(Reading time: 16 - 31 minutes)

03. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

ரம்மியமான அந்த சிறிய மாலின், கடைகளை அளந்து, வண்ண விளக்குகளை இரசித்து, கைநிறைய வாங்கிய பொருட்களை ஏழெட்டு பிக்ஷாப்பரில் திணித்து,கடைசியாக இருவரும் ஒரு ஐஸ்க்கிரீம் பார்லரில் வந்து அமர்ந்தனர். தன் முன்னே வைக்கப்பட்ட கப்பை ஸ்பூனால் அலைந்து கொண்டிருந்தாள் தர்ஷினி. இரண்டு கப் ஐஸ்கிரீமை காலி செய்துவிட்டு, மூன்றாவது கப்பில் ஸ்பூனை வைத்தவாரே வெளியே வேடிக்கைப்பார்த்தாள் காவ்யா.

பத்துக்கு ஏழு, ஹூம் இது ஆறு, ச்ச, இது ரொம்ப மோசம் தேரவேதேராது..” – காவ்யா

“ஸ்ஸ்.. காவீ!”- தர்ஷினி

“கொஞ்சம் இவன பாரு மச்சி, அவனும்.. அவன் கலரிங்க் ஹேரும்.., ‘நீ கன்றாவியா இருக்கடானு’ ஒருத்தியும் இவன பார்த்து சொல்லமாட்டாளா? இந்த மால் முழுக்க இப்படி வத்தலும் தொத்தலுமா தான் இருக்கு… ஒரு பீஸ் கூட தேராது, எனக்கு மைல்டு டவுட் மச்சி, நம்ம கண்ணுக்கு மட்டும் தான் இப்படி தெரியுறாங்களா இல்ல உண்மையிலேயே ஸ்மார்டான பசங்களே இல்லயா?”

பொறுமையை இழந்த தர்ஷினி, “காவீ, இந்த மார்க் போடுறத கொஞ்சம் ஸ்டாப் பண்றீயா!”

“ஏன்? அம்பத்தூர் வரைக்கும் வந்தாச்சு, சரி போனா போகுது, உன் தாடி வச்ச, ஸாரி சின்ன தாடி வச்ச தேவதாசையும், அவன் போட்டக் குட்டியையும் போய் பார்த்திடலாம்னா, நீ தான் வேண்டாம்னு சொன்ன,  பின்ன ஏன் இந்த மூட் அவுட்?”

“காவீ, பர்சேஸ் முடிஞ்சிட்டா வீட்டுக்கு கிளம்பலாம்!”

“போலாம் போலாம் இன்னும் முக்கியமான ஐயிட்டம் ஒன்னு பாக்கியிருக்கு, நாளைக்கு டாடீ, மம்மீக்கு மேரேஜ் அனிவர்சரி, சோ இரண்டு பேருக்கும் ரிங்க் வாங்கனும்” என்றவாரே அவளை கடந்து சென்ற ஒருவனைப்பார்த்து “ம்ம், சீரோ” என்றாள் காவ்யா.அவளைக் கடந்து சென்றவன் திரும்பி வந்தான், ஆறடி உயரம் நல்ல நிறம் உயரத்திற்கு ஏற்ற பருமன், அழகாய் இருந்தான் ஆனால் அவன் நடையிலும் பார்வையிலும் கர்வம் அதிகமிருந்தது. காவ்யாவின் அருகே வந்தவன் உச்சி முதல் பாதம் வரை அவளை மேய்ந்துவிட்டு,  “ஐ வில் கிவ் 10 அவுட் ஆஃப் 10 ஃபார் யூ பேபி!” என்றான்,

