(Reading time: 9 - 18 minutes)

"ம்பி!எதாவது சாப்பிட வாப்பா!"-பலமுறை கேட்டும் பலனில்லாமல் போனது.

"பசிக்கலைண்ணா!அப்பறம் சாப்பிடுறேன்!'

"என்னப்பா நீ?சரியா சாப்பிடுவதே இல்லை?உடம்பு என்ன ஆகும்?வாப்பா!"

"என்னை கொஞ்சம் தனியா விடுங்கண்ணா!கொஞ்ச நேரம் கழித்து நானே வரேன்!"-ஜோசப்பின் குரலில் தொனித்த துக்கம் அவரை மறுபேச்சு பேச விடாமல் நகர வைத்தது.

யாரும் இல்லாத தனிமையில் உழன்றவன்,மெல்ல எழுந்து அந்த அறைக்கு சென்றான்.அது அவனது அறையோடு பிணைக்கப்பட்ட மற்றொரு அறையாகும்!!அதில்,சுமார் ஆறடி உயரத்தில் கம்பீரமாக முகத்தில் அதீத அன்போடு தொங்கிக் கொண்டிருந்தது ஒரு பெண்மணியின் புகைப்படம்.ஆம்..!அவர் ஜோசப்பின் மாதா!!

அவர் முன்னால் சென்றவன் அப்படியே மண்டியிட்டான்.அவனுக்கு எல்லாம் அவர் தான்!மதங்கள் மீதும்,தெய்வத்தின் மீதும் ஈடுபாடு அற்றவன் அவன்!அவனுக்கு தெய்வீகம் எல்லாம் அவனது தாய் தான்!

"மா!பெரிய பாவம் பண்ணிட்டேன்மா!அவ என்னை விட்டு போகணும்னு அவளை ரொம்ப மோசமா பேசிட்டேன்!நான் அவளுக்காகவும்,அவ குடும்பத்துக்காகவும் தான் எல்லாம் செய்தேன்.கற்பனையில கூட இதுநாள் வரை அவளை தப்பா நான் பார்த்தது இல்லைம்மா!ரொம்ப வலிக்குது!என்னை மன்னிப்பியா?நீயும் என்னை வெறுத்துவிட மாட்டியே!"-அவனது வார்த்தைகள் இதயமிருப்போர் யாவரையும் கலங்க வைத்து விடும்.

"நான் போயிடுறேன்மா!எதுக்கு அவளால எனக்கும்,என்னால அவளுக்கும் வேதனை?நான் மும்பைக்கே போயிடுறேன்.ஆனா,ப்ளீஸ்...அவளை எப்படியாவது எல்லாத்தையும் மறக்க வைத்துவிடு!யாராவது நல்லவனை கல்யாணம் பண்ணி,அவன் கூடயாவது அவ சந்தோஷமா வாழட்டும்மா!என்னை எப்படியாவது அவ நினைவுகளில் இருந்து அழித்து விடு!"

"எட்வர்ட் கூட என்னை புரித்துக்கலை!அவன் வாழ்க்கை நல்லப்படியா இருக்கணும்!நான் எல்லாத்தையும் அவன் பெயரில் மாற்றி எழுதிடுறேன்!என் கூட உன்னை மட்டும் கூட்டிட்டுப் போறேன்!ப்ளீஸ்...நீயாவது என் கூட இரு!"

"என் வாழ்க்கையோட ரொம்ப பெரிய பொக்கிஷத்தை தூக்கி போட்டுட்டேன்!இனி அது எனக்கு கிடைக்காது!நான் எப்படி என் வாழ்க்கையை ஆரம்பித்தேனோ!அதே தனிமையை நோக்கி மறுபடியும் போறேன்!சாகலாம் மாட்டேன்!செய்த பாவத்தோட பலனை அனுபவிக்க இன்னும் நிறைய காலம் வாழ வேண்டி இருக்கு!என்னை மன்னித்துவிடு!"-அதுநாள் வரை நிமிர்ந்திருந்த அவனது சிரம் அன்று தனது கர்ம வினையால் தாழவே செய்தது.

தொடரும்

Episode # 20

Episode # 22

{kunena_discuss:1030}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.