(Reading time: 9 - 18 minutes)

"னா,ஒரு விஷயம் தெரிந்துக்கொள்!உன்னோட ஆணவமே உனக்கு எமனா மாறும் காலம் வரும்!எப்போதும் ஒருத்தன் மட்டுமே உச்சத்துல இருப்பான்னு நினைக்காதே!உன் நிழலே உனக்கு விரோதியா மாறும்!என் நிர்பயா திரும்பி வருவாளோ இல்லையோ!இதுக்கு மேலே நீ அதிக நாள் வாழ முடியாது!ஜாக்கிரதை!"

-அவனது குரலில் மிதந்த குரோதம் கேட்பவரின் மனதில் நிச்சயம் அச்சம் விளைவிக்காமல் இராது!!

ன்றைய இரவு மனதில் பெரும் சலனங்கள் பரவிக் கொண்டிருப்பதை உணர்ந்தார் சங்கரன்.

"அவங்களுக்கு அமைந்த காதலுக்கு தோற்று போச்சு!"-ஜோசப்பின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் நெஞ்சை ஆழமாக தைத்தன.

ஆம்...!அந்த இருவரின் உரையாடலை காரிலுள் இருந்து மூன்றாவது ஆளாக சங்கரனும் கேட்டுக் கொண்டிருந்தார்.

சங்கரன் தன் பக்கம் இருப்பதால்,நம்பகமானவர் என்ற எண்ணம் கார்த்திக்கிற்கு!!

மனம் திக்கென்று ஆனது!!

"உங்களுக்காக எதையும் இழப்பேன்.ஆனா,எதுக்காகவும் உங்களை இழக்குற தைரியம் எனக்கில்லை!"-பல வருடங்களுக்கு முன்,பல்லவி உரைத்தது நினைவிற்கு வந்தது.

"இவனை வேண்டாம்னு விட்டுட்டு வருவதுன்னா என் பொண்ணா திரும்பி வா!இல்லை,யாருக்காக என்னை தூக்கி எறிந்தாயோ கடைசி வரைக்கும் அவன் கூடவே இருந்துவிடு!"

"என்னால இவரை விட்டுக்கொடுக்க முடியாதுப்பா!"-தயங்காமல் அவர் உரைத்த மறுமொழியும் நினைவில் எட்டியது.

அவளுக்காக என்ன செய்தேன்??என்று சிந்திக்கையில் பல்லவிக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் மட்டுமே நினைவில் எட்டின.

நேற்று முளைத்தவனுக்கு இருக்கும் அக்கறையும் எனக்கில்லையே!!!

சிந்தித்தப்படி அந்த அறைக்கதவை திறந்தார்.

அமைதியாக தரையில் படுத்தப்படி உறங்கி கொண்டிருந்தார் அவர்.நிர்பயாவின் பிறப்பிலிருந்து அவரது ஆசனமெல்லாம் தரையில் தான் அமைந்தது!!

பெருமூச்சை வாங்கினார் அவர்.அமைதியாக சென்று மெத்தையில் அமர்ந்தார்.நீண்ட நேரமாக தன் சகத்தின் முகத்தையே உற்றுப் பார்த்தார்.தன்னிச்சையாக அவரது இதழ் மலர்ந்தது,குரூரத்தால் அல்ல!அது ஒரு வித மந்தகாசப்புன்னகை!!

"இன்னும் அப்படியே தான் இருக்கா!"-என்றது அவர் மனம்.

எவ்வளவு எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும்??அனைத்தையும் ஏன் சிதைத்தேன்??மனம் குறுகுறுத்தது.

வெளியே பனி வெகுவாக பொழிந்துக் கொண்டிருந்தது.

