(Reading time: 9 - 17 minutes)

ன்னொரு மாணவன் “இப்போ நீ என்ன செய்யனும்னா அதோ கேட் கிட்டே ஒரு புல்லெட் வண்டி வருது பாரு.. அந்த வண்டிக்காரன் கிட்டே போய் “ஐ லவ் யு “ சொல்லணும்..”

திடுக்கிட்டு விழித்தவள் “ஹலோ .. யாருன்னு தெரியாதவர் கிட்டே போய் அப்படி எல்லாம் சொல்ல முடியாது.. “

“அப்படினா வண்டி சாவி கிடையாது “

“ப்ளீஸ்.. இது எல்லாம் ரொம்ப சென்சிடிவ்.. நான் சொன்னத சீரியஸ் எடுத்துக்கிட்டு அவர் எதாவது move பண்ணினாருன்னா எல்லொர்க்கும் கஷ்டம்..”

“அவர் அப்படி எல்லாம் கிடையாது.. இன்னிக்கு சொல்றத ராக்கிங்ன்னு புரிஞ்சிப்பார் “

“ப்ளீஸ் வேண்டாமே.. “

“சரி அப்படினா ... “ஐ லவ் யுவர் புல்லெட் “ என்று சொல்லிட்டு வா.. “

சற்று யோசித்தவள் சரி என்று விட்டு நேராக அந்த புல்லெட் வரும் வழியில் நிறுத்தி

“ஐ லவ் யுவர் “ என்று சொல்லும்போது இந்த கும்பல் ஓஓஓ வென்று கத்தி விட , புல்லேட்டில் வந்தவன் காதில் ஐ லவ் மட்டும் விழுந்தது.

அவன் திகைத்து எதிரில் நின்று இருந்தவளை பார்க்க அவளின் முகம் முழுதும் ஹெல்மெட் மறைத்து இருக்க, இரு விழிகள் மட்டும் அவன் கண்ணுக்கு தெரிந்தது.

மீன் போன்ற அந்த நீண்ட விழிகளில் பட்டும் படாமலும் தீட்டி இருந்த அஞ்சனம் அவள் கண்களின் அழகை எடுத்துக் காட்டியது.

சற்று திகைத்து விழித்தவன் “சாரி.. என்ன சொன்னீங்க ?” என்று அவன் வினவ,

அவளோ மீண்டும் “ஐ லவ் யுவர் புல்லெட் “ என்ற வார்த்தை வரும்போது மீண்டும் அந்த கும்பல் கத்தினர்.

இப்போது அவன் அவர்களின் விளையாட்டை புரிந்து கொண்டு , புல்லெட் ஐ நிறுத்தி விட்டு அந்த மரத்தடியை நோக்கி வந்தவன் , எல்லோரையும் பார்த்து விட்டு கையை நீட்ட, அவன் கையில் ஸ்கூட்டி சாவி வைத்தனர்.

ஸ்கூட்டி பெண்ணோ ஆச்சர்யாமாகி நின்றவள் இவன் தான் மாணவர் தலைவன் போல் இருக்கிறது என்று எண்ணியபடி

“தேங்க்ஸ் “ என்று சொல்லிவிட்டு பசங்களை பார்த்து “பாய் friends “ என்றாள்.

செல்லும் அவளை பார்த்தவன் , அந்த கும்பலை தன் கூரிய விழிகளால் ஒரு முறை பார்க்க

பசங்கள் எல்லோரும் “சாரி “ என்றனர்.

“ஹ்ம்ம் .. “ என்று மட்டும் சொல்லி விட்டு சென்று விட்டான்.

அவன் செல்வதை பார்த்த கும்பலில் இருந்த பெண்கள் “ஹ்ம்ம்.. இங்கே மட்டும் நம்ம வேலை எதுவும் நடக்க மாட்டேன்குது.. “ என்று பெருமூச்சு விட்டனர்.

அவர்களின் பெருமூச்சிற்கு காரணம் முகம் மறைத்த ஹெல்மேட்டிலும் அவனின் personality தான்.

ஹாய் friends... கதை ஆரம்பம் பிடிச்சு இருக்கானு சொல்லுங்க.. ஹீரோ, ஹீரோயின் பேர் எல்லாம அடுத்த வாரம் கொடுக்கிறேன்.. உங்கள் கமெண்ட்ஸ் தெரிந்து கொள்ள காத்து இருக்கிறேன்..

தொடரும்!

Episode # 02

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.