(Reading time: 16 - 31 minutes)

காவ்யாவின் காரை பின் தொடர்ந்து தன் பொலிரியோ காரை செலுத்தினான் ரிஷி. காவ்யாவின் வேகத்திற்கு ஈடு கொடுப்பதற்கு ரிஷியே கொஞ்சம் தடுமாறத்தான் செய்தான். அவனுடனிருந்த அவனது நண்பர்கள்,

“டேய் ரிஷி, உன் ஆளு உன்னையே மிஞ்சிடுவா போல!”  

“அதெல்லாம் ஒன்னுமில்லடா, அவளுக்கு முன்னாடி போனா அவளை எப்படி சைட் அடிக்க முடியும்? அதனாலதான் இவன் மேடம் காரை முந்தாம போறான்!” என்று ஒருவருக்கு ஒருவர் அவனை கேலி செய்தனர்.

ரிஷியின் கவனம் முழுதும் காவ்யாவின் காரின் மீதே இருந்தது, அவள் எங்கே போகிறாள் என்ற ஆவல் ஒருபுறம், இவ்வளவு வேகத்தை அவளிடம் எதிர்பார்க்காத அதிர்ச்சி ஒருபுறம் அவனை பேச்சிழக்க செய்தது, எனினும் திறமையும், அதை விட பத்து மடங்கு திமிரும், எந்த விசயத்திலும் தோல்வியை தழுவாத அவன் குணமும் அவள் காரை முந்த அவனைத் தூண்டியது. காவ்யாவின் கார் சிக்னலைக்கடந்தது, ஆனால் ரிஷி சிக்னலில் மாட்டிகொள்ள, எரிச்சலுடன் ஸ்டியரிங்க்கை குத்தினான்.

“டேய், சிக்னல் விழுந்ததுக்கு, ஏன்டா, ஸ்டியரிங்க்கை உடைக்க? இப்ப நீ பார்ட்டிக்கு வண்டியை விடுறீயா இல்லையா?” அவனது நண்பர்களின் குரலுக்கு எரிச்சலுடன் காரைத் திருப்பினான். இனிமேல் அவளைப்பிடிப்பது கடினமென அவனுக்கு தெரியும்.

ரிஷி, பெயருக்கும் செயலுக்கும் பொருத்தமில்லாதவன். செல்வ செழிப்பில் வளர்ந்ததன் பொருட்டு அதிக திமிரும், கர்வமும் உடையவன், அவனுடைய பணத்திற்காக அவனைச்சுற்றும் கூட்டத்தை நண்பர்களென நினைப்பவன். தந்தையின் தொழிலை நிர்வகித்தாலும், அவனுக்கென்று ஒரு பாதை வகுத்து வாழ்பவன். வாரம் முழுவதும், தொழிலே கண்ணாகவும் வார இறுதியில், குடியும் கூத்துமாக இருப்பவன். பெண்கள் விசயத்தில் தன் நண்பர்கள் போல் அல்லாது ஒழுக்கமானவன், அதற்கு அவனுடைய வீட்டு பெரியோர்களே காரணமெனலாம். அவனுடைய இந்த போக்கும், ஒழுக்கமற்ற நண்பர்கள் பற்றி எத்தனை முறை அவன் தந்தை எடுத்துக்கூரியும் அதைப்பற்றி எள் அளவும் கவலைகொள்ளாதவன். கர்வமும், திமிரும் நினைத்ததை அடைய நினைக்கும் குணமும் கொண்ட அவன் தான் காவ்யாவை தன் உயிருக்கு இணையாக நினைப்பவன். கபடமில்லாத அவள் அழகில் மனதை தொலைத்து அவளை ஆளத்துடிப்பவன்.

கிழக்கு கடற்கரை சாலையிலமைந்த ஒரு நவீன பப்பின் முன், காரை நிறுத்தினான், அவனது பர்சை திறந்து ஒரு கார்டை தன் நண்பர்களின் கையில் கொடுத்துவிட்டு, “நீங்க போங்கடா, நான் அப்புறமா வர்றேன்!” என்றான். கையில் பணம் வந்தால் போதுமென நினைத்த அவன் நண்பர்கள் அவனை விடுத்து பப்பிற்குள் நுழைந்தனர். ரிஷி காரைத்திருப்பிக்கொண்டு வந்த திசையில் சென்றான்.