குளிரின் மிகுதியால் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டார் பல்லவி.சங்கரனுக்கு ஏசி இல்லாமல் உறக்கம் வராது.எனினும்,அன்று அன்று அதனுக்கு அவர் எந்தப் பணியையும் கொடுக்காமல் அணைத்துவிட்டார்.இன்னும் அவரது பார்வை தன் மனையாளிடமே சரண் புகுந்திருந்தது.என்ன நினைத்தாரோ,எழுந்து அவரருகே வந்தவர்,அவரது உறக்கம் கலையாதப்படி அவரை தூக்கினார்.சிறு குழந்தையை போல உறக்கத்திலே கிடந்தவரை மெல்ல மெத்தையில் உறங்க வைத்தார்.தனது போர்வையின் ஒரு சகத்தையே அவருக்கு போர்த்தி விட்டார்.நீண்ட காலங்களுக்கு பின் அந்த முகத்திலும் அவ்வளவு நிம்மதி!!அவர் சற்றே சாய்ந்தப்படி போர்வையை சீராக்கும் சமயம்,பல்லவியின் கரங்கள் தான் அறியாமலே தன்னவரை வளைத்தன.திடுக்கிட்டு போய் அவரின் முகத்தினை பார்த்தார் சங்கர்.அவரின் முகத்தில் தான் அவ்வளவு ஏக்கம்!அன்பிற்கான ஏக்கம்!குனிந்து அவரது நெற்றியில் தன் இதழ் பதித்தார்.யுகங்களுக்கு பின் கிடைத்த காதல்!!ஒருவன் தன் காதலை இழந்து முதிர்ந்த ஒரு காதலை இணைத்து வைத்துள்ளான்.

அதிகாலையில் 4 மணிக்கே எழும் வழக்கம் கொண்டவர்,அன்று 6 மணியை கடந்தும் எழவில்லை.மனதில் ஏதோ உறுத்த,கண் விழித்து கடிகாரத்தை பார்த்தார்.மணி ஆறு!!திக்கென்றது மனம்.சட்டென எழ முயற்சித்தவரை,எழ விடாமல் தடையாய் அமைந்தது ஒரு வலியக்கரம்!!திடுக்கிட்டப்படி சூழலை உணர முயற்சித்தார்.

என்ன நடந்தது?நான் எவ்வாறு இங்கு வந்தேன்?அவருக்கு ஒன்றும் புரியவில்லை...தன்னை சுற்றி இருக்கும் கணவனது கரம் அவருக்கு அச்சமூட்டவே செய்தது.அவர் எழுந்துவிட்டால்??அவ்வளவு தான்..!மெல்ல அக்கரத்தின் பிடியில் இருந்து தன்னை விடுவிக்க முயன்றார் பலனில்லை!!மீண்டும் முயற்சித்தார் பயனில்லை!!அவரது அடுத்த முயற்சியில் சங்கரன் தனது பிடியினை இறுக்கிக் கொண்டார்.மூச்சே நின்றுப் போனது பல்லவிக்கு!!இமைக்காமல் தன்னவரது முகத்தையே பார்த்தார்.அதில்,என்றுமிருக்கும் இறுக்கம் அன்றில்லை.பல ஆண்டுகளுக்கு முன் தன் மனதினை வென்ற அதே முகம்!!சற்றும் மாறவில்லை.சிலையாகிப் போனார்.அச்சிறையிலிருந்து தன்னை விடுவிக்க அவர் மனம் விழைய மறுத்தது.ஆனாலும் விடுவித்தாக வேண்டும்!!இல்லையேல்,அங்கு உறங்கி கொண்டிருப்பவர் விழித்தால் பிரளயம் தான் என்றது அவர் மனம்.

மீண்டும் முயற்சித்தார்!நீண்ட போராட்டத்திற்கு பின் விடுதலை கிட்டியது.இதுதான் சமயம் என்று எழுந்தார்.சங்கரனின் கரம் பட்ட இடம்,நன்றாக சிவந்துப் போயிருந்தது.

சில நொடிகள் எதையோ சிந்தித்தவர்,பின்,அவசர அவசரமாக எழுந்து சென்றார்.அவர் சென்றதும் தனதிரு கண்களை திறந்துப் பார்த்தார் சங்கர்.முகத்தில் ஒரு வித கள்ளநகை!!மீண்டும் திரும்பி படுத்து போர்த்திக் கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.