காவ்யா தர்ஷினி இருவருமே அதிர்ந்தாலும், காவ்யா அடுத்த நோடியே சுதாகரித்துக்கொண்டாள். “மிஸ்டர், மைன்ட் யூவர் வேர்ட்ஸ்” என்றாள். இப்போது அவன் தன் கூலிங்க்கிளாசை கழட்டிவிட்டு நிதானமாக அவளைப்பார்த்தான், சிவப்பு நிற நீள ஸ்கர்ட்டும் அதற்கு ஏற்ற வெண்மையும் சிவப்பு நிறம் மிகுந்த டாப்ஸும் அணிந்திருந்தாள். அடுக்கடுக்காய் வெட்டப்பட்ட கூந்தலை பரவ விட்டிருந்தாள். அவனது அளவெடுக்கும் பார்வை காவ்யாவிற்கு எரிச்சலைத்தந்தது, அவள் முகத்தை சுழித்தாள். அதற்குள் சற்று தொலைவில் நின்ற இளைஞர் கூட்டம் அவனை, “ரிஷி!” என்று அழைக்க ஒரு நொடி திரும்பி பார்த்துவிட்டு, குனிந்து காவ்யாவின் அருகே வந்து, “என்னப் பார்த்து சீரோன்னு சொன்ன இல்ல, நான் சீரோவா, ஹீரோவான்னு சீக்கிரமா தெரிஞ்சுப்ப மிஸ் காவ்யா!” என்று அவளைப்பார்த்து கண்ணடித்துவிட்டு விறுவிறுவென கூட்டத்தில் கலந்து மறைந்தான். அவன் சென்றதும் தோழியர் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,  தர்ஷினி காவ்யாவிடம், “காவீ, யாரிவன்? உன்ன எப்படி இவனுக்கு தெரியும்?” என்றாள்

தெரியாது என்னும் விதமாய் தோளை குலுக்கிவிட்டு, “இவன எனக்கு தெரியாது, பட் இதிலயிருந்து நாம இரண்டு பேரும் ஃபேமஸ் ஃபிகர்னு மட்டும் புரியுது!”

“நாம, இரண்டு பேர் இல்ல, நீ மட்டும் தான், உனக்கு நிறைய தரவ வார்ன் பண்ணிட்டேன் இப்படி பப்ளிக்கா மார்க் போடாதன்னு பாத்தியா சைகிள் கேப்ல வந்து சைட் அடிச்சுட்டு போயிட்டான்,  இருந்தாலும்அவனுக்கு இப்படி ஒரு கேவலம் வேண்டாம், அவன பார்த்து ஏன்டி சீரோன்னு சொன்ன, பாக்க நல்லாதானே இருக்கான்? அட்லீஸ்ட் ஒரு ஐஞ்சு ஆறு போட்டிருந்தாக்கூட உன்ன விட்டிருப்பான்!”

“சான்சே இல்ல, மூஞ்சி முழுக்க திமிர், ஒரு மார்க்கூட இவனுக்கு கிடையாது!” என்றாள் காவ்யா. அலைபேசி சிணுங்கியது, அதன் திரையைப்பார்த்தவள் கண்களை விரித்தாள், “மச்சீ, ஹிட்லர் தான் கூப்பிடுறாரு, நாம இங்க வந்தத, எந்த எருமையோ போட்டு கொடுத்திட்டுன்னு நினைக்கேன், சமாளிப்போம்” என்றவாரே அழைப்பை ஏற்றாள்.

“ஹாய், டாடீ!”

“காவ்யா, எங்க இருக்க?”

“அம்பத்தூர்ல டாடீ!”

“அங்க ஏன் போன?”

“நம்ம தர்ஷீ இல்ல, அவ ஜப்பானீஸ் லேங்க்வேஜ் கிளாஸ்க்கு ஃபார்ம் வாங்கனும்னு சொன்னா, அதான் இரண்டு பேரும் வந்தோம்” என்றவாரே தர்ஷினியைப் பார்த்து கண் சிமிட்டினாள். காவ்யாவின் திருட்டுத்தனத்தை தர்ஷினியைப்போன்று சம்பந்தமும் நன்றாக அறிவார்.

“ஜப்பானீஸ் லேங்க்வேஜ் கிளாஸ் அடையாரிலே இருக்கு, அதுக்கு எதுக்கு நீங்க அம்பத்தூர் போனீங்க?”

“யூ ஆர் ஆசம் டாட்” என்றவாரே முடியல என்பதுபோல் முகத்தை வைத்து தொடர்ந்தாள், “இங்க கூட அத தான் சொன்னாங்க இவங்களோட ஒரு பிராஞ்ச் அடையார்ல இருக்கு ஸொ, அங்கேயே ஜாயின் பன்னசொன்னாங்க!” என்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.