(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 01 - தேவி

vizhikalile kadhal vizha

து ஒரு இனிய இளவேனிற் காலம்.. அப்படின்னு சொல்ல ஆசை தான்  .. ஆனால் பருவ நிலை மாறுபாடுகளால் இளவேனிற் காலத்திற்கு முந்தைய பருவம்... கோடையின் அடுத்த பருவம் என்றும் சொல்லலாம் .

வெளி ஆட்களுக்குதான் அது என்ன பருவம் என்று தெரியாத நிலை.. நாம் இருக்கும் இடத்தில் உள்ளவர்களுக்கோ கோடை, வசந்தம், பனி காலம் எல்லாமே அதுதான்..

ஏன் என்றால் அது ஒரு கலை கல்லூரி .. ஆண், பெண் இரு பாலரும் சேர்ந்து படிக்கும் கல்லூரி.. உள்ளே ஒரே கொண்டாட்டமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் மாணவ, மாணவிகள் கும்பல் கும்பலாக நின்று இருந்தனர்.

நூறாண்டுகள் புகழ் பெற்ற கல்லூரி என்பதால் கட்டடங்கள் அதிகம்  இருந்தாலும் நிறைய மரங்களும் இருந்தது. ஒவ்வொரு மரத்தின் அடியிலும் சிறு சிறு மாணவர் கும்பல் இருந்தது. இவர்கள் கல்லூரியின் சிறப்பம்சம் என்ன என்றால் ஒவ்வொரு மரத்தடியிலும் இரண்டு மூன்று சிமெண்ட் பெஞ்சுகள் உண்டு.. கல்லூரி தாளாளர் மாணவ மணிகள் ஓய்வு நேரங்களில் அங்கே அமர்ந்து படிக்க என்று ஏற்பாடு செய்தது. ஆனால் அது என்னவோ அந்த இடத்தை அரட்டை அரங்க இருக்கை எனதான் மாணவர்கள் பாவித்தனர். அதோடு dining ஹால் ஆகவும் உபயோகித்தனர்.

கலை கல்லூரி என்பதால் இன்ஜினியரிங் கல்லூரி போன்ற கட்டு திட்டங்கள் கிடையாது. ஆனால் எந்த ஒரு விளையாட்டுத்தனமும் எல்லை மீறாத அளவு கண்டிப்பு இங்கே உண்டு.

அந்த செமஸ்டர் முடிந்து விடுமுறைக்கு பின் இன்றுதான் திறப்பதால், நீண்ட நாள் பிரிந்த தங்கள் நண்பர்களை பார்த்த உற்சாகம் .. ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தது. தங்கள் விடுமுறை கழிந்த விதம் பற்றி அவரவர் அனுபவங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொண்டு இருந்தனர்.

மாணவ பருவத்திலேயும் அதிக குதூகலம் கொடுக்க கூடியது இந்த கல்லூரி பருவம் தான். எந்த கவலையும், கட்டுப்பாடும் இல்லாத இடம் கல்லூரி..

அன்று தான் first இயர் மாணவர்களும் முதல் நாள் கல்லூரிக்கு வருகின்றனர். அதனால் ராக்கிங் செய்வதற்கு தயாராக சீனியர் மாணவர்களும், ராகிங் பயத்தோடு ஆவலும் கலந்த ஜூனியர் மாணவர்களும் உள்ளே வந்து கொண்டு இருந்தனர்.

இப்போது முதல் மரத்தடியில் என்ன நடக்கின்றது என்று பார்க்கலாம்..

ரத்தின் அடியில் ஒரு கும்பல் மாணவ , மாணவிகள் அமர்ந்து இருக்க, ஒரு ஜூனியர் மாணவி எதிரில் நின்று இருந்தாள்.. அந்த பெண்ணை பார்த்தால் சற்று பயந்த மாதிரி தெரிகிறதோ..

ஆமாம் பயம் தான்.. ஏன் என்றால் அங்கே சீனியர் மாணவர்கள் கேட்ட கேள்விகள் அப்படி.. என்ன என்று பார்ப்போம்

அந்த பெண்ணின் பெயர், என்ன department என்ற விவரம் எல்லாம் கேட்டு விட்டு

“உனக்கு என்ன தெரியும்?”

“நான் பாட்டு பாடுவேன்..”

“நீ பேசினாலே குரல் சளி பிடிச்ச மாதிரி இருக்கு... இதுலே பாட்டு பாடினா விளங்கிடுமே...”

“இல்லை அண்ணா.. நான் பத்து வருஷம் பாட்டு கத்துட்டு இருக்கேன்..”

“ஹ்ம்ம்.. சரி பாடு “ என,

அந்த பெண்ணோ தொண்டை எல்லாம் சரி செய்து கச்சேரி செய்யும் வாக்கில் ரெடி ஆகி

“அலைபாயுதே கண்ணா “ என்று ஆரம்பிக்க,

அந்த கும்பலோ

“ஹேய்.. ஸ்டாப் .. ஸ்டாப் .. இங்கே யாரும் உன் கச்சேரி கேட்க போறதில்ல..நீ என்ன பண்ற என்றால் இந்த அலைபாயுதே எல்லாம் இல்லாமல் , அழகா ரஜினி முருகன் கன் கண “ அப்படி ன்னு பாடுற.. அதிலும் VTV கணேஷ்  வாய்ஸ் லே... “

அந்த பெண்ணோ ஞே என்று விழித்தாள். பின் விட மாட்டார்கள் என்று உணர்ந்து கஷ்டப்பட்டு தன் குயில் குரலை காக்கா குரலாக மாற்றி பாடினாள்.

முதல் நாலு லைன் பாடி முடிச்சதும்

“சரி.. சரி..நிறுத்து.. காது கொடுத்து கேட்க முடியல.. பொழச்சி போ .. “ என்றவன் பின்னால் திரும்பி ஒரு பிரிஎண்ட்ஷிப் பேண்ட் எடுத்து அந்த கும்பலில் அமர்ந்து இருந்த தங்கள் தோழியின் கையில் கொடுத்தான்.

“ஹோய் .. சோடாபுட்டி.. இந்த பேண்ட் ஆ அந்த பொண்ணு கட்டி விடு “

“போடா குரங்கு.. “ என்று தன் நண்பனை திட்டி விட்டு,

“இங்கே பாரும்மா... இந்த பேண்ட் கட்டிட்டா.. இந்த காலேஜ் மாணவ கண்மணியா உன்ன ஏத்துக்கிட்டோம் நு அர்த்தம்.. ஒரு வாரம் வரைக்கும் குளிச்சுட்டு சுத்த பத்தமா காலேஜ்க்கு வரும்போது கட்டிக்கிட்டு வா.. அப்போ தான் உன்னை மத்த கும்பல் ராக் பண்ண மாட்டாங்க.. காலேஜ் id மறந்தாலும் பரவா இல்லை.. இத கட்ட மறந்த, உன்னை செஞ்சிடுவாங்க பார்த்து பதவிசா இருந்துக்கோ  “ என்று கூறியவன் கையோடு ஒரு கடலை மிட்டாய் பாக்கெட் உம கொடுத்தார்கள்..

“ஹ்ம்ம்.. கிளம்பு.. “ என,

அந்த பெண்ணோ “அண்ணா “ என,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.