(Reading time: 16 - 31 minutes)

காவ்யாவின் குளிர் பேச்சில் சம்பந்தம் மனம் குளிர்ந்து போனார், “சரி, காவ்யா, ஒரு முக்கியமான வேலை, நீ அம்பத்தூர்ல இருக்கிறதால நம்ம அட்வகேட் சிவா வீட்டுக்கு போ, அவரு ஒருஇம்பார்ட்டென்ட் டாக்குமென்ட் தருவாரு, அத வாங்கிட்டு வந்திடு அப்படியே அவங்க அம்மாவையும், அவரையும் நாளைக்கு நம்ம வீட்டுக்கு இன்வைட் பன்னிடு, அப்புறம் கொஞ்சம் மரியாதையா பேசு.., காவ்யா பீ கேர்ஃபுல் அது முக்கியமான டாக்குமென்ட் அதனால தான் உன்னை நேரடியா போக சொல்றேன் உன் விளையாட்டுத்தனத்த இதில் காமிக்காத புரியுதா?”

“சுயர் டாடி!” என்றவாரே அழைப்பைத் துண்டித்தவள் “ஹப்பா, முடியல, வெளியூர் போனாலும், டார்கெட் மட்டும் என் மேல தான்” என்றாள்

“அங்கிள் என்ன சொல்றாங்க காவீ!”

“உன் காட்டில மழைன்னு சொன்னாருடீ!”

“ஏய், என்ன சொன்னாங்க ஒழுங்கா சொல்லு!”

“திரு. சிவா அவர்களின் இல்லத்திற்கு சென்று, அவர் கொடுக்கும் முக்கியமான கோப்புகளை நேர்முகமாக நம் கைகளில் வாங்குமாறு பணித்தார், போதுமா, இல்லை இன்னும் ஏதேனும் விபரம் வேண்டுமா?” – என்றாள் குறும்பாக.

ஒரு நொடி தர்ஷினியின் முகம் மலர்ந்து வாடியது. அந்த சிறுமாற்றத்தையும், அவளது மனதையும் நன்று உணர்ந்த காவ்யா, “தர்ஷூ, இது என்ன ரியாக்ஷன்? வாழ்கையில எல்லா சந்தர்பத்தையும் எதிர்கொள்ள தெரியனும்னு நீ தான் எங்கிட்ட சொல்லிருக்க, நீயே இப்ப அப்செட் ஆகுற, நாம அங்க போறோம், அந்த தாடி வச்ச கேடியோட, குட்டி பார்பிய பார்த்திட்டு, அப்படியே அவங்க வொய்ஃபையும் பார்த்திட்டு, அவங்க முன்னாடி, அட்வகேட் சார் எப்படி பிகேவ் பன்றாருன்னு பார்த்திட்டு,  மொத்தத்தில் அது நல்லதொரு குடும்பமா இல்லையான்னு செக் செஞ்சிரலாம் ஓ.கே?”

“ம்ம்..ஓ.கே!” என்று புன்னகையுடன் தலையாட்டினாள் அவள்.

“குட், அப்போ டாடீ, மம்மிக்கு ரிங்க் வாங்கிட்டு போயிடலாம்!”

“காவீ, ஃபர்ஸ்ட் டைம் அவங்க வீட்டுக்கு போறோம், சாரோட மிசஸ்க்கும், அந்த குட்டி பெண்ணுக்கும் கிஃப்ட் வாங்கனும்!”

இந்த நிகழ்வை தர்ஷினி இயல்பாக எடுத்துகொள்வது காவ்யாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது..”நல்ல ஐடியா, நீ அவங்களுக்கு கிஃப்ட் வாங்கு, நான் போய் ரிங்க் வாங்குறேன்” என்றாள் புன்னகையுடன். இருவரும்  பிரிந்து எதிர் எதிர் திசையில் சென்றனர்.

சிவப்பும், ஆரஞ்சும் பினைந்த வண்ணத்தில் சில்க் காட்டன் புடவை ஒன்றை எடுத்தாள், ஏழெட்டு முறை அதைப் பிரித்துப்பார்த்து தன் மனக் கற்பனையில் ஒருவகித்த பெண்ணுக்கு அந்த புடவையை உடுத்திப்பார்த்தவள், நிறைவுடன் அதை எடுத்தாள், விஷ்ணுவிற்கு ஒரு பார்பி பொம்மையையும், கூடவே பிக்கிபேங்க் எனப்படும் ஒரு வெண்பன்றி உருவம் பொறிக்கப்பட்ட  சிறிய உண்டியலையும் வாங்கினாள். அவளது மென்மையான மனது அடுத்து சிவாவை பற்றி யோசித்தது அந்த எண்ணத்திற்கு அணைபோட முயன்றவள் வாங்கியவற்றிற்கு, பணம் செலுத்த சென்றாள்.

காவ்யா, அரைமணி நேரம், ஆர அமர யோசித்து, பின் அழகான இரு ப்ளாட்டினம் மோதிரத்தில் மீரா, சம்பந்தம் என் இருவரும் பெயரையும் பொறித்து வாங்கினாள்.தர்ஷினி இருக்கும் கடையை அழைபேசியில் விசாரித்துவிட்டு தன் மற்ற கைப்பைகளுடன் விரைவாக படிகளில் குனிந்து, தாவி இறங்கினாள். அவளை விட பத்து மடங்கு வேகத்தில் ஒருவன் அவளுக்கு எதிராக படிகளில் ஏறினான். இருவரும் எதிர்கொண்டு நெருங்கும் நேரம்  ஒருவரை ஒருவர் இடித்து விட கூடாதென  விலக நினைத்தாலும், விதி வலியது அவ்வளவு எளிதாக அவர்களை விட்டு விட வில்லை.

காவ்யா நகரும் கணப் பொழுதில் அவளது தோளோடும், மார்போடும் இடித்து மோதி நின்றான், கால்கள் பிண்ணி கீழே விழப்போனவளின் கரத்தை அழுத்திப்பிடித்து அவள் விழாது நிறுத்தினான். அந்த நொடியே, அவளது மென்மையான உடலில் மோதியதை உணர்ந்தவன், அறியாது தான் செய்த தவறை நினைத்து  உள்ளங்கையால் தன் நெற்றியில் பளார் பளாரென அவனே அரைந்து கொண்டான், காவ்யா விழாது பிடிக்கும் பொருட்டு தன் கையிலிருந்த பாலித்தின் கவரை கீழே நழுவ விட்டிருந்தான், அந்த விபத்தில் அதிர்ந்து காவ்யாவும் தன் கைப்பை முழுவதையும் சிதற விட்டாள். அவன் இடித்த தொணியில் அதிர்ந்தது ஒரு புறம், அவள் மென்மையான பெண்மை காயப்பட்டதின் வலி ஒரு புறம், வேதனையில் விழிகள் துளிர்த்து கண்ணீர் வந்தது. அதனோடு அளவிட முடியாத கோபமும் வந்தது; காவ்யாவின் முகத்தைப்பார்த்தவன் ஏதோ சொல்ல அவன் வாயெடுத்தான், இவள் விட்டால் தானே, அடுத்த நொடி பாய்ந்து அவன் சட்டைக்காலரை பிடித்தாள்.

“பொறுக்கி, இராஸ்கல், உன் கண்ண பிடரியிலயா வச்சிருக்க?” அதே அதீத கோபத்துடன்,  நீயல்லாம் அக்கா, தங்ககையோட பிறக்கல, உன்னல்லாம்”, அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரைவிட்டாள், ஏற்கவனவே, தெரியாமற் செய்த தவறில் நிலை குலைந்து நின்றவன், அவள் தன்னைக் கீழான நிலையில் தள்ளி, அக்கா, தங்கையோடு பிறந்திருந்தால் இவ்வளவு ஒழுக்கக் கேடான செயலை செய்திருக்கமாட்டான், என காவ்யா சொல்லியது இன்னும் அதிகமாக அவனை கோபப்படுத்தியது, அடுத்த கணம் அவள் விட்ட பேயரையில் அவன் கோபம் கட்டுக்கடங்காது போனது, வந்து விழுந்த அரையின் வேகத்தில், அவளை விலாசும் எண்ணத்தில், அதீத கோபத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு தன் வலக்கையை ஓங்கினான், காவ்யா ஒரு அடி பின்னால் போனாள், ஆனால் உயர்ந்த அவன் கை தானாக இறங்கியது, பெண்கள் மீது வன்முறையைக் கையாளும் குணம் கொண்டவன் அல்லன் அவன். அவன் தாய் அவனுக்கு போதிருந்த நல்ல பண்புகள் அவனை கட்டிப்போட்டது, உயர்த்திய கையின் விரல்களை சுருக்கி, இறக்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.