(Reading time: 9 - 17 minutes)

மொத்த கும்பலும் “ஹோய்.. இந்த அண்ணா படம் எல்லாம் இங்கே ஓட்டக் கூடாது.. ஒன்லி சீனியர் , ஜூனியர்ச தான் “

“அப்போ அந்த அக்காவ எல்லாம் அக்கா சொல்லலாமா “

“நோ.. நீ என்னை அக்கா ன்னு கூப்பிட்டா , உன் கிளாஸ் மேட்டும் அக்கா என்பான்.. நாங்க எத்தனை நாளுக்கு எங்க கூட படிக்கிற மூஞ்சியவே சைட் அடிக்கிறது.. புதுசா வர பசங்களையும் சைட் அடிக்கநும் லே.. அதுனாலே காலேஜ் லே படிக்கிற எல்லாரும் சீனியர் & ஜூனியர் மட்டும் தான் “

“சரிங்க சீனியர்... பேண்ட் எல்லாம் ஓகே.. ஆனால் கடலை மிட்டாய்  ஏன் ?”

“புதுசா ஒருத்தரை பார்க்கும் போது ஸ்வீட் எடு கொண்டாடு .. கேள்விபட்டது இல்லையா?”

“அது டைரி மில்க் தானே.. கடலை மிட்டாய் கொடுக்கறீங்க “

“நம்ம காலேஜ் லே.. கடலை மிட்டாய் தான் டைரி மில்க்.. பழரசம் தான் மாசா.. கோலி சோடா தான் பெப்சி.. புரிஞ்சுதா..”

“புரிஞ்சுது சீனியர்.. “ என

“இப்போ நேரே போய் லெப்ட் சைடு காரிடார் லே.. நாலாவது ரூம் உன்னோட department.. போய் உன் செட் கூட joint அடிச்சுக்கோ “ என்று அனுப்பி வைத்தான் அந்த கும்பலின் தலைவன்.

என்ன என்றாலும் நம் மக்கள் மிகவும் நல்லவர்கள். ஒருவரை ஒரு கும்பல் மட்டுமே கலாயிப்பார்கள்.

ற்று தள்ளி இருந்த மரத்தின் கீழ் இருந்த கும்பலிடம் ஒரு பையன் சிக்கியிருக்க அவனையும் பாட சொன்னார்கள்.. அவனோ உஷாராக

“ஏப்ரல் மே இலே பசுமை இல்லே காஞ்சி போச்சுடா

இந்த ஊரும் பிடிக்கல உறவும் பிடிக்கலை... போர் போர் டா..

இது தேவையா அட போங்கையா... ஜூன் ஜூலை  ஆ

பட்டாம் பூச்சிகள் பறக்குது.. கன்னாமூசிகள் நடக்குது நடக்குது

பச்சை பசுமைகள் தெரியுது தெரியுது .. அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே”

என்று கர்ண கொடுர குரலில் பாட, அவனை ராக் செய்த கும்பலோ

“மச்சி.. நீ எங்கள் குடும்பம் டா.. நீ selected.. நீ கிளாஸ் கே போகாதே.. நேரா நம்ம மரத்தடியில் வந்து attendance போடு.. உன் attendance நாங்க கரெக்ட் பண்ணி தரோம் “ என்று கட்டி அணைத்து தங்களோடு அமர்த்திக் கொண்டனர்.

இதுதான் இந்த காலேஜ் ஸ்பெஷல்.. கேலி , கிண்டல் எல்லாம் இருந்தாலும் அத்து மீறல்கள் கிடையாது.. அதே சமயம் வாயால் வேறு சொன்னாலும், மனதால் சகோதரத் தன்மையோடு தான் நடப்பார்கள்.

தே போல் அங்கே அங்கே நடந்து கொண்டு இருக்க, first hour பெல் அடிக்க பத்து நிமிடங்கள் இருக்கும் போது வேகமாக ஒரு ஸ்கூட்டி பெப் அதிலும் பிங்க் கலர் ... ஒட்டிக் கொண்டு உள்ளே வந்தாள் ஒரு பெண். அவள் ஸ்கூட்டி டிசைன்இல் அங்கே அங்கே டோரா படமும், டெட்டி பியர் படமும் இருந்தது. யாருடா இந்த கிண்டர் கார்டன் டிக்கெட் என்று எண்ணி ஸ்கூட்டி விட்டு மேலே பார்க்க, அவள் ஹெல்மெட் போட்டு இருந்ததால் முகம் தெரியவில்லை..

அவள் ஸ்கூட்டியை நிறுத்திய சீனியர் மாணவன்,

“ஹலோ மேடம் ... எங்கே போறீங்க... ?”

“பார்கிங் ஏரியா விற்கு .. “

“முதலில் ராக்கிங் அட்டென்ட் பண்ணி விட்டு பிறகு பார்க்கிங் போ “

“ராகிங் ஆ .. நான் யார் தெரியுமா ?”

“நீ எவ்ளோ பெரிய அப்பா டக்கரா இருந்தாலும் first டே ராகிங் அட்டென்ட் பண்ணிட்டு தான் காலேஜ் உள்ளே போகணும்... “ என்று அவள் வண்டி சாவியை பிடுங்கி கையில் எடுத்துக் கொண்டான்.

வேறு வழி இல்லாமல் வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்தி விட்டு அவர்கள் இருப்பிடம் சென்றாள்.

அவள் ஹெல்மெட்டை முழுதாக கழட்டாமல் அந்த கண்ணாடி மட்டும் ஏற்றி விட்டு அவர்களிடம் பேச ஆரம்பித்தாள்.

“நான் என்ன செய்யணும் ?” என வினவ,

அவள் வண்டி சாவியை பிடுங்கியவன் “முதலில் குட் morning சொல்லு “

“குட் morning” என,

“குட் morning சீனியர்ச ன்னு சொல்லு “

“குட் morning சீனியர்ச “

“ஹ்ம்ம்.. ஏன் மகாராணி ஹெல்மெட் கழட்ட மாட்டீங்களோ “

“இல்லை சீனியர்.. நான் பெரிய மறதி மன்னார்சாமி .. ஹெல்மெட் கழட்டி எங்கியாவது வச்சேன் என்றால் மறந்து விடுவேன்.. அதுனாலே வண்டிலேர்ந்து இறங்கும்போது ஹெல்மெட் லாக்லே மாட்டிடுவேன்.. இப்போ நீங்க சாவி எடுத்துட்டதாலே என்னாலே ஒன்னும் பண்ண முடியாது “

“ஹ்ம்ம். .சரி.. சரி.. ஏதோ சொல்றே .. கேட்டுகரோம்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.