ரு அழகான சிறிய பங்க்ளாவின் முன் காரை நிறுத்தினாள் காவ்யா, அவளது வலது பக்கமாய் வந்து நின்ற பணியாளிடம், ஏதோ கூற அவன் கதவை திறந்தான், அந்த அழகிய சிறிய பங்க்ளாவை சுற்றியும் தோட்டம் பரவியிருந்தது, சிறிய மின் கம்பங்களில் ஒளிர்ந்த மின் விளக்குகள் மாலையின் தொடக்கத்தை மறைமுகமாக உணர்த்தியது. அந்த மாலை பொழுது தந்த மயக்கமும், களைப்பும் தோழியர் இருவர் முகத்தில் தெரிந்தாலும் அதை விட அந்த வீட்டின் அமைதி தந்த மெல்லிய பயமும், யார் யாரை சந்திக்கப்போகிறோமோ? என்ற எண்ணமும் மேலிட, காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினர். தர்ஷினி தன் கைக்குட்டையில் முகத்தை துடைத்து, கைப்பையிலிருந்து எடுத்த காஜலை கண்களில் பர்ப்பி முகத்தை காரின் கண்ணாடியில் பார்த்து திருப்தி பட்டுக்கொண்டு இறங்கினாள், அவளது செய்கையை இரசித்த காவ்யா, “மச்சீ, உனக்கு மாப்பிள்ளை பார்க்க போனால் கூட இவ்வளவு டைம் எடுக்க மாட்ட்!’ என்றாள்.

சிவாவின் இல்லத்தினற்கு வாங்கிய பொருட்களை கையில் எடுத்துக்கொண்டு, அதை சரிபார்த்து திருப்தி பட்டு நிமிர்ந்த தர்ஷினியோ, “உன்ன பெண் பார்க்க வரும்போது நீ என்னென்ன பண்ண போறன்னு நான் பாக்கத்தானே போறேன்! இப்ப உள்ள போலாமா?”

“போகாட்டி, நீ விடவா போற?” என்று புன்னகைத்துவிட்டு தர்ஷினியின் கைகளைப் பற்றி மெதுவாக உள்ளே சென்றாள் காவ்யா. இருவர் இதயமும் வேகமாக துடிக்க… இருவரும் முன் நடந்தனர். வெளிக்கதவு திறந்து வீட்டின் அழிக்கதவு தாழிடப்பட்டிருந்தது, தர்ஷினியின் கண்கள் அலைப்பாய்ந்தது, காவ்யாவின் கைகள் உயர்ந்து அழைப்பு மணியை அழுத்தியது. சற்று நேரத்திற்கு பின், கீழிருந்து வந்த குரலைக்கேட்டு இருவரும் குனிந்தனர், அங்கே ஒரு குட்டி டெட்டிபியரை கட்டி அணைத்துக்கொண்டு நின்றிருந்தாள் விஷ்ணு, இருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.

“ஹாய், விஷ்ணு குட்டி, இங்க வாங்க!” என்று அழைத்தாள் தர்ஷினி

இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்துவிட்டு புன்னகைத்தாள் அவள், “நீங்க மிஸ்ஸா, என்ன ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகப்போறீங்களா?” என்றாள் பயத்துடன்.

அதைப்பார்த்து காவ்யா, “இல்லடா, குட்டி, நாங்க இரண்டு பேரும் உன் கூட விளையாட வந்திருக்கோம், நீ சமத்தா போய் அம்மாவ கூப்பிடு!” என்றாள்.

ஒரு நோடி யோசித்தவள், கையிலிருந்த பொம்மையுடன் இரு தோழிகளையும் திரும்பி திரும்பி பார்த்துவிட்டு உள்ளே ஓடினாள்.. சொல்லவொன்ன எதிர்பார்ப்புகளுடன் அந்த வீட்டின் அழகை இரசித்தவாரே, எண்ணங்கள் அலைபாய நின்றாள் தர்ஷினி..  

ஃபிரன்ஸ், சாரி இப்பவும் சஸ்பென்ஸ உடைக்கல, நாமும் காவ்யா , தர்ஷினியோட வெயிட் பன்னலாம், விஷ்ணு யார கூட்டிட்டு வரப்போறான்னு பாக்க!

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1120}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.