21. நிர்பயா - சகி

கடந்தக்கால வாழ்க்கை!அவளோடு வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் சுவை மிகுந்ததாகவே தோன்றியது.சின்னஞ்சிறு ஊடல்கள்,சீண்டல்கள்,போர்க்களத்தின் இறுதியில் அவள் காதோரம் தரும் இனிமையான முத்தங்கள்!இவன் எதிர்காலம் குறித்து உரைக்கும் சமயத்தில் அவளிடமிருந்து வெளிப்படும் பெண்மைக்கே உரிய தனித்துவ நாணம்!அவளது இனிமையான கண்டிப்பு!யாவற்றையும் தொலைத்துவிட்டு உழன்றுக் கொண்டிருந்தான் ஜோசப்.
"பயமா இருக்கு அம்மூ!"
"எதுக்குங்க?"
"மறுபடியும் நீ எனக்கு தூரமாயிட்டா?"
"அப்போ இப்போவே கல்யாணம் பண்ணிக்கோங்க!"
"ஏ..என்னடி?இப்படி சொல்லிட்ட?"
"ம்...வேற என்ன சொல்றது?"
"உன் வீட்டில உன் தாத்தா சண்டைக்கு வந்தா?"
".............."
"ஏன்டா கொஞ்ச நாள் காத்திருக்க மாட்டியான்னு சண்டை போட்டா?"-அவள் கலகலவென சிரித்தாள்.
"எதுக்கு சிரிக்கிற?"
"உங்களுக்கு என்னை கூட்டிட்டு போற உரிமையும் இல்லை,என்னை விட்டுவிலக தைரியமும் இல்லை!"
"இல்லை...எனக்கு உன்னை கூட்டிட்டு போற தைரியமும் இல்லை.உன்னை விட்டு விலகுற உரிமையும் இல்லை.-மனதில் ஒரு வித வலி பரவியது.அந்தப் புல்வெளியில் அப்படியே மண்டியிட்டான் ஜோசப்.மனதெல்லாம் வலித்தது!கண்ணீர் கண்களை குளமாக்க,தவித்துப்போனான் அவன்.
வாழ்வே சூனியமாய் மாறியது!!
"ம்கூம்..!"-பின்னால் இருந்து ஏதோ குரல் கேட்க,திரும்பினான் அவன்.
"என்ன ப்ரோ?ரொம்ப வேதனையில இருக்க போல?"-கர்வமாக ஒலித்தது கார்த்திக்கின் குரல்.
சற்று தாமதிக்காமல் எழுந்து அவனது சட்டையை இறுகப் பற்றினான் ஜோசப்.
"ஏ...ஏ..!கூல் ப்ரோ!"
"மரியாதையா போயிடு!இல்லை...உன்னை வெட்டி இங்கயே புதைத்திடுவேன்!"
"ஆ..!எங்கே வெட்டு!கம் ஆன்!"
"............"
"ஏ..உன் நிர்பயா உயிர் என் கையில!ஞாபகமிருக்கு தானே!அவ அசையுற ஒவ்வொரு அசைவிலும் மரணம் அவளை விழுங்க துரத்திட்டே இருக்கு!"
"நான் உயிரோட இருக்கிற வரைக்கும் என் நிர்பயா நிழலை கூட நீ நெருங்க முடியாது!"
"ஐயோ!அப்பாவியா இருக்கியே!உன் நிர்பயாக்கு முதல் மரண தூது அனுப்பியவன் நான் தான் ஞாபகமிருக்குல்ல?அன்னிக்கு ஒரு 2 நிமிஷம் லேட்டா வந்திருந்தா அவளை அங்கேயே கொன்றிருப்பேன்.அப்பறம் என்ன சொன்ன?நீ அவக்கூட இருக்கியா?ஏ...இனி கற்பனையில கூட அவ உன்னை ஏற்றுக்க மாட்டா!நீ விளையாடினது அவளோட தன்மானத்தோட ஞாபகமிருக்கட்டும்!"
"உனக்கு என்ன தான் வேணும்?ஏன் இப்படி பண்ற?"
"உன் நிர்பயாவுக்கு எனக்குமான பகை 8 வருடத்திற்கு முன்னாடி ஆரம்பமானது ப்ரோ!ஒருவேளை,அப்பபோதே அவ என்னை கல்யாணம் செய்திருந்தா,இந்நேரம் ஒரு மகாராணி மாதிரி அவளை வாழ வைத்திருப்பேன்.அவளோட எல்லா கஷ்டங்களையும் யாராலும் தீர்க்க முடிந்திருக்காது.ஆனால்,நான் அதை செய்து முடித்திருப்பேன்!அவளுக்காக எதையும் செய்ய தயாரா இருந்தேன்.ஆனா,அவ எப்போ என்னை வேணாம்னு தூக்கி எறிந்தாலோ அன்னிக்கே அவ வாழ்க்கை நரகமாக ஆரம்பித்தது.நீ அவ வாழ்க்கையில வந்த!நீங்க இரண்டுப் பேரும் ஒண்ணா இருக்கும் போது எனக்கு எப்படி எரித்ததுன்னு தெரியுமா உனக்கு?காதலாம் பொல்லாத காதல்..."
"ச்சீ..வாயை மூடு!என்னடா தெரியும் உனக்கு அந்தப் பந்தத்தைப் பற்றி?அவளுக்காக எதையும் செய்வேனா,நீ அவளை அடைய நினைத்திருக்க கூடாது!அவ மனசை அடைய நினைத்திருக்கணும்!ஆறுதலுக்காக ஏங்கிட்டு இருந்தவ மனசுல அன்பா நாலு வார்த்தை பதிந்திருந்தா,அவளோட காதல் இந்நேரம் உனக்கு சொந்தமாகி இருக்கும்!ஆமாடா!இனி நானும்,அவளும் சேர முடியாது தான்!என்னால,அவளோட நினைவுகளோடு வாழ முடியும்!உன்னால அவளோட மனசுல இருந்து எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னை பிரிக்க முடியாது!முடிந்தால் செய்துக்காட்டு!"
"அதிகமா பேசாதே!"
"கத்தாதே!இந்நேரம் உன் மேலே இருக்கிற கோபத்துக்கு உன்னை கொன்றிருக்கணும்!பொறுமையா இருக்க காரணம்,என்னால நிர்பயாவை பாதுகாக்க முடியும்!ஆனா,அவங்க அம்மாக்கு பாதுகாப்பு வழங்க முடியாது!அவங்களுக்கு அமைந்த காதலுக்கு தோற்று போனது!அவளால,அவங்க அம்மாவோட இழப்பை தாங்கிக்க முடியாது!"