தோண்டுங்க.... நான் ஒரு சைடு தொண்டறேன்..", என்று ஒரு இடத்தில் தோண்ட ஆரம்பித்தாள்..

இரண்டு மூன்று முறை மண்ணை அப்புறப்படுத்தியவுடன் வெளிவர ஆரம்பித்தது அந்தச் சிறு பாறையிலான சிலை.. பாறை சிறிதென்பதால் ஒரு பாரந்துாக்கியை (Crane) பயன்படுத்தி குழியை விட்டு வெளியெடுத்தனர் அதனை..

கண்டெடுத்து சிறு பறையாயினும் மகிழ்ச்சி கடலில் ஒரு நிமிடம் துள்ளத்தான் செய்தது தியாவின் மனம்.. சுற்றியிருப்போரின் தீவிர பாவனைகளை கண்டு அதனை அடக்கியவள் அந்தப் பாறையை நெருங்கினாள்..

பாறையை ஒரு தீவிரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஆச்சார்யா அதனை சுத்தம் செய்ய உத்தர விட்டார் நீரைக் கொண்டு..

வான்மழை மேகம் வீட்டு நிலம் நோக்கி பாய்ந்து அந்த பாறையை நனைப்பது போல் இருந்தது அந்த காட்சி.. பாறையில் அப்பியிருந்த மண், நீர் பட்டு அழிந்து அதன் வரி வடிவத்தை உலகோருக்கு காண்பித்தது அழகாய்..

பூவின் இதழில் படிந்த நீர் துளிகளை போல் காட்சியளித்தது பாறையில் வடிக்கப்பட்ட பூவின் சிதிலமடைந்த சிற்பம்..

சிலை சிதைந்து கிடந்ததால் அது என்ன மலர் என்பதை அவர்களால் சரியாக கணிக்க முடியவில்லை..

நேரமும் நான்கிற்கு மேலானதால் அனைவரும் மதிய உணவிற்கு பிறகு வேலையை தொடங்கச் சொல்லி உத்தரவிட்டார் ஆச்சார்யர்..

பின்தங்கிய தியா மட்டும் சிறிது நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் அந்த சிலையை..  எதையோ கண்டுகொண்ட மகிழ்ச்சியுடன் அவளது நீல விழிகள் ஜொலிக்க தொடங்கியது..

தியா தங்களுடன் வராதது கண்டு அவளை கூட்டிச் செல்ல அங்கு வந்தனர் எழிலும் மயாவும்..

"தியா.. வா இந்த மொட்டை வெய்யிலுள்ள என்ன பண்ற...??",என்றாள் மயா சற்று அதட்டலாக..

வழக்கம் போல் மயாவின் அதட்டலை காதில் வாங்காதவள் முன்னே செல்ல ஆரம்பித்தாள்..

இதெல்லாம் உனக்கு தேவையா என்பது போல் லுக் விட்ட எலி,"ஏன் மயா இப்படி பன்னு வாங்கற..?? அவ நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்கறா.. அப்புறம் ஏன்டா அவ மேல இவ்ளோ அக்கறையா இருக்க..?? ", சிறிது எரிச்சலாகவும் சிறிது மென்மையாகவும்..

அவனை நோக்கி மென்மையாக புன்னகைத்தவள்,"போகலாம் வா எழில்.. எனக்கு பசிக்குது...",பாவமாக..

இது என்றும் நடப்பதால் அவனும் அவளுடன் நடக்க ஆரம்பித்தான் மௌனமாக அவளுணர்வை சற்று புரிந்தவனாய்..

ழில் மயாவின் வாழ்வில் உதித்த வசந்தம்.. வேரறுத்த மரமாக இருந்தவளை அன்பை ஊற்றி உயிர்பெற செய்தவன்..

எழில் மயா உண்ணாமல் இருந்த பொழுதெல்லாம் உரிமையோடு உணவை ஊட்டி அவளது அன்னையாகினான்.. அவள்  வெற்றியின் பொழுது தோளணைத்து அவள் வெற்றியில் பங்குபெற்று அவளது தந்தையானான்.. குடுமி பிடி சண்டையிட்டு எதிரியுமாகிப் போவான் பல சமயங்களில்..

 அவன் அவளுக்கு நடை கற்றுக் கொடுத்தவன் அல்ல இருந்தும் அவளுக்கான வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுத்த ஆசான்..

எல்லாவற்றிற்கும் மேலாய் நட்பு என்னும் கருவறையில் மயாவை சுமந்து கொண்டிருப்பவன் இன்று வரை...

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க

காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..

ரிபீட் மோடில் க்யூவில் நின்றுகொண்டிருந்த எலி பாடிக்கொண்டிருந்தான் மதிய உணவை கண்டு..

"ஏய் எலி பலியாக போற நீ..",என்றாள் மயா பத்தாவது முறையாக அவனது கதறலைக் (பாடலை) கேட்டு..

"வை விக்ஸ்.. சங்கவியை மிஸ் பண்ணிட்டேனா..??",என்றான் சீரியசாக..

"என்னது சங்கவியா",என்று ஒரு நிமிடம் முழித்தவள் அவன் சங்கதியை தான் திரித்திருக்கிறான் என்பதை உணர்ந்து அவனை நோக்கி நறநறவென பல்லைக் கடித்துக் கொண்டே அவனை வழக்கம்போல் கொட்ட கை ஓங்கினாள்..

மயாவின் கை அவனை அடிக்க அந்தரத்தில் பறக்க ஆரம்பிக்கும் முன் எலி,"ஐயோ.. ஆத்தாடியாத்தா என் தலையில இடி விழுந்துருச்சு",என்று கதற ஆரம்பித்தான்..

அவன் கதறுவதை கண்டு பயந்தவள்,"என்னடா ஆச்சு..??",என்றாள் பதட்டத்துடன